>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 16 ஜூலை, 2020

    காலையில் கேரட் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..?

    காலையில் கேரட் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான அணைத்து சத்துக்களும் கிடைக்கிறது.

    கண்பார்வை நன்றாக இருக்கும். உடலில் இருக்கும் தோலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. கோடைகாலத்தில் வெளியில் சென்று வரும்போது புறஊதா கதிர்கள் தோலை பாதிக்கிறது. தோல் கருப்பாவதை தடுக்கிறது. தோலில் சிராய்ப்பு காயம், அரிப்பு இருந்தால் கேரட்டை அறைத்து தடவினால் மிகவும் நல்லது.

    மேலும் தோலில் ஏற்படும் பிரச்னை மற்றும் புண்களை கேரட் ஆற்றும் மேலும் கேரட் கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.மேலும் வீக்கம், வலியை கரைக்க கூடியது.கேரட்டை பயன்படுத்தி கோடைகாலத்துக்கான ஜூஸ் தயாரிக்கலாம்.

    ஒரு டம்ளர் கேரட் சாறுடன் சிறிது ஏலக்காய் பொடி, பனங்கற்கண்டு சேர்த்து காலையில் குடித்துவர உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு ஏற்படும். உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது.

    கோடைகாலத்தில் உடலில் இருந்து வெளியேறும் நீர்ச்சத்தை சமப்படுத்தும். நாக்கு, தொண்டை, குடலில் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. கேரட்டை பயன்படுத்தி அல்சருக்கான மருந்து தயாரிக்கலாம்.

    கேரட் துருவலுடன் உப்பு, அரை ஸ்பூன் தனியா பொடி, மல்லி, புளிப்பில்லாத தயிர் சேர்த்து கலந்து சாப்பிட்டுவர வயிற்றுப்புண் சரியாகும். வயிற்று வலி குணமாகும். நாள் முழுவதும் புத்துணர்வு ஏற்படும். எலும்புகள், பற்கள், தோல், கண் ஆகியவற்றுக்கு நன்மை தரும்.

    கேரட்டை காலையில் மென்று சாப்பிட்டு வந்தால், வாயில் இருக்கும் கிருமிகள் நீங்கி பற்களுக்கு பலம் கிடைக்கிறது. ஈறுகள் கெடாமல் இருக்கும். வாய் புண்கள் சரியாகும். கேரட்டை பயன்படுத்தி ஈரலுக்கு பலம் தரும் மருந்து தயாரிக்கலாம். கேரட்டை பசையாக அரைக்கவும். இதனுடன் சிறிது மஞ்சள் சேர்க்கவும். சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வேண்டும்.

    இதை வடிக்கட்டி குடித்துவர புண்கள் ஆறும். நரம்பு மண்டலங்கள் பலம் பெறும். ரத்த அணுக்களுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது. ஈரல் பலம் அடைகிறது. ரத்தம் சுத்தமாகும். தேவையில்லாத நச்சுக்கள் வெளியேறும். பித்தம், மஞ்சள் காமாலை வராமல் தடுக்கிறது. அன்றாடம் ஒரு கேரட் சாப்பிடும்போது புற்றுநோய் வராமல் தடுக்கலாம். கோடைகாலத்தில் குளிர்ச்சி தருகிறது. தோலுக்கு வண்ணத்தை தருகிறது

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக