Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 30 ஜூலை, 2020

மூடர்களும் முட்டாள் குருவும்

தஞ்சையை அடுத்த நஞ்சையன்பட்டி என்ற ஒரு ஊர் இருந்தது. அவ்வூரில் - முட்டாள், மூடன், மட்டி, மடையன், பேயன், என்று ஐந்துபேர்கள் நெருங்கிய நண்பர்கள் ஆவர். இந்த ஐந்து பேருக்கும் படிப்பறிவு கொஞ்சம் கூட இல்லை. பள்ளிக்கூடம் சென்றதில்லை.

சுய அறிவும் இல்லாதவர்கள். மற்றவர்கள் கூறும் அறிவுரையையும் கேட்க மாட்டார்கள் தாங்கள் செய்வதுதான் சரி என்று கூறுவார்கள். இவர்களுக்கு எந்த வேலையும் தெரியாது. எந்த வேலையும் செய்யாத சோம்பேறிகள்.

 இவர்களுக்கு ஏற்றார் போலத்தான் அவர்களின் பெயரும் இருக்கும். பொதுவாக இவர்களுக்கு அறிவும் கிடையாது. உலக அனுபவமும் இல்லை. இவர்களுக்கு ஒன்றுமே செய்யத்தெரியாது என்பதால் வயிறு சும்மா இருக்குமா வயிறு பசியினால் வாடும் போதெல்லாம் கை நீட்டி ஏதாவது கேட்டு சாப்பிட முடிந்ததே தவிர வயிறார சாப்பிட முடியாமல் இருத்தனர்.

 யாராவது வீட்டில் போய் உணவுக் கேட்டால் உடம்பை இப்படி வளர்த்து வைத்திருக்கிறீர்களே? எங்காவது கூலி வேலை செய்து பிழைத்துக் கொள்ள கூடாதா என ஏளனமாக கூறுவார்கள். ஊரிலுள்ள எல்லோரும் இவர்களை ஏளனமாகவும், கிண்டலாகவும் பேசியதினால் சொந்த ஊரை விட்டு வெளியூருக்கு சென்றார்கள்.

  முட்டாளுக்கு ஒரு யோசனை தோன்றியது. நாம் ஐந்து பேர்களும் ஒரே இடத்திற்குப் போனால் வேலையும் கிடைக்காது, உணவும் கிடைக்காது. நாம் எல்லோரும் ஒரு குருநாதரைத் தேடி கண்டு பிடித்து சீடர்களாகி விட்டால் நமக்கு எந்த க்டமும் வராது என்றான்.

நண்பர் நால்வருக்கும் ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் மூடன் அதனால் நமக்கு என்ன லாபம் கிடைக்கும் என்றான். நாம் எல்லோரும் ஒரு குரு தேவருடன் சாமியார்கள் போன்று சென்றால் நம் காலில் விழுந்து கும்பிட்டு மரியாதையோடு நடந்து வயிராற உணவும் அளிப்பார்கள் என்றான் முட்டாள். இது சரி என்று மற்ற நான்கு பேர்களும் மகிழ்ந்தனர்.

அயலூருக்கு சென்று சாமியாரான பரமார்த்த குருவின் மடத்தைப் பார்த்தனர். அங்கு சென்ற ஐவரும் தங்களின் நிலையைக் கூறி சீடர்களாக ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டனர். பரமார்த்த குரு தன்னிடம் வந்த மூடர்களுக்கு சற்றும் சளைக்காத முட்டாள் குருவாகும்.

இந்த வயதான காலத்தில் தனியாக வீடு வீடாகச் போய் சாப்பிடுவது கஷ்டம் என்று நினைத்து. சீடர்களாக ஏற்றுக் கொண்டால் இவர்களை வைத்து நாம் நிம்மதியாக உணவு உண்டு உறங்கி காலத்தைக் கழித்து விடலாம் என்று நினைத்து மூடர்களான ஐந்து சீடர்களையும் ஏற்றுக்கொண்டார் பரமார்த்த குருனாதர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக