ராகுவிற்கு
பல பெயர்கள் உண்டு. தானவ மந்திரி, ருத்திரப்பிரியன், ரௌத்திரன், சந்திர-ஆதித்த விமர்த்தனன்,
சதாக்ரோதீ, அர்த்தகாயன், சிம்ஹிகாசித்திர நந்தனன், பானு பீதிதன், கிரகராஜன், காலரூபன்,
ஸ்ரீPகண்ட இருதயாச்ரயன், சைம்ஹிகேயன், கோரரூபன், மகாபலன், கிரக பீடாகரன், தம்னுட்ரீ,
ரக்த நேத்திரன், மகோதரன் என்றெல்லாம் ராகு அழைக்கப்படுகிறார்.
ராகு
முறத்தைப் போன்ற ஆசனத்தில் அமர்ந்திருப்பார். மேலும் வரதம், சூலம் மற்றும் கேடயம் ஏந்திய
கரங்களை உடையவராகவும், கரிய மேனியும் மற்றும் கறுத்த உடலமைப்பையும், முடி தரித்தவராகவும்,
நான்கு திருக்கரங்களை கொண்டவராகவும், சிங்க வாகனத்தில் ஏறுபவராகவும் ராகுபகவான் திகழ்கிறார்.
ஜாதகத்தில்
ராகுபகவான் வாக்கு ஸ்தானத்தோடு தொடர்பு கொள்ள சிறந்த பேச்சாளராக திகழ்வர். அவரது பேச்சில்
ஒருவித தந்திரத்தனம் மேலோங்கி நிற்கும்.
லக்னத்திற்கு
11-ல் ராகு இருந்தால் அந்த ஜாதகக்காரர்கள் பிரபலத்துவம் கொண்டவராக இருப்பார்கள்.
11ல்
ராகு இருந்தால் என்ன பலன்?
👉
கல்வி வேள்விகளில் சிறந்து விளங்கக்கூடியவர்கள்.
👉
பொருள் ஈட்டும் திறமையை கொண்டவர்கள்.
👉
நீண்ட ஆயுளை உடையவர்கள்.
👉
எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றி கொள்ளக்கூடியவர்கள்.
👉
மற்றவர்களுக்கு உதவும் குணநலன்களை கொண்டவர்கள்.
👉
நல்ல நண்பர்களையும், நல்ல கூட்டாளிகளையும் கொண்டவராக இருப்பார்கள்.
👉
சுகபோக வாழ்க்கையை வாழக்கூடியவர்கள்.
👉
செய்யும் காரியங்களில் நுட்பங்களை தெரிந்தவராக இருப்பார்கள்.
👉
வலுவான உடலமைப்பை உடையவர்கள்.
👉
எதையும் விரைவில் கற்றுக்கொள்ள கூடியவர்களாக இருப்பார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக