>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

    மெழுகுவர்த்தியின் நம்பிக்கை.. என்ன நடந்திருக்கும்? சிந்தியுங்கள் - ரிலாக்ஸ் ப்ளீஸ்..!!

    -----------------------------------------------
    சிரிக்கலாம் வாங்க...!!
    -----------------------------------------------
    மதன் : உங்கள் ஊரில் பெரிய மனிதர்கள் யாராவது பிறந்திருக்கிறார்களா?
    ராமு : இல்லை, குழந்தைகள் தான் பிறந்திருக்கிறார்கள்.
    மதன் : 😟😟
    -----------------------------------------------
    டாக்டர் : வாங்க உட்காருங்க.. கையை நீட்டுங்க.. நாக்கை நீட்டுங்க.. நல்லா இழுத்து மூச்சு விடுங்க.. திரும்புங்க.. இப்ப சொல்லுங்க என்ன செய்யுது?
    மாணிக்கம் : எதுவும் இல்லை டாக்டர்.. மகளுக்கு கல்யாண பத்திரிக்கை கொடுக்க வந்தேன்.. இந்தாங்க. வரட்டுமா!
    டாக்டர் : 😦😦
    -----------------------------------------------
    நம்பிக்கை...!!!
    -----------------------------------------------
    நான்கு மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டு இருந்தன.

    அப்போது மெலிதாய் காற்று வீசிக்கொண்டு இருந்தது...!!

    காற்றைக் கண்டதும்... 'அமைதி" என்ற மெழுவர்த்தி ஐயோ காற்று வீசுகின்றது, நான் அணைந்துவிடுவேன் என்று பலவீனமாக சொன்னது. காற்று பட்டதும் அணைந்துவிட்டது.

    'அன்பு" என்ற அடுத்த மெழுகுவர்த்தியும் காற்றை எதிர்க்க முடியாது" என்று அணைந்துவிட்டது.

    'அறிவு" என்ற மூன்றாவது மெழுகுவர்த்தியும் காற்றை எதிர்க்க முடியாமல் அணைந்தது.

    நான்காவது மெழுகுவர்த்தி மட்டும் காற்று வீசிய சிலநொடிகள் போராடி ஜெயித்துவிட்டது.

    அப்போது அந்த அறையில் ஒரு சிறுவன் நுழைந்தான்.

    'அடடா மூன்று மெழுகுவர்த்திகளும் அணைந்துவிட்டதே" என்று கவலையுடன் சொன்னான்.

    அதற்கு எரிந்து கொண்டிருந்த நான்காவது மெழுகுவர்த்தி சொன்னது, 'வருத்தப்படாதே நான் இருக்கிறேன். என்னை வைத்து மற்ற மூன்றையும் பற்ற வைத்துக்கொள்" என்றது.

    சிறுவன் உடனே... நான்காவது மெழுகுவர்த்தியை பார்த்து 'உன் பெயர் என்ன..?" என்று கேட்டான்.....

    'நம்பிக்கை" என்றது அந்த மெழுகுவர்த்தி.

    நாம் எப்போதும் வாழ்வில் நம்பிக்கையை மட்டும் இழக்கக்கூடாது....!!
    -----------------------------------------------
    படித்ததில் பிடித்தது...!!
    -----------------------------------------------
    சிக்கல்கள் என்பவை, ஓடும் ரயிலில் இருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை.
    அருகில் போனால் அவை பெரியதாகத் தெரியும்.
    அவற்றைக் கடந்து சென்றால் அவை சிறியதாகிவிடும்.
    -----------------------------------------------
    குறளும்... பொருளும்...!
    -----------------------------------------------
    செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்
    தாற்றின் அடங்கப் பெறின்.

    விளக்கம் :

    அடக்கத்துடன் வாழ்வதே அறிவுடைமை என்று அறிந்து, ஒருவன் அடக்கமாக வாழ்ந்தால் அவனது அடக்கம் நல்லவர்களால் அறியப்பட்டு, அது அவனுக்கு பெருமையை கொடுக்கும்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக