Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 19 மே, 2020

பூவில் பிறக்கும், நாவில் சுவைக்கும். அது என்ன? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

கலக்கலான ஜோக்ஸ்..!

மனைவி : என்ன பாத்துக்கிட்டு இருக்கீங்க?
கணவன் : ஒன்னுமில்ல.
மனைவி : ஒன்னுமில்லையா? ஒரு மணிநேரமா மேரேஜ் சர்டிபிகேட்-ஐ பாத்துக்கிட்டு இருக்கீங்க!
கணவன் : இல்ல... எங்கயாவது எக்ஸ்பேரி டேட் போட்டுருக்கான்னு பாக்குறேன்...
மனைவி : 😠😠
-----------------------------------------------------------------------
காயத்ரி : டாக்டர்.. தலையில் பேன் தொல்லை தாங்க முடியல.
டாக்டர் : இந்த பேன் மருந்த தூங்க போகும்போது போடுங்க.
காயத்ரி : பேன் எப்ப தூங்க போகுதுன்னு எனக்கு எப்படி டாக்டர் தெரியும்?
டாக்டர் : 😩😩
-----------------------------------------------------------------------
பாபு : உங்களுக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்தே, இந்த சோப்பைத்தான் குளிக்கப் பயன்படுத்துறீங்களாமே?
தீபக் : அப்படியெல்லாம் இல்லங்க... இது 'கரைஞ்சதும்" வேற புது சோப் வாங்கிடுவேன்.
பாபு : 😬😬
-----------------------------------------------------------------------
பாபு : டாக்டர், நான் பஸ்-ல ஏறினவுடனேயே தூக்கம் தூக்கமா வருது டாக்டர்.
டாக்டர் : வந்தா என்ன? உட்கார்ந்துக்கிட்டு கண்ணை மூடி தூங்க வேண்டியது தானே.
பாபு : நான் தூங்கிட்டா பஸ்ஸை யாரு ஓட்டுறது.?
டாக்டர் : 😳😳
-----------------------------------------------------------------------
சிந்தனை துளிகள்..!

🌟 ஒரு மனிதனின் விடாமுயற்சியை கைவிடாமல் இருந்தால்தான், முயற்சி தன் வெகுமதியை முழுமையாக விடுவிக்கும்.

🌟 தைரியம் வெற்றியை கொடுக்கிறது. பயம் மரணத்தை கொடுக்கிறது.
-----------------------------------------------------------------------
விடுகதைகள்..!

1. கண்ணால் பார்க்கலாம், கையால் பிடிக்க முடியாது. அது என்ன?

2. பூவில் பிறக்கும், நாவில் சுவைக்கும். அது என்ன?

3. பச்சை குடத்திற்குள் இனிப்பான பானம். அது என்ன?

பதில் :

1. நிழல்.

2. தேன்.

3. இளநீர்.
-----------------------------------------------------------------------
குறளும்... பொருளும்...!!

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.

விளக்கம் :

அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக