>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 30 ஜூலை, 2020

    உங்களுக்கான ஒரு சவால்... கண்டுபிடியுங்கள்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!

    ----------------------------------------------------
    சிரிக்க மட்டுமே...!
    ----------------------------------------------------
    தினேஷ் : ஒரு சின்ன முள் கால்ல குத்திடுச்சு. என்ன செய்யுறது?
    பாலா : பாத்து பத்திரமா எடுத்து, திருப்பி கடிகாரத்திலேயே மாட்டிரு! இல்லைன்னா மணி பாக்க முடியாது!
    தினேஷ் : 😁😁
    ----------------------------------------------------
    மனைவி : உங்கள பாத்துக்கிட்டே இருக்கணும் போல இருக்கு....
    கணவன் : சனி பார்வை தொடரும்னு ஜோசியர் சொன்னது சரியாதான் போச்சு...
    மனைவி : 😏😏
    ----------------------------------------------------
    ஆசிரியர் : நரகாசுரனை கொன்றது யார்?
    மாணவன் : அதை போலீஸ் பாத்துக்குவாங்க... நமக்கெதுக்கு சார் அந்த வம்பு.
    ஆசிரியர் : 😩😩
    ----------------------------------------------------
    முடிந்தால் கண்டுபிடியுங்கள்...!
    ----------------------------------------------------
    1. டு த் கு ம் ன தி ர் ப

    2. கோ தி ல் ற வு

    3. ம் ப ஆ ர ம் ட

    4. ம் டு தா வி யா மை ன ட் ளை

    5. மு க ழி ள் றை வ

    விடை :

    👉 குடும்பத்தினர்

    👉 திறவுகோல்

    👉 ஆடம்பரம்

    👉 விளையாட்டு மைதானம்

    👉 வழிமுறைகள்

    ----------------------------------------------------
    படித்ததில் பிடித்தது...!
    ----------------------------------------------------
    சிங்கம், ஓநாய் மற்றும் நரி மூன்றும் சேர்ந்து காட்டிற்கு வேட்டைக்கு சென்றது. அப்போது வேட்டையில் ஒரு கொழுத்த மான் கிடைத்தது.

    சிங்கம் ஓநாயை அழைத்து அந்த மானை பங்கு பிரிக்கச் சொன்னது. ஓநாயும் மூன்று சம பங்காக பிரித்தது.

    இதை பார்த்து கொண்டிருந்த சிங்கம், காட்டு ராஜா நான், எனக்கு ஓநாயும், நரியும் சமமா? எனக்கு மரியாதை இல்லையா? இவைகள் இரண்டிற்கும் சம பங்கா? என்று நினைத்துக்கொண்டு திடீரென ஓநாயை அறைந்தது.

    உடனே ஓநாய் மயங்கி விழுந்து விட்டது.

    பிறகு சிங்கம், நரியை அழைத்து பங்கு பிரிக்கச் சொன்னது.

    நரியும் அமைதியாக மானுடைய காது ஒன்றை மட்டும் தனக்கு எடுத்துக்கொண்டு, மீதியை சிங்கம் பக்கமாக தள்ளி விட்டது.

    சிங்கம் ஆச்சரியமாகி... நரியே, எப்படி உனக்கு இவ்வளவு அமைதியும், மரியாதையும் வந்தது? என்று கேட்டது.

    நரி பணிவாக, அதோ அங்கே மயங்கி கிடக்கின்ற ஓநாயிடம் இருந்து கற்றுக்கொண்டேன், என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டது.

    நீதி : தகாத நட்பு கூடாது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக