Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

மகிழ்ச்சியின் எல்லை

முல்லாவின் வீட்டிற்கு அருகில் இருந்த செல்வந்தரிடம் ஏராளமான சொத்துக்கள் நிறைந்து இருந்தன. ஆனால் அந்த செல்வந்தன் ஒருநாள் கூட மகிழ்ச்சியாக இருந்ததில்லை. முல்லா அவர்களே! நான் கொஞ்ச நேரமாவது மகிழ்ச்சியுடன் இருக்க எனக்கு ஒரு யோசனை கூறுங்களே என்றார்.

ஓர் நாள் முல்லா செல்வந்தர் வீட்டிற்கு சென்றார். அந்தச் சமயத்தில் செல்வந்தர் பணப் பெட்டியைத் திறந்து பணமூட்டைகளை எடுத்துப் பார்த்து கொண்டிருந்தார். நண்பரே, என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? நான் முல்லா வந்திருக்கிறேன் என்றார்.

முல்லா உள்ளே வருவதைக் கண்ட செல்வந்தன் அவசர அவசரமாகப் பணப் பைகளைப் பெட்டியில் வைத்துப் பூட்டத் தொடங்கினான். அப்போது அவனுடைய பணப் பைகளில் ஒன்று பணப் பெட்டிக்கு பக்கத்தில் விழுந்து விட்டதைப் பார்த்த முல்லா, உடனே பாய்ந்து சென்று பணப் பையைத் தூக்கிக் கொண்டு வெளியே ஒடினார்.

முல்லா இரண்டொரு தெருக்கள் வழியாக வேண்டுமென்றே ஒடினார். செல்வந்தன் ஐயோ! என்னுடைய பணம், என்னுடைய பணம் என்று கூக்குரலிட்டுக்கொண்டே முல்லாவைப் பின் தொடர்ந்து ஒடினான். முல்லா கடைசியாக செல்வந்தன் வீட்டுக்கே ஒடி வந்தார். பணப்பையை அவனுடைய பணப் பெட்டியின் மீது போட்டார். அப்பா இப்பொழுதுதான் எனக்கு உயிரே வந்தது என்றான் செல்வந்தன்.

முல்லா அவர்களே எதற்காக என் பணத்தைத் தூக்கிக் கொண்டு ஒடினீர்கள். இந்தப் பணம் கிடைக்காவிட்டால் என் உயிரே போயிருக்கும் என்றார். நல்லவேளை பணம் மீண்டும் எனக்கு கிடைத்துவிட்டதால் உயிரும் ஆபத்தில்லை. மேலும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் என்றார். உம்மால் எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை என்று என்னிடம் கூறினீர்கள்தானே, உமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தவே பணத்தைத் தூக்கிக் கொண்டு ஒடினேன் என்றார் முல்லா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக