Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 27 நவம்பர், 2019

குழந்தைகளுக்கு அதிக செல்லம் கொடுப்பது சரியா?.. தவறா?...


Image result for குழந்தைகளுக்கு அதிக செல்லம் கொடுப்பது சரியா?.. தவறா?...



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Join Our Telegram Channel

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


குழந்தைகளை வயதிற்கேற்ப எப்படி அணுக வேண்டும்?


நாம் வாழக்கூடிய சமூகம் எதை சரி என்று சொல்கிறதோ அதை செய்யவும், எதை தவறு என்று சொல்கிறதோ அதை செய்யாமல் இருக்கவும் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதே ஒழுக்கத்தை கற்றுக்கொடுப்பதாகும்.

குழந்தைகளிடத்தில் கத்துவது எந்த அளவிற்கு ஆபத்தோ, அதே அளவு குழந்தைகளை கண்டிக்காமல் இருப்பதும் ஆபத்தே ஆகும். குழந்தைகளை அவர்கள் வயதிற்கு தகுந்தாற்போல் எப்படி அணுக வேண்டும்? என்று பார்க்கலாம்.

குழந்தைகளை எப்படி அணுக வேண்டும்?

குழந்தைகள் செய்யும் சேட்டைகளுக்கு பெற்றோர்கள் கோபப்பட்டு கத்துவது என்பது இயல்பே. இது குழந்தைகளுக்கு மிகப்பெரிய பாதிப்புகளை உண்டாக்குகிறது.

ஒரு வயது குழந்தைகளுக்கு அரவணைப்பு என்பது மிகவும் அவசியம். விளையாட்டாகவோ அல்லது உங்களை அறியாமலோ குழந்தையிடம் மிரட்டும் விதத்தில் கத்துவது என்பது மிகவும் ஆபத்தை விளைவிக்கும். இதனை தவிர்க்க மென்மையாக அவர்களை அணுகுவதே சிறந்த முறையாகும்.

மூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஓடியாடி விளையாடுவார்கள். பெரும்பாலும் அவர்கள் பின்னால் ஓட முடியாமல், அவர்களை தடுக்க முடியாமல் பெற்றோர்கள் கத்துவது என்பது அவர்களை நல்வழிப்படுத்தாது. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை குலைத்து அவநம்பிக்கையை ஏற்படுத்தும்.

ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றவர்களை ஒப்பிட்டு பார்க்க ஆரம்பித்துவிடுகிறது. தன்னிடம் யார் நன்றாக பேசுகிறார்கள், எப்படி தன்னிடம் அணுகுகிறார்கள் என்று புரிந்துக்கொள்ள ஆரம்பிக்கிறது. இந்த வயதில் குழந்தைகளிடம் கத்துவது பெற்றோர், குழந்தை உறவுமுறையை பாதிக்கும். தன்னுடைய எண்ணங்களை வெளிப்படுத்தாமல் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள ஆரம்பித்துவிடுகிறது.

குழந்தைகளிடம் செய்யக்கூடாதவை :

குழந்தைகளிடம் ஏதாவது தேவை என்றால், 'அடம்பிடித்தால் கிடைத்துவிடும்" என்ற எண்ணங்கள் இருக்கும். ஆனால், அந்த சமயங்களில் அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடவேண்டும். இதனால், அடம்பிடித்தாலும் பெற்றோர்கள் பொருட்படுத்தமாட்டர்கள் என்ற எண்ணம் அவர்களிடம் வந்துவிடும்.

குழந்தைகள் செய்யும் தவறுகளுக்காக தண்டனையை கொடுப்பதில் மட்டுமே கவனமாக இருக்கக்கூடாது. ஏதாவது நல்ல விஷயங்களை செய்தால் அதை பாராட்ட வேண்டும். ஆனால், அதையும் சொல்லிக்காட்டி செய்யக்கூடாது. செயலில் புரிய வைக்க வேண்டும்.

குழந்தைகள் நிரந்தரமாக தவறு செய்யாமல் இருக்க வேண்டும் என்றால், அடித்து உணர்த்தும் வழிமுறை பலனளிக்காது. நீங்கள் இருக்கும்போது சரியாக நடந்துகொள்வார்கள். இல்லாதபோது மீண்டும் அந்த தவறுகளை செய்வார்கள்.

குழந்தைகளிடத்தில் கத்துவது எந்த அளவிற்கு ஆபத்தோ அதே அளவு குழந்தைகளிடம் பேசாமல் இருப்பதோ அல்லது அவர்களை கண்டிக்காமல் இருப்பதோ தவறு.

சிறுவயதில் அதிக செல்லத்துடன் அவர்களை அணுகினால் வளர்ந்த பின்பும், தவறுகள் செய்யும்போதும் அதே செல்லத்துடன் தன்னை அணுக வேண்டும் என்று விரும்புவார்கள். அது பொய்க்கும்போது மனரீதியாக பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக