Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 28 ஜூலை, 2020

வாயில் போட்டதும் கரையும் சூப்பர் பாதுஷா - நம்ம வீட்லயே எப்படி செய்யலாம்?

வாயில் போட்டதும் கரையும் சூப்பர் பாதுஷா - நம்ம வீட்லயே எப்படி செய்யலாம்?

பாதுஷா எல்லோராலும் விரும்பி சாப்பிடும் இந்திய இனிப்பு வகையாகும். இதைச் செய்ய மைதா, சர்க்கரை, நெய் போன்ற சில பொருட்கள் இருந்தாலே போதும் இதை எளிதாக வீட்டிலேயே செய்து சுவைக்கலாம். இந்த இனிப்பை குறிப்பாக தசரா மற்றும் தீபாவளி சமயங்களில் செய்வார்கள். இதன் தித்திக்கும் சுவை உங்கள் நாவையும் தித்திக்க செய்யும். சரி வாங்க இந்த சுவையான பாதுஷாவை எப்படி செய்யலாம் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

முக்கிய பொருட்கள்

  • 2 கப் மைதா மாவு
  • 2 கப் சீனி
  • 1/4 கப் நெய்
  • 1/4 கப் நீர்
  • 1/4 கப் தயிர்
  • 1 உணவு வகைகள் சோடா
  • 4 உணவு வகைகள் ஏலக்காய்
  • 1 கப் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்
Step 1: 

ஒரு பெளலில் 1/4 பங்கு தண்ணீருடன் உருகிய நெய், சோடா மற்றும் மேலே குறிப்பிட்டுள்ள எல்லா பொருட்களையும் (சர்க்கரையைத் தவிர) எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் மைதா மாவை சேருங்கள். இப்பொழுது தயிர் சேர்த்து நன்றாக மாவை பிசையுங்கள். 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
 Step 2: 

மற்றொரு தனியான பாத்திரத்தில் சர்க்கரையைச் சேர்த்து அதில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். சர்க்கரை பாகாக மாற வேண்டும்.

Step 3: 


பாதுஷா உருண்டைகள் தயார் செய்ய கீழ்க்கண்ட வீடியோ உங்களுக்கு உதவியாக இருக்கும். ஒரு சிறிய சிறிய பந்தாக மாவை எடுத்து நடுவில் மட்டும் அழுத்தத்தை கொடுத்து பாதுஷா வடிவில் தட்டிக் கொள்ளுங்கள்.

Step 4: 

ஒரு கடாயில் ஒரு பெளல் எண்ணெயை ஊற்றி நன்றாக சூடுபடுத்துங்கள். இப்பொழுது தட்டிய பாதுஷாவை எண்ணெய்யில் போட்டுப் பொரித்து எடுங்கள். பாதுஷா எண்ணெய்யில் மிதக்க வேண்டும். 15 நிமிடங்கள் உள்ளே நன்றாக வேகும் படி வேக வைக்க வேண்டும். எண்ணெயை மிதமான சூட்டில் வைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் மேலே நிறம் மாறிவிடும். உள்ளே மாவு வேகாமல் இருக்கும்.

Step 5: 

நன்றாக பொன்னிறமாகப் பொரிந்ததும் பாதுஷாக்களை எடுத்து சர்க்கரை பாகில் போட்டு 1 1/2 (ஒன்றரை) மணி நேரம் ஊற வைக்கவும். சுவையான தித்திக்கும் பாதுஷா ரெடி. இனிமேல் கடைக்கு போய்தான் பாதுஷா வாங்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. மிக எளிதாக நீங்களே வீட்டில் செய்துவிடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக