Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 13 நவம்பர், 2019

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மதுரை

 Image result for அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மதுரை

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



 வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள கோயில் நகரமான மதுரையின் மத்தியில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர். சிதம்பரம், காசி, திருக்காளத்தின் வரிசையில் முக்கியமான 4வது தலமாக திருவாலவாய் உள்ளது. இந்த தலத்தின் பெயரைக் கேட்டதுமே பேரின்ப நிலை கிடைக்கும். அதனால் சிவபெருமானுடைய முக்தி தலங்களுள் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இத்தலத்தினை சிவன் முக்திபுரம் என்றும் அழைக்கின்றனர்.

சுவாமி : மீனாட்சி சுந்தரேஸ்வரர், சொக்கநாதர்.

அம்பாள் : மீனாட்சி, அங்கயற்கண்ணி.

தீர்த்தம் : பொற்றாமரைக்குளம், வைகை, தெப்பக்குளம், புறத்தொட்டி.

தலவிருட்சம் : கடம்ப மரம்.

ஆகமம் : காரண ஆகமம்.

புராணப் பெயர் : திருவாலவாய்.

மாவட்டம் : மதுரை.

தல வரலாறு :

 விருத்திராசூரனை கொன்றமையால் இந்திரனுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க கடம்பவனத்தில் இருந்த இந்த சிவலிங்கத்தை பூஜித்து தனது தோஷத்தை போக்கிக் கொண்டதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது. முதன் முதலில் கடம்பவனக் காட்டில் சுயம்பு லிங்கத்தை கண்டறிந்து முதலில் இந்த கோவிலையும், பின் மதுரை நகரத்தையும் அந்த மன்னன் நிர்மாணித்ததாக வரலாறு என்கிறார்கள் சிலர்.

 கடம்பவனமாக இருந்த காட்டை, அழித்து அழகிய நகரமாக்கும்படி பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்து வந்த குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் தோன்றிக் கூறியதால் அம்மன்னன் கடம்பவனக் காட்டை அழித்து மதுரை எனும் அழகிய நகரத்தை உருவாக்கினான். சிவபெருமான் தன் சடையிலுள்ள சந்திரனின் அமுதத்தைச் சிந்தி புதிய நகருக்கு ஆசி வழங்கினார் என்று வரலாறு கூறுகிறது. இக்கோயில் அம்மனின் 248 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

 முன்னொரு காலத்தில் சுயம்பு ஆக இருந்த ஒரு லிங்கத்தை தேவர்களின் தலைவன் இந்திரன் கதம்பவனத்தில் கண்டான். பின் அந்த சிலையை இந்திரன் மதுரையில் பிரதிஷ்டை செய்தான். அதனாலேயே இங்கு சிவன் இந்திரனின் வாகனத்தில் உள்ளார். வரலாற்று சான்றுகளின் படி இக்கோவில் பல நுறு ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருப்பினும் மாலிக்காபூர் என்ற இஸ்லாமிய மன்னனால் தரை மட்டமாக்கப்பட்டது. பின் 14ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இக்கோவில் புதியதாக கட்டப்பட்டது.

தலச்சிறப்பு :

 தமிழ் சங்கங்கள் பிறந்த இடம் மதுரை ஆகும். தமிழ்வளர்த்த தென்பாண்டி நாட்டின் தலைநகர், அங்கயர் கன்னியுடன் கோயில் கொண்ட எழில்நகர், 'மதுரை"யின் மையப்பகுதியில் மீனாட்சியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக ஆயிரங்கால் மண்டபம், கிளிக்கூண்டு மண்டபம், ஊஞ்சல் மண்டபம், புதுமண்டபம், உயர்ந்த கோபுரங்கள் திகழ்கின்றன. இக்கோவிலுக்கு ஐந்து நுழைவாயில்கள் உள்ளது. இது 847 அடி, 792 அடி நீள அகலங்களோடு மிக பிரமாண்டமான கோவிலாக காட்சி அளிக்கிறது. நான்கு ராஜகோபுரங்களோடு மொத்தம் பதினான்கு கோபுரங்கள் உள்ளது. வெளிநாட்டவரும் அதிகஅளவில் இத்திருக்கோவில் வந்து வியந்து வணங்கி வருகின்றனர்.

கிழக்கு வாசலின் அருகே உள்ள அம்மன் சந்நிதியில் உள்ள மண்டபம் திருமலை நாயக்கரின் மனைவிகளால் கட்டப்பட்டது. திருமலை நாயக்கர் மதுரையை 17ஆம் நுற்றாண்டில் ஆட்சி புரிந்து இருக்கின்றார். பார்வதி தேவியின் எட்டு அவதாரங்களான கருமாரி, ரௌத்ரி, வைஷ்ணவி, மகாலட்சுமி, யக்னரூபிணி, ஷ்யாமளா, மகேஸ்வரி, மற்றும் மனோன்மணி ஆகிய உருவங்கள் சிலைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக