Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 27 நவம்பர், 2019

என்னது... திருடன் நல்லவனா? சிரிக்க மட்டுமே... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!

சிரிக்கலாம் வாங்க...!!
மனைவி : என்னங்க... ரசத்துல புளிய கரைச்சி ஊத்த மறந்துட்டேன். நீங்க ஒன்னும் சொல்லாம சாப்பிடறீங்க...
கணவன் : நீ ரசம் வைக்க போறேன்னு சொன்னப்பவே.. என் வயித்துல புளிய கரைச்ச மாதிரிதான் இருந்துச்சு...
மனைவி : 😠😠
----------------------------------------------------------------------------------------------------------
ராம் : அந்த கிராமத்துல ஆண்-பெண் எல்லோரும் தினமும் யோகாசனம் பண்ணறாங்களாமே, களவு, குடிப்பழக்கம் இல்லாம எல்லோரும் நல்லவங்களா மாறிட்டாங்களாமே? நீ கேள்விப்பட்டியா?
குமார் : இல்லைங்க, நான் கோவில்பட்டி.
ராம் : 😳😳
----------------------------------------------------------------------------------------------------------

கணேஷ் : டேய்! நாளைக்கு ஒரு பெண் பாக்கப் போறேன்! வந்துரு!
பிரவீன் : கண்டிப்பா! உனக்கு ஒரு கஷ்டம்னா நான் சும்மா இருப்பேனா?
கணேஷ் : 😝😝
----------------------------------------------------------------------------------------------------------

ஆசிரியர் : காது கேக்காதவனை நாம என்னன்னு சொல்லணும்...?
மாணவன் : என்ன வேணாலும் சொல்லலாம், அவனுக்கு கேக்கவா போகுது...?
ஆசிரியர் : 😵😵
----------------------------------------------------------------------------------------------------------

அமலா : அவர் கிரிக்கெட் பைத்தியம்னு எப்படி சொல்ற..?
விமலா : விதி விளையாடிருச்சின்னு சொன்னா, ஸ்கோர் என்னனு கேக்குறாரு?
அமலா : 😂😂
----------------------------------------------------------------------------------------------------------

இது சிரிக்க மட்டுமே.... திருடன் நல்லவன்...!!
ஒரு டாக்டரோட எதிர்பார்ப்பு
எல்லோரும் நோயாளியா இருக்கணும்...

ஒரு வக்கீலோட எதிர்பார்ப்பு
எல்லோரும் பிரச்சனையோட இருக்கணும்...

ஒரு போலீசாரோட எதிர்பார்ப்பு
எல்லோரும் கிரிமினலா இருக்கணும்...

ஆனா ஒரு திருடன் மட்டும்தான்
எல்லோரும் வசதியா இருக்கணும்...
ராத்திரி நிம்மதியா தூங்கணும்னு நினைப்பான்...

----------------------------------------------------------------------------------------------------------
குறளும்... பொருளும்...!!
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

பொருள் :

பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.
----------------------------------------------------------------------------------------------------------

நாய்க்கு கூட தெரியுது... நமக்கு தெரியல !!
சிறு தூரம் வந்த பிறகு இனி நம்மலால நடக்க முடியாதுன்னு நெனச்சு மூச்சு வாங்கி நிற்கும்போது...
உன்னால நடக்க இல்ல... ஓட கூட முடியும்னு சொல்லி நாய் துரத்தும் பாரு...
அப்போ நம்மகிட்ட எவளோ சக்தி இருக்கும்னு நம்மள விட அந்த நாய்க்குதான் தெரியும்...
----------------------------------------------------------------------------------------------------------

ஒரு டவுட்டு...!!
உளுந்தவடை எண்ணெய்ல விழுந்தனால
அது உளுந்த வடையா?

இல்ல.. உளுந்து போட்டதுனால
அது உளுந்த வடையா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக