Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 27 மே, 2020

வாழ்க்கை பாடம்.. சிந்திக்க வைக்கும் குட்டி கதை - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

சிரிப்பதற்கான நேரம்...!

பாபு : எனக்கு டென்னிஸ் விளையாட்டை பத்தி எல்லாமே தெரியும்... நீ வேணும்னா ஏதாவது கேள்வி கேட்டு பாரு...
ராமு : டென்னிஸ் நெட்-ல எத்தனை ஓட்டை இருக்கும்?
பாபு : 😏😏
-----------------------------------------------------------------------
தகுதி - படித்ததில் பிடித்தது...!!

ஒரு தந்தை தனது இறுதி காலத்தில் மகனை அழைத்து சொன்னார், மகனே, இது உனது பூட்டனின் (தாத்தாவின் தந்தை) கைக்கடிகாரம்.

200 வருடங்கள் பழைமை வாய்ந்தது, நான் இதனை உனக்கு தருவதற்கு முன்னால் நீ கடைவீதிக்கு சென்று கைக்கடிகார கடையில் நான் இதனை விற்கப்போகிறேன் எவ்வளவு விலை கொடுப்பீர்கள்? என்று கேட்டுப்பார் என்றார்.

அவன் போய் கேட்டுவிட்டு தந்தையிடம், இது பழையது என்பதால் 5 டாலர்கள் மட்டுமே தர முடியும் என்கின்றனர், என்றான்.

தந்தை பழைய பொருட்கள் விற்கும் கடைக்குப்போய் கேட்டுப்பார் என்றார். அவன் போய் கேட்டுவிட்டு, தந்தையிடம் இதற்கு 5000 டாலர்கள் தர முடியும் என்கின்றனர், என்றான்.

தந்தை இதனை ஆரளநரஅ கொண்டு சென்று விலையை கேட்டுப்பார் என்றார்... அவன் போய் கேட்டுவிட்டு தந்தையிடம், நான் அங்கு போன போது, அவர்கள் அதனை பரிசோதனைக்குட்படுத்த ஒருவரை வரவழைத்து, பரிசோதித்துவிட்டு, என்னிடம் இதற்கான பெறுமதி ஒரு மில்லியன் டாலர்கள் என்கின்றனர், என்றான்...


தந்தை மகனை பார்த்து, மகனே!

சரியான இடம் தான், உனது அந்தஸ்தை சரியாக மதிப்பிடும். எனவே, பிழையான இடத்தில் நீ உன்னை நிறுத்திவிட்டு, உன்னை மதிக்கவில்லை என்று நீ கோபப்படுவதில் அர்த்தம் இல்லை என்றார்.

'உன்னுடைய மரியாதையை அறிந்தவனே உன்னை கண்ணியப்படுத்துவான்..."

'உனக்கு தகுதி இல்லாத இடத்தில் நீ இருக்காதே..." இதனை வாழ்க்கையின் பாடமாக எடுத்துக்கொள்...

மரியாதை இல்லாத இடத்தில் ஒரு நிமிடம் கூட செலவழிக்காதீர்கள்.
-----------------------------------------------------------------------
கோபம்.. வார்த்தை...!!

எத்தனை கோபத்திலும் வார்த்தைகளை விட்டுவிடாதீர்கள்...
அடிகளைவிட வார்த்தைகள் தரும் வலி அதிகம்...
பிறகு எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும்
அதனுடைய காயம் என்றுமே மறையாது...!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக