திங்கள், 10 பிப்ரவரி, 2020

டாக்சி டிரைவரும்... மூன்று குடிகாரர்களும்... படிங்க... சிரிங்க... - ரிலாக்ஸ் ப்ளீஸ்..!!


சிரிக்கலாம் வாங்க..!!

ஆசிரியர் : கம்பராமாயணத்தை எழுதியது யார்? கேள்விலேயே பதில் இருக்கு!
மாணவன் : ராமர் சார்.
ஆசிரியர் : கிழிஞ்சது கிருஷ்ணகிரி!
மாணவன் : அப்போ கிருஷ்ணர் சார்!
ஆசிரியர் : அட ராமா!
மாணவன் : அப்ப கண்டிப்பா ராமர்தான் சார்!...
ஆசிரியர் : 😨😨
-------------------------------------------------------------------------------------------------------------
பொன்மொழிகள்...!!
👍 நம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம். ஆனால், அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன.

👍 அழகைப் பற்றி கனவு காணாதீர்கள், அது உங்கள் கடமையை பாழாக்கிவிடும். கடமையை பற்றி கனவு காணுங்கள், அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.

👍 ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும் தருணத்தில் புத்திசாலியாகின்றான். ஆனால், ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி என்று பெருமிதம் கொள்ளும் தருணத்தில் முட்டாளாகின்றான்.

👍 உன் கை ரேகையைப் பார்த்து எதிர்காலத்தை நிர்ணயித்து விடாதே... ஏனென்றால், கையே இல்லாதவனுக்கு கூட எதிர்காலம் உண்டு.

👍 நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும், எப்போதுமே மண்டியிடுவது இல்லை.
-------------------------------------------------------------------------------------------------------------
சிந்தித்து... சிரியுங்கள்...!!
மூன்று குடிகாரர்கள் ஒரு வாடகை டாக்சியில் ஏறினார்கள்...

அவர்கள் நல்லா குடிச்சிருக்கிறத தெரிஞ்சுக்கிட்ட டாக்சி டிரைவர்

என்ஜினை ஸ்டார்ட் பண்ணி ஆப் செஞ்சுட்டு... நாம வர வேண்டிய இடம் வந்தாச்சுன்னு சொன்னாரு...

முதல் நபர் : பணம் கொடுத்தான்.

இரண்டாம் நபர் : வுhயமெ லழர சொன்னான்.

மூன்றாம் நபர் : டிரைவருக்கு பளார் என்று ஒரு அறை கொடுத்தான்...!!

டிரைவருக்கு பயம்...!! ஒருவேளை இவனுக்கு புரிஞ்சிருக்குமோ? என்று...

மூன்றாம் நபர்...

இனிமே இவ்வளவு வேகமா ஓட்டாதே... நீ வந்து சேரும் வரை எங்க உயிர் எங்கக்கிட்ட இல்ல...!!😝😝😆😆

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்