Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 16 ஜூலை, 2020

லக்னத்தில் ராகு இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

நவகிரகங்களில் மிகவும் வலிமையானவர் ராகுபகவான். ஒளி கிரகங்களான சூரியன் மற்றும் சந்திரரை தன் பிடியில் சிக்க வைத்து, அவர்களின் சக்தியை செயலிழக்க செய்யும் அளவுக்கு வலிமை மிக்கவர். கலியுகத்தில் மிகவும் வலுவாக செயல்படும் கிரகமும் ராகுதான்.

இவர் மனித தலையையும், பாம்பின் உடலையும் கொண்டவர். பாதி மனிதன் பாதி மிருகம். மெய், வாய், கண், மூக்கு, காது ஆகிய ஐம்புலன்களே, ஒருவரின் சிந்தனை உறுப்புகள். இந்த ஐம்புலன்களும், மனித உடலில் தலைப்பகுதியில் உள்ளன. ராகுவிற்கு மனித தலை. அதில் உள்ள ஐம்புலன்களை இயக்கி, புறச் சிந்தனைகளை உருவாக்கி உலக பற்றோடு வாழ வைப்பதே ராகுவின் வேலை.

ராகு ஒவ்வொரு ராசியிலும் 18 மாதங்கள் தங்கியிருப்பார். பொதுவாக அனைத்து ராசிகளையும் சுற்றி முடிக்க ராகு 18 ஆண்டுகள் எடுத்துக் கொள்வார். கேது 7 ஆண்டுகள் எடுத்துக் கொள்வார். ராகுவும், கேதுவும் எப்போதும் பிற்போக்கு இயக்கத்தில் பயணிக்கிறார்கள். ராகு இருக்கும் வீட்டில் அதிருப்தி, மன அமைதியின்மை, பயம் போன்றவை இருக்கும்.

லக்னத்தில் ராகு இருந்தால் அந்த ஜாதகக்காரர்கள் பிடிவாத குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

லக்னத்தில் ராகு இருந்தால் என்ன பலன்?

👉 செல்வ வளம் உடையவர்கள்.

👉 புரிந்து கொள்வதற்கு கடினமானவர்கள்.

👉 சுவை மிகுந்த உணவுகளை உண்ணக்கூடியவர்கள்.

👉 நிதானமின்றி எதையும் செய்யக்கூடியவர்கள்.

👉 முன்கோபம் உடையவர்கள்.

👉 திடமான உள்ளம் கொண்டவர்கள்.

👉 எதையும் கூர்ந்து கவனிக்கும் திறன் கொண்டவர்கள்.

👉 ரகசிய நடவடிக்கை கொண்டவர்கள்.

👉 கலைகளில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.

👉 சோம்பல் குணம் உடையவர்கள்.

👉 சிறிது சுயநலமான எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

👉 பிடிவாத குணம் கொண்டவர்கள்.

👉 எதையும் தனித்து செய்யக்கூடியவர்கள்.

👉 சிறந்த பேச்சாற்றல் உடையவர்கள்.

👉 தற்பெருமையின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள்.

👉 மற்றவர்களை பற்றி கவலை கொள்ளாமல் தன்னுடைய காரியத்தில் கவனமாக இருக்கக்கூடியவர்கள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக