Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

பரசுராமர் கதை


சரதன் மற்றும் குமாரர்கள் போகும் வழியில் சில தீய சகுணங்கள் ஏற்பட்டன. மயில்கள் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாகச் சென்றன. இது நல்ல சகுணம் ஆகும். காகங்கள் வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கமாகச் சென்றன. இது தீய சகுனம் ஆகும். இந்த சகுனத்தால் தசரதன் தயங்கி நின்றான். தசரதன் ஜோதிடரை அழைத்து இந்த நிமித்தங்களின் பலன்கள் என்னவென்று கேட்டான். ஜோதிடர் ஆராய்ந்து, முதலில் இடையூறு வரும், பின்பு அந்த இடையூறு நீங்கி நன்மைகள் உண்டாகும் என்று கூறினான். அவர்கள் சிறிது தூரம் சென்றதும், எதிரே பூமி அதிரும்படியாக கையில் கோடாரி ஏந்திய ஒருவன் அவர்கள் முன் தோன்றினான். அவன் பெயர் பரசுராமன். இவனது வரலாறு வருமாறு.

ஜமதக்னி, ரேணுகாதேவி இருவருக்கும் பிறந்த புத்திரர்களுள் ஒருவர் தான் பரசுராமன். பரசுராமன் மகாவிஷ்ணுவின் அவதாரம் ஆவார். பரசுராமர் மிக பலம் மிக்கவர். சூரிய வம்சத்தில் பிறந்த கேகய நாட்டு மன்னன் திருதவீரியனின் மகன் கார்த்தவீரியார்ச்சுனன். இவனுக்குப் பிறவியிலேயே கால்கள் இல்லை. இவன் தன் பன்னிரண்டு வயதுக்குமேல், ஞான உபதேசம் பெற்று பலசாலியாக நாட்டை ஆண்டு வந்தார்.

ஒரு நாள் கார்த்தவீரியார்ச்சுனன் காட்டுக்கு வேட்டையாட சென்றபோது, அவனும் அவனது படையினரும் கடும் பசியால் அவதியுற்றனர். அப்போது, ஜமதக்னி முனிவர், தன்னிடமிருந்த காமதேனு என்னும் தேவ பசுவின் உதவியால் அவர்கள் அனைவருக்கும் அறுசுவை உணவளித்தார். மன்னர் கார்த்தவீரியார்ச்சுனன், முனிவரிடம் காட்டில் வாழும் உமக்கு காமதேனு தேவையில்லை. ஆகவே, அதை எனக்கு கொடுங்கள் என்று கேட்டான். முனிவர் தர மறுத்து விட்டார். ஆனால் மன்னர் அந்த தேவ பசுவைப் வலுகட்டாயமாக தன் நாட்டுக்குப் பிடித்து சென்றார். அதையறிந்து கோபம் கொண்ட ஜமதக்னியின் மகன் பரசுராமன், அந்நாட்டுக்கு சென்று மன்னனின் தலையை வெட்டி வீழ்த்திவிட்டு காமதேனுவை மீட்டு கொண்டு வந்தார்.

இதையறிந்த ஜமதக்னி முனிவர், அரசனைக் கொன்றது ஒரு பிராமணனைக் கொன்றதைவிட பெரும்பாவச் செயலாகும். அப்பாவம் தீர நீ யாத்திரை செய்து வருவாயாக என்று கூறி யாத்திரைக்கு அனுப்பி வைத்தார். பரசுராமரும் யாத்திரை சென்று வந்தார். ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகா தேவி ஒருமுறை ஹோம காலத்துக்குள் தண்ணீர் கொண்டுவர தாமதமாகி விட்டதால், கோபம் கொண்ட முனிவர், அவளைக் கொன்று விட்டு வா என்று மகனிடம் ஆணையிட்டதால், பரசுராமன் கோடாரியால் தாயை வெட்டி வீழ்த்தினான். ஜமதக்னி முனிவர், பரசுராமரிடம், மகனே! உனக்கு வேண்டிய வரத்தைக் கேள், என்று கேட்டார். பரசுராமர் என் தாயாரும், சகோதரர்களும் பிழைத்து எழ வேண்டும் என்று கேட்டு கொண்டார். முனிவரும் அவ்வாறே அருள் செய்தார். தாயும், சகோதரர்களும் உயிர் பெற்று எழுந்தார்கள்.

பரசுராமர் தனக்கும் தன் தந்தை போன்ற சக்தி கிடைக்க தவம் செய்யக் காட்டுக்கு சென்றார். அச்சமயத்தில் கார்த்தவீரியார்ச்சுனனின் புதல்வர்கள் பரசுராமனைப் பழிவாங்க நினைத்து, பரசுராமனின் தந்தை தனியாக இருந்த நேரம் பார்த்து தலையை வெட்டி விட்டனர். அதைப் பார்த்த ரேணுகாதேவி கத்தினாள். தன் தாயின் அழுகையொலி கேட்ட பரசுராமன், வீட்டிற்கு திரும்பிச் சென்றார். அங்கே தன் தந்தையின் தலை வெட்டப்பட்டிருப்பதை பார்த்த பரசுராமர் கடும் கோபம் கொண்டு, கோடாரியை ஏந்திக்கொண்டு, கார்த்தவீரியார்ச்சுனனின் புதல்வர்களை வெட்டி வீழ்த்தினான். அதோடு தன் கோபம் தீராமல், இருபத்தொரு தலைமுறைகள் சத்ரியர் வம்சம் தழைக்காமல் இருக்க அவர்களை நாசம் செய்வேன் என்று சபதம் ஏற்று கொண்டார்.

பிறகு தந்தையின் தலை மற்றும் உடலையும் ஒன்று சேர்த்து கடைசி கடமைகளை செய்து முடித்தான். ஜமதக்னி முனிவர் சப்தரிஷி மண்டலத்தில் நட்சத்திரமாகப் பிரகாசித்தார். பரசுராமன் தான் செய்து கொண்ட சபதத்தின்படி, இருபத்தொரு முறை உலகை வலம் வந்து சத்ரியர்களை வதம் செய்து வந்தார்.

தொடரும்.....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக