சிரிக்க மட்டுமே !!
ஆண் : நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.
பெண் : நன்றி.
ஆண் : உங்க தங்கச்சி உங்கள விட அழகா இருக்காங்க.
பெண் : போடா எரும...😡😡
ஆண் : அது உங்க ரெண்டு பேரையும் விட அழகா இருக்கு.
பெண் : 😩😩
-------------------------------------------------------------------------------------------------------------
முதலாளி : வேலைக்கு தினமும் அரைமணி, முக்கால் மணி நேரம் லேட்டாவே வரீங்களே... ஏன்?
தொழிலாளர் : 'நீங்கதான் வேலை-ன்னு வந்துட்டா டைம் பாக்கக்கூடாது-ன்னு சொன்னீங்க".
முதலாளி : 😰😰
-------------------------------------------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது...!!
💪 அடுத்தவர் தும்மலில் சகுனம் பார்க்கிற நாம்தான் தமக்கு வேண்டியவரின் தும்மலில் நூறு, இருநூறு என ஆயுளை கூட்டி சொல்கிறோம்.
💪 ஓடும் ஓட்டமெல்லாம் மரணத்திற்காகத்தான் எனும்போது, கொஞ்சம் நிதானமாகவும் நடக்கலாம்.
💪 சாக்கடையில் கல்லெறிந்தால் நம் மேல் படும் என ஒதுங்கிச் செல்வதை சாக்கடை தனக்கான பெருமையாய் நினைத்துக் கொள்கிறது.
💪 சமூகம் மலடி என அழைப்பவளையும், அம்மா என்று அன்போடு அழைக்கிறான் பிச்சைக்காரன்.
💪 இயற்கையை அழித்த மனித இனம், தன் சாவுக்கு இயற்கை மரணம் என போட்டுக்கொள்வது விசித்திரமாக இருக்கிறது.
💪 நம்மாலேயே காக்க முடியாத ரகசியத்தை இன்னொருவர் காப்பார் என எப்படி நம்புகிறோம்?
-------------------------------------------------------------------------------------------------------------
குறளும்... பொருளும்...!!
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.
பொருள் :
யாரிடத்திலும் பொறாமை இல்லாதிருக்கப் பெற்றால், ஒருவன் பெறத்தக்க மேம்பாடான பேறுகளில் அதற்கு ஒப்பானது வேறொன்றும் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக