Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

உலகில் மிகவும் எளிதில் கிடைப்பது எது?... படித்ததில் பிடித்தது... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
-------------------------------------

பாபு : ஏன் அந்த கோழியை பிடிக்க பயப்படுற?
ராம் : ஏன்னா... அதான்... நெருப்புக் கோழியாச்சே......
பாபு : 😜😜
-------------------------------------
சீனு : கடி ஜோக் எல்லாம் எழுதுவாரே அவர் எங்க வேலை செய்யுறாரு?
ராஜ் : பிளேடு கம்பெனியிலங்க...
சீனு : 😬😬
-------------------------------------

நோயாளி : ஹலோ டாக்டர்... உங்களை வந்து பாக்கணும்... நீங்க எப்ப ஃப்ரீ?
டாக்டர் : எப்ப வந்தாலும் ஃப்ரீ கிடையாது... பீஸ் வாங்குவேன்...
நோயாளி : 😡😡
-------------------------------------
பொன்மொழிகள்...!!
-------------------------------------

ஒரு முறையாவது உங்களை பற்றி முழுமையாக சிந்தித்துப்பாருங்கள்...
இல்லையென்றால் வாழ்க்கையின் மிகச்சிறந்த நகைச்சுவையை தவற விட்டுவிடுவீர்கள்...
-------------------------------------
சீடனின் கேள்வியும்... குருவின் பதிலும்...!!
-------------------------------------

சீடர் : குருவே உலகில் மிகப்பெரிய பொருள் எது?
குரு : ஆகாயம்.
சீடர் : மனிதரிடம் நீங்கள் காணும் மிகச்சிறந்த ஒன்று எது?
குரு : தன்னம்பிக்கை.
சீடர் : மனித இனம் அபூர்வமாக காணும் ஒரு விஷயம் என்ன?
குரு : சுயக்கட்டுப்பாடு.
சீடர் : உலகை ஆள்வதும், அடக்குவதும் எது?
குரு : எண்ணங்கள்.
சீடர் : உலகில் மிகவும் எளிதில் கிடைப்பது எது?
குரு : அறிவுரை.
சீடர் : உலகில் பெறுவதற்கு கடினமானது எது?
குரு : தன்னை அறிதல்.
-------------------------------------
படித்ததில் பிடித்தது...!!
-------------------------------------

⭐ நமக்கு மட்டுமே அனைத்தும் தெரியும் என எண்ணிவிடாதே...
அறிந்தவன் எல்லோரும் கோபுரத்தில் இருக்க வேண்டும் என அவசியமில்லை...!!

⭐ வென்றவனுக்கு நீங்கள் கைதட்டும்போது அவன் காதுகளுக்கு கேட்காத உயரத்தில் அவன் இருப்பான்...
வெல்லப்போகிறவனுக்கு தோள் தட்டுங்கள்... நீங்கள் என்றுமே அவன் நினைவில் இருப்பீர்கள்...!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக