Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 27 மே, 2020

மகனின் கேள்வி... தந்தையின் பதில்... இறுதியில் நடந்தது என்ன? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

மகன், தந்தை உறவு... - படித்ததில் பிடித்தது...!!

மகன் : அப்பா நான் ஒரு கேள்வி கேட்கவா?
தந்தை : ம்ம்ம்... கேளுடா...
மகன் : 1 மணி நேரத்திற்கு எவ்வளவு சம்பாதிப்பீங்க?
தந்தை : அது உனக்கு தேவையில்லாத விஷயம்... நீ எதுக்கு இதெல்லாம் கேக்குற?
மகன் : சும்மா தெரிஞ்சுக்கத்தான்... சொல்லுங்கப்பா...
தந்தை : உனக்கு தெரிஞ்சே ஆகணும்னா சொல்றேன்... மணிக்கு சராசரியா 100 ரூபாய் சம்பாதிப்பேன்...
மகன் : ஓ!!! (தலைகுனிந்தவாறே)... அப்பா நான் அதுல 50 ரூபாய் எடுத்துக்கட்டுமா? தந்தைக்கு கோபம் வந்தது...
தந்தை : நீ இவ்ளோ பணம் கேக்குறது ஒரு நாய் பொம்மையை வாங்கி விளையாடத்தானே?? ஒழுங்கா போய் படுத்து தூங்கு... நான் இங்க உங்களுக்காக நாய் போல உழைக்குறேன்...
(அந்த சின்னப்பையன் அமைதியா அவன் படுக்கைக்கு சென்று படுத்துக்கொண்டான்.. தந்தை மகனின் கேள்விகளை எண்ணி மிகுந்த கோபம் அடைந்திருந்தார்.. 1 மணி நேரம் கழித்து சாந்தம் அடைந்து யோசித்தார் மகன் ஏன் இப்படி கேள்வி கேட்டான் என்று?... ஒருவேளை அவனுக்கு நிஜமாகவே ஏதோ அவசிய தேவை இருந்தால் என்ன செய்வதென்று முடிவுக்கு வந்து மகனிடம் சென்றார்...)
தந்தை : தூங்கிட்டியாடா?
மகன் : இல்லப்பா, முழிச்சுக்கிட்டுதான் இருக்கேன்..


தந்தை : நான் உன்கிட்ட ரொம்ப கோபமா நடந்துக்கிட்டேன்... நாள் பூரா வேலை செஞ்சதுல இருந்த கோபத்துல திட்டிட்டேன்... இந்தா நீ கேட்ட 50 ரூபாய்... அந்த சிறுவன் புன்னகையுடன் படுக்கையில் இருந்து எழுந்தான்...
மகன் : ரொம்ப தேங்க்ஸ் ப்பா...
அப்புறம் அந்த பணத்தை எடுத்து தலையணை அடியில் வைக்க போகும்போது அங்கு ஏற்கனவே சில ரூபாய்கள் இருந்தன.. அதை கண்ட தந்தை மறுபடியும் கோபமடைந்தார். அந்த சிறுவன் மெதுவாக பணத்தை எண்ணி சரி பார்த்தான்... பிறகு அவன் தந்தையை பார்த்தான்...
தந்தை : உனக்கு எதுக்கு இவ்வளவு பணம்.?.. ஏற்கனவே இவ்வளவு சேர்த்து வெச்சி இருக்கியே...
மகன் : ஏன்னா... தேவையான பணம் என்கிட்ட இல்ல... இப்போ இருக்கு... கேளுங்கப்பா... இப்போ என்கிட்டே 100 ரூபாய் இருக்கு... இதை நீங்களே வெச்சிக்கோங்க... இப்போ நான் உங்களோட 1 மணி நேரத்தை வாங்கிக்கலாமா? நாளைக்கு 1 மணி நேரம் முன்னாடியே வீட்டுக்கு வாங்க... நான் உங்கக்கூட இரவு உணவு சாப்பிட விரும்புகிறேன்...

அந்த தந்தை உடைந்து போய்விட்டார்... சிறுவனின் தோள்மேல் கைகளை போட்டுக்கொண்டார்... தன் மகனிடம் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக