>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 13 நவம்பர், 2019

    துன்பம் ஏற்படுவதற்கு இதுதான் காரணமோ? - ரிலாக்ஸ் ப்ளீஸ்..!!



    சிரிக்கலாம் வாங்க...!!
    கணவன் : கடவுள்கிட்ட என்ன வேண்டிக்கிட்ட?
    மனைவி : ஏழு பிறவியிலும், நீங்கதான் எனக்கு கணவனா வரனும்னு வேண்டிகிட்டேன். நீங்க?
    கணவன் : இது ஏழாவது பிறவியா இருக்கணும்னு வேண்டிகிட்டேன்..
    மனைவி : 😡😡
    ----------------------------------------------------------------------------------------------------------
    மனைவி : ஏங்க இறந்து போனதுக்கு அப்புறம் பெண்கள் எல்லாம் சொர்க்கத்துக்கு போவாங்களாமே... அப்படியா?
    கணவன் : அப்படித்தான் சொல்றாங்க..
    மனைவி : அப்ப நீங்க எங்கே போவிங்க?
    கணவன் : நீங்க எல்லோரும் அங்கே போயிட்டா இங்க எங்களுக்கு சொர்க்கம்தானே !!
    மனைவி : 😡😡
    ---------------------------------------------------------------------------------------------------------

    பாபு : எங்க தாத்தாவுக்கு தான் எப்ப சாகப் போறோம்னு தெரியும். டைம் கூட கரெக்டா தெரிஞ்சி இருக்கு.
    மாது : அட ஆச்சரியமா இருக்கே...! அவருக்கு ஞானோதயம் ஏதாவது இருக்கா? எப்படி அவருக்கு முன் கூட்டியே தெரிஞ்சுது....
    பாபு : போன வாரம் நீதிமன்றத்தில நீதிபதி தூக்கு தண்டனைன்னு சொன்னத வெச்சுதான்.
    மாது : 😳😳
    ---------------------------------------------------------------------------------------------------------

    காவலர் : இந்தாங்கம்மா, உங்க புருஷன் பார்க்ல, வீடு தெரியாம முழிச்சிக்கிட்டு இருந்தாரு... கூட்டிக்கிட்டு வந்துட்டோம்.
    மனைவி : என்னங்க 30 வருஷமா அந்த பார்க்குக்கு தான போறீங்க, அப்புறம் எப்படி வழி மறந்தது?
    கணவன் : இல்லடி நடந்து வர ரொம்ப சோம்பேறித்தனமா இருந்தது. அதான் இப்படி செஞ்சேன்.
    காவலர் : 😠😠
    ---------------------------------------------------------------------------------------------------------


    பொன்மொழிகள் !!
    👉 தன்னை விட அடுத்தவன் சுகமாக வாழ்கிறானே என்கிற எண்ணம்தான் எல்லா துன்பங்களுக்கும் காரணமாக இருக்கிறது.

    👉 செய்யத் தெரிந்தவன் சாதிக்கிறான். செய்யத் தெரியாதவன் போதிக்கிறான்.

    👉 தரையோடு தரையாக நசுக்கப்பட்டாலும், சத்தியம் மறுபடியும் எழுந்து நின்றுவிடும். ஆண்டவனுடைய முடிவில்லாத நாட்கள் அதற்கும் உண்டு.

    👉 கஷ்டங்கள், நஷ்டங்கள் அடைந்த பின் மனிதர்கள் அதிக அடக்கத்தையும், அறிவையும் பெறுகின்றனர்.

    ---------------------------------------------------------------------------------------------------------

    குறளும்... பொருளும்...!!
    நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
    தான்நல்கா தாகி விடின்.

    பொருள் :

    மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக