>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 16 ஜூலை, 2020

    நைசா அரைக்குறதுன்னா இதுதானா... இது தெரியாம போச்சே... ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    ------------------------------------------------------------------------------
    கலக்கலான ஜோக்ஸ்...!!
    ------------------------------------------------------------------------------
    விருந்தினர் ஒருவர் சாப்பிடும்போது அந்த வீட்டு நாய் அவரை பார்த்து அதிகமாக குரைத்து கொண்டே இருந்தது...

    விருந்தினர் : ஏன் இப்படி நாய் குரைச்சிக்கிட்டே இருக்குது?
    சின்னபையன் : அதோட தட்டில் யாராவது சாப்பிட்டால் அது அப்படிதான் குரைக்கும்.
    விருந்தினர் : 😣😣
    ------------------------------------------------------------------------------
    அண்ணன் : டேய் தம்பி எங்கடா போற?
    தம்பி : முறுக்கு செய்ய மாவு அரைக்க போறேன்.
    அண்ணன் : அதுக்கு ஏன்டா ஒளிஞ்சு, ஒளிஞ்சு போற?
    தம்பி : அம்மா தான் நைசா அரைச்சுட்டு வரச்சொன்னாங்க...
    அண்ணன் : 😆😆
    ------------------------------------------------------------------------------
    பாலாஜி : டீக்கடைக்காரர் பொண்ணை கல்யாணம் செஞ்சதுல ஒரு வசதி இருக்கு..
    பாபு : அது என்ன?
    பாலாஜி : என்னை அடிக்குறதுக்கு முன்னாடி, லைட்டா... ஸ்ட்ராங்கான்னு கேட்டுட்டு தான் அடிப்பா..
    பாபு : 😜😜
    ------------------------------------------------------------------------------
    ஆசிரியர் : மூன்றாம் உலகப் போர் வந்தால் என்ன ஆகும்?
    மாணவி : (சோகமாக) வரலாற்றில் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கும்...
    ஆசிரியர் : 😐😐

    ------------------------------------------------------------------------------
      படித்ததில் பிடித்தது..!!
    ------------------------------------------------------------------------------
    🤰 வலியோடு போராடினால் தான் ஒரு பெண் தாயாக முடியும்...
    🦋 இருளோடு போராடினால் தான் புழு வண்ணத்துப் பூச்சியாக முடியும்...
    🌱 மண்ணோடு போராடினால் தான் விதை மரமாக முடியும்...
    💪 வாழ்க்கையோடு போராடினால் தான் நம்மால் வரலாறு படைக்க முடியும்...!!
    ------------------------------------------------------------------------------
    குறளும்... பொருளும்...!!
    ------------------------------------------------------------------------------
    குறள் :

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
    செய்தொழில் வேற்றுமை யான்.

    விளக்கம் :

    எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒரு தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக