>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 28 ஜூலை, 2020

    குழந்தை மனம் எவ்வளவு வித்தியாசமாய் யோசிக்கிறது? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    -----------------------------------------------------------
    கலக்கலான காமெடிகள்...!!
    -----------------------------------------------------------
    பாபு : உன் மனைவி புத்தகம் வாங்குனதுக்கு நீ ஏன் பயப்படுற?
    சீனு : புத்தகத்தோட தலைப்பு என்னன்னு தெரியுமா?
    பாபு : என்ன?
    சீனு : ரத்தம் வராமல் அடிப்பது எப்படி?
    பாபு : 😆😆
    -----------------------------------------------------------
    மூளைக்கு வேலை... - சிரிப்பதற்காக மட்டுமே...!!
    -----------------------------------------------------------
    ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் பைக்ல வேகமா போய்கிட்டு இருந்தாரு... போற வழியில ரெண்டு குற்ற சம்பவங்களை பாத்தாரு... ரோட்டுக்கு வலது பக்கம் ஒரு கும்பல் மதுபானம் காய்ச்சிக்கிட்டு இருந்தது. ரோட்டுக்கு இடது பக்கம் ஒரு கும்பல் ஒருத்தர கொலை பண்ண முயற்சி செஞ்சிக்கிட்டு இருந்தது. இப்போ இன்ஸ்பெக்டர் எதை பிடிப்பாரு?

    பதில்...

    முதலில் பைக்கின் ப்ரேக்கை தான் பிடிப்பார்.
    -----------------------------------------------------------
    படித்ததில் பிடித்தது...!!
    -----------------------------------------------------------
    ⭐ ஒருவருக்கு உதவுவதன் மூலம் இவ்வுலகை உன்னால் மாற்றிவிட முடியாது...
    ஆனால் ஒருவருக்கு உதவுவதன் மூலம் அவருடைய உலகை உன்னால் மாற்ற முடியும்...!!

    ⭐ நீங்கள் எதிர்மறையான எண்ணங்களை நேர்மறையான ஒன்றாய் மாற்றினால்,
    உங்களுக்கு நேர்மறையான வெற்றிகள் துவங்கும்...
    எதையும் எதிர்கொள்ளும் மனநிலை இருந்தால்தான்
    உங்களால் இங்கு எதையும் சாதிக்க முடியும்...

    -----------------------------------------------------------
    குழந்தை மனம்...!!
    -----------------------------------------------------------
    ஒரு தந்தை மழை காரணமாக குழந்தையோடு பள்ளிக்கு சாலையோரம் சென்றார். ஆனால், சாலை ஒரே சேறும் சகதியுமாக இருந்தது. தந்தை புலம்பிக்கொண்டே வண்டி ஓட்டிக்கொண்டு சென்றார்.

    அப்பொழுது குழந்தை தன் தந்தையிடம் ரோடெல்லாம் இப்பொழுது சாக்லெட் ரோடாக மாறிவிட்டதுதான அப்பா என்று கூறி மகிழ்ச்சியடைந்தது.

    குழந்தை மனம் எவ்வளவு வித்தியாசமாய் யோசிக்கிறது? எந்த கடினமான சூழலிலும் சந்தோஷமாக சிந்திக்கிறது குழந்தை. நமக்குத்தான் அது ஒரு குறைபோல...
    -----------------------------------------------------------
    முயற்சி...!!
    -----------------------------------------------------------
    ⚡ முயற்சியுடையவன் விலக மாட்டான். விலகுகிறவன் முயற்சி செய்ய மாட்டான்!

    ⚡ முயற்சிகள் தவறலாம். முயற்சி செய்யத் தவறலாமா?

    ⚡ வெற்றி என்றுமே முடிவடையாதது, தோல்வி என்றுமே முடிவாகாது.

    ⚡ தொடங்குவதில் மட்டுமல்ல வாழ்க்கை, தொடர்வதில்தான் இருக்கிறது.

    ⚡ அச்சத்தை விட்டால், உச்சத்தை தொடலாம்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக