Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 27 மே, 2020

2-ம் வீட்டில் குரு இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

நவகிரகங்களில் பெருமை பெற்ற ஒரே கிரகம் பிரஹஸ்பதி என்று அழைக்கப்படும் குருபகவான்.

தனத்திற்கும், புத்திர பாக்கியத்திற்கும் அதிபதி குருபகவான். நம் ஜாதகத்தில் குரு பலமாக இருந்தால்தான் இந்த இரண்டும் தங்குதடையின்றி கிடைக்கும்.

குரு இருக்கும் இடத்தை விட, பார்க்கும் இடத்திற்கு விருத்தி அளிப்பார் என்ற கூற்றின்படி, இவரது பார்வை நல்ல இடத்தில் அமைந்தால் எல்லா அம்சங்களும் தேடிவரும்.

ஒரு மனிதனின் நற்குணங்களுக்கும், நீதி வழுவா தன்மைக்கும், பிறருக்கு போதனை செய்யும் நிலைக்கும், உயர் பதவிகளுக்கும் குரு பகவான் காரகனாகிறார்.

லக்னத்திற்கு 2-ம் இடத்தில் குரு நின்றால் அந்த ஜாதகக்காரருக்கு துன்பங்கள் விலகி நன்மை உண்டாகும்.

2-ல் குரு இருந்தால் என்ன பலன்?

👉 பொருட்சேர்க்கை உடையவர்கள்.

👉 கல்வி, வேள்விகளில் சிறந்து விளங்கக்கூடியவர்கள்.

👉 தாராள தன வரவு கொண்டவர்கள்.

👉 பேச்சாற்றல் உடையவர்கள்.

👉 மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை அமையும்.

👉 நல்ல வருமானம் உடையவர்கள்.

👉 சாதுர்யமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

👉 கலைகளில் விருப்பம் உடையவர்கள்.

👉 கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.

👉 அரசு தொடர்பான காரியங்களின் மூலம் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக