Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

புதிய நோக்கியா 5310: இந்திய விற்பனை ஆரம்பம்; என்ன விலை? எங்கே வாங்க கிடைக்கும்?


அசல் நோக்கியா 5310 எக்ஸ்பிரஸ் மியூசிக் போனின் மறுவடிமைப்பான நோக்கியா 5310 (2020) மாடலின் இந்திய விற்பனை இந்தியாவில் தொடக்கம். நோக்கியா மொபைல்களை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி குளோபல் நிறுவனம், நோக்கியா நிறுவனத்தின் மிகவும் கிளாசிக் ஆன மாடலான நோக்கியா 5310-ஐ சமீபத்தில் அறிமுகம் செய்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவின் முன்னணி மொபைல் சில்லறை விற்பனை நிலையங்களின் வழியாக விற்பனையை தொடங்கி உள்ளது.

ஒரிஜினல் நோக்கியா 5310 எக்ஸ்பிரஸ் மியூசிக் மொபைலின் மறுவடிவமைப்பான நோக்கியா 5310 (2020) மாடலானது ஒரு எம்பி 3 பிளேயர் மற்றும் எஃப்எம் ரேடியோவை (வயர்டு அல்லது வயர்லெஸ் பிளே) கொண்டு வருகிறது, இது சக்திவாய்ந்த, டூயல் முன் பக்கம் எதிர்கொள்ளும் ஸ்பீக்கர்களுடன் வருகிறது. சுருக்கமான சொன்னால், நோக்கியா 5310 கிளாசிக் டிசைனை ஒரு புதிய உணர்வு மற்றும் பேட்டரி மூலம் ரீமிக்ஸ் செய்கிறது. நோக்கியா 5310 (2020) மாடலின் மற்ற முழு அம்சங்களை பற்றி அறிய தொடர்ந்து படிக்கவும்.


இந்தியாவில் நோக்கியா 5310 போனின் விலை மமற்றும் விற்பனை:
முன்னரே குறிப்பிட்டப்படி இந்தியாவில் நோக்கியா 5310 பீச்சர் போனின் விலை ரூ.3,399 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது அமேசான் மற்றும் நோக்கியா இந்தியா ஆன்லைன் ஸ்டோர் வழியாக வாங்க கிடைக்கும். இது வெள்ளை / சிவப்பு மற்றும் கருப்பு / சிவப்பு நிறங்களில் கிடைக்கும்.

நோக்கியா 5310 பீச்சர் போனின் டிஸ்பிளே மற்றும் வடிவமைப்பு:
அம்சங்களைப் பொறுத்தவரை, புதிய நோக்கியா 5310 ஆனது பல மேம்பாடுகளுடன் வருகிறது, இருப்பினும், எச்எம்டி குளோபல் இந்த போனை, குறிப்பாக அதன் முன்னோடிகளைப் போலவே "இசை ஆர்வலர்களுக்காக" வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை வலியுறுத்துகிறது. 2ஜி அம்சம் கொண்ட இந்த போன் 2.4 இன்ச் அளவிலான கியூவிஜிஏ டிஸ்ப்ளேவுடன், முன் பக்கம் எதிர்கொள்ளும் டூயல் ஸ்பீக்கர்கள் மற்றும் பாடி கீபேட் உடன் வருகிறது. இந்த போன் டூயல் சிம் மற்றும் மினி சிம்மை ஆதரிக்கும் ஒற்றை சிம் விருப்பங்களில் அறிமுகம் ஆகியுள்ளது.

ப்ராசஸர் மற்றும் மெமரி:


இந்த புதிய நோக்கியா 5310 பீச்சர் போன் ஆனது மீடியாடெக் MT6260A SoC மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 8MB ரேம் கொண்டுள்ளது. இந்த போன் நோக்கியா சீரிஸ் 30+ மென்பொருளின்கீழ் இயங்குகிறது மற்றும் 16MB அளவிலான இன்டர்னல் மெமரியை கொண்டுள்ளது, இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஆதரவையும் வழங்குகிறது.

பேட்டரி மற்றும் ஸ்டான்ட்-பை டைம்:


பேட்டரியைப் பொறுத்தவரை, இதில் 1200 எம்ஏஎச் அளவிலான நீக்கக்கூடிய பேட்டரி உள்ளது, இது ஒற்றை சிம் மற்றும் இரட்டை சிம் வேரியண்ட்களில் 7.5 மணி நேரம் வரை பேச்சு நேரத்தை உறுதிப்படுத்துகிறது. இரட்டை சிம் வேரியண்ட்டில் 22 நாட்கள் என்கிற காத்திருப்பு நேரத்தையும், ஒற்றை சிம் வேரியண்ட்டில் 30 நாட்கள் என்கிற காத்திருப்பு நேரத்தை வழங்குகிறது.

கேமராக்கள் மற்றும் கனெக்டிவிட்டி:


நோக்கியா 5310 அதன் பின்புறத்தில் ஃபிளாஷ் கொண்ட விஜிஏ கேமராவைக் கொண்டுள்ளது. உடன் எம்பி 3 பிளேயர் மற்றும் எஃப்எம் ரேடியோ போன்ற அம்சங்களையும் ஆதரிக்கிறது. இது அளவீட்டில் 123.7 x 52.4 x 13.1 மிமீ மற்றும் 88.2 கிராம் எடையும் கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக