Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 20 மே, 2020

தோல்வி ஏற்படுவது எதற்கான எச்சரிக்கை தெரியுமா? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

சிரிக்க சிரிக்க சிரிப்பு..!!

ஆசிரியர் : யாருடா அது...? நான் எழுதும்போது 'கழுதை... கழுதை"ன்னு கூப்பிட்டது?
மாணவன் : அது மொபைல் ரிங்டோன் சார்!
ஆசிரியர் : 😠😠
-----------------------------------------------------------------------
தொண்டன் 1 : 'தலைவர் பொதுக்குழுவுக்கு ஏன் பக்கெட்டுல தண்ணியோட போறாரு?"
தொண்டன் 2 : 'இன்னைக்கு நிறைய பிரச்சனையை அலசி ஆராய வேண்டியிருக்காம்!"
தொண்டன் 1 : 😝😝
-----------------------------------------------------------------------
கோபால் : இந்த ஆளு வுஏ மெக்கானிக்கா...? இல்ல சைக்கிள் மெக்கானிக்கா..?
தனபால் : ஏன் கேக்குறீங்க..?
கோபால் : வுஏ-ல பிக்சர் டியூப் சரியில்லைன்னு சொன்னா பஞ்சர் ஒட்டிடலாம்னு சொல்றான்!
தனபால் : 😂😂
-----------------------------------------------------------------------
சிறந்த வரிகள்...!!

🌟 செய்வதற்கு எப்போதும் வேலை இருக்க வேண்டும். அப்போதுதான் முன்னேற முடியும்.

🌟 அன்பையும், ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகின்றவர் ஆர்வத்துடன் பணிபுரிவார்.

🌟 வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்.

🌟 தோல்வி ஏற்படுவது அடுத்த செயலை கவனமாக செய் என்பதற்கான எச்சரிக்கை.

🌟 பிறர் நம்மை சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரை சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

🌟 கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம்தான் கடினம்.
-----------------------------------------------------------------------
விடுகதைகள்...!!

1. பெட்டியை திறந்தால் பூட்ட முடியாது. அது என்ன?

2. சல சல என சத்தம் போடும். ஆனால், பேச மட்டும் வராது. அது என்ன?

3. நடக்க முடியாது. ஆனால், நகராமல் இருக்காது. அது என்ன?

4. பார்க்க கல்லானவன், கடிக்க இனிமையானவன். அவன் யார்?

விடைகள்

1. தேங்காய்.
2. காய்ந்த இலைகள்.
3. கடிகாரம்.
4. கற்கண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக