செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

இன்னைக்கு நல்ல நாள்... ஞாபகம் இருக்கா? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!


சிரிக்க சிரிக்க சிரிப்பு...

சீலா : என் மாமியார் ரயில்ல இருந்து கீழ விழுந்துட்டாங்க...
ராணி : Chain-ன புடிச்சு இழுக்க வேண்டியதுதான...
சீலா : இழுத்தேன்... Chain வந்துருச்சு... மாமியார் விழுந்துட்டாங்க...
ராணி : 😂😂
---------------------------------------------------------------------------------------------
தீபக் : என்னங்க ஆப்ரேஷன் பண்றதுக்குள்ளேயே உள்ள இருந்து வெளிய ஓடி வந்துட்டீங்க...
நோயாளி : இல்ல நர்ஸ் சொன்னாங்க... இது சின்ன ஆப்ரேஷன்தான்... டென்ஷன் ஆகாதீங்க... கடவுள் இருக்காரு அப்படின்னு...
தீபக் : சரி அதுக்கு ஏன் ஓடி வந்தீங்க?... தைரியம் தான சொல்லிருக்காங்க...
நோயாளி : அது சரிதான்... ஆனா தைரியம் சொன்னது என்னக்கு இல்ல... டாக்டருக்கு...
தீபக் : 😳😳
---------------------------------------------------------------------------------------------
இன்னைக்கு நல்ல நாள்... இது எப்படி இருக்கு?
கணவன் தன் மனைவியிடம் 'இன்னைக்கு நல்ல நாள்-ன்னு" சொன்னான்... மறுநாளும் 'இன்னைக்கு நல்ல நாள்-ன்னு" சொன்னான்... திரும்பவும் அடுத்த நாளும் 'இன்னைக்கு நல்ல நாள்-ன்னு" சொன்னான்...

இப்படியே ஒரு வாரம் பொறுத்து பார்த்த மனைவிக்கு கோபம் உச்சத்தை தொட்டது... ஏன் இப்படி ஒரு வாரமா இன்னைக்கு நல்ல நாள்... இன்னைக்கு நல்ல நாள்-ன்னு சொல்லிக்கிட்டே இருக்கீங்க... என்ன ஆச்சு உங்களுக்கு?

கணவன் அதற்கு சொன்னான் போன வாரம் சண்டை போடும்போது நீ என்ன சொன்ன? இப்படியே பண்ணிக்கிட்டு இருந்தா ஒரு நல்ல நாளா பாத்து எங்க அம்மா வீட்டுக்கு போயிடுவேன் பாத்துக்கோங்க அப்படீன்னு சொன்னீல்ல... அதான் உனக்கு அத ஞாபகப்படுத்துனேன்...
---------------------------------------------------------------------------------------------
தவளை தன் வாயால் கெடும்... எப்படி?         
கணவன் வெளியில் சென்று வந்தவுடன்... தன் மனைவியிடம்
இன்னைக்கு உன்ன மாதிரியே ஒரு பெண்ணை பார்த்தேன் என்று சொன்னான்...
அதற்கு மனைவி அவள் அழகா இருந்தாளா? என்று கேட்டாள்.
இந்த கேள்விக்கு அவரால் ஆமான்னும் பதில் சொல்ல முடியாது...
இல்லைன்னும் பதில் சொல்ல முடியாது...
இதுக்கு பேர்தான் தவளை தன் வாயால் கெடும் என்பார்கள்...😝😝
---------------------------------------------------------------------------------------------
குறளும்... பொருளும்...!!

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.

பொருள் :

முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநி‌லைமை போற்றுவது சான்றோருக்கு அழகாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்