காலையில் வெறும் வயிற்றில் சீரக நீரை
குடிப்பதால் ஏற்படும் நன்மைகள். நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை
அனைவருமே காலையில் எழுந்தவுடன் தேநீரை தான் விரும்பி குடிப்பதுண்டு. ஆனால், இது
நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிப்பதில்லை. அதற்கு மாறாக காலையில் எழுந்தவுடன்
வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்பது
பற்றி பார்ப்போம்.
ஜீரண சக்தி
சீரகத்தில் ஜீரண சக்தியை அதிகரிக்க
கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படும்
செரிமான பிரச்சனைகளை சரி செய்வதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, காலையில்
எழுந்தவுடன் நாம் சீரக தண்ணீரை குடித்து வந்தால் செரிமான பிரச்சனைகளில் இருந்து
விடுபடலாம்.
தாய்ப்பால்
சில தாய்மார்களை பொறுத்தவரையில்,
குழந்தை பிறந்து சில நாட்களிலேயே தாய்ப்பால் சுரப்பது நின்று விடும். எனவே இந்த
பிரச்சனை உள்ளவர்கள், தினமும் காலையில் சீரக தண்ணீரை குடித்து வந்தால், தாய்ப்பால்
சுரப்பது அதிகரிக்கும்.
நீரிழிவு
இன்று மிக சிறிய வயதில்
உள்ளவர்களுக்கு கூட சர்க்கரைநோய் ஏற்படுகிறது. இந்த பிரச்னை உள்ளவர்கள், தினமும்
காலையில், சீரக தண்ணீரை குடித்து வந்தால், இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள்
வரும்.
சுவாசப்பாதை
குளிர்காலங்களில் சிலருக்கு சுவாச
பாதைகளில் பிரச்னை ஏற்படுவதுண்டு. இப்படிப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள், காலையில்
சீரக தண்ணீரை குடித்து வந்தால், சுவாசப்பாதையில் மற்றும் நுரையீரலில் ஏற்படும்
பிரச்சனைகளை இது நீக்குகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக