>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 8 ஜூன், 2020

    சரியான நேரம்... சரியான இடம்... இதை மறவாமல் பயன்படுத்துங்கள்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!

    அம்மா : டாக்டர்... என் மகன் எதை கேட்டாலும் டான் டான்னு பதில் சொல்றான்!
    டாக்டர் : நல்ல விஷயம்தானே.. புத்திசாலிக்குழந்தை.
    அம்மா : இல்லை டாக்டர், வேறு வார்த்தையே சொல்ல மாட்டிங்கிறான்.
    டாக்டர் : 😳😳
    ---------------------------------------------------------------------
                       மதிப்பு...!!
    ---------------------------------------------------------------------
    யாரும் தன்னை தானே முடியாதென்று தாழ்த்தக்கூடாது... என்று ஒரு நாள் கணித ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு கதை சொன்னார். அதாவது ஒரு ஆசிரியர் பூஜ்ஜியம் முதல் அனைத்து எண்களையும் கலந்துரையாடலுக்கு அழைத்தார். நிகழ்ச்சி ஆரம்பிக்கும் சமயம் பூஜ்ஜியம் அங்கு இல்லை என்பது தெரிய வந்தது.

    பின் ஆசிரியர் மற்ற எண்களிடம் பூஜ்ஜியம் ஒளிந்து கொண்டது, என கூறி அதை அழைத்து வருமாறு ஆசிரியர் கூறினார். மற்ற எண்களும் பூஜ்ஜியத்தை அழைத்து கொண்டு வந்தன.

    ஆசிரியர், ஏன் ஒளிந்து கொண்டாய்? என்று கேட்டார். 'நான் வெறும் பூஜ்ஜியம்தானே. என்னை பற்றி யார் கவலைப்படுவார்கள்? எனக்கு மதிப்பே இல்லையே," என்று வருத்தமாக கூறியது.

    புன்னகைத்த ஆசிரியர், 'ஒன்று" என்ற எண்ணை முன்னே வரச்சொன்னார். குழுவினரைப் பார்த்து, 'இதன் மதிப்பு என்ன?" என்றார்.

    ஒன்று என்றன மற்ற எண்கள். அடுத்து பூஜ்ஜியத்தை அதன் அருகில் நிற்க சொன்னார். இப்போது மதிப்பு என்ன? என்று கேட்டார் ஆசிரியர். பத்து! என்று மற்ற எண்கள் உரக்கக் கத்தின.



    அடுத்து பூஜ்ஜியத்தைப் பார்த்து இப்போது தெரிந்து கொண்டாயா? ஒன்று என்ற சாதாரண எண் உன் சேர்க்கையால் பலமடங்கு அதிக மதிப்பு அடைந்ததை பார்த்தாயா? என்றார்.

    எல்லா எண்களும் மகிழ்ச்சியுடன் கை தட்டின. 'ஆமாம்... நான் சரியான இடத்தில் இருந்தால், நானும் பயனுடையவன்தான். நான் மற்றவருடன் சேர்ந்தால் நாங்கள் அனைவருமே அதிக மதிப்பு வாய்ந்தவர் ஆகிறோம்" என்று பூஜ்ஜியம் மகிழ்ந்தது.

    இது போலதான் நாமும்.. நம்மிடம் ஏதாவது ஒரு திறமை இருக்கும். அதை சரியான நேரத்தில், சரியான இடத்தில் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும்.
    ---------------------------------------------------------------------
              சிறந்த வரிகள்...!!
    ---------------------------------------------------------------------
    ⚡ உறுதியற்ற தன்மை உங்கள் பண்பை கெடுக்கிறது.

    ⚡ உங்களால் உறுதியாக எந்த முடிவையும் எடுக்க முடிவதில்லை.

    ⚡ எனவே உறுதியாகவும், மனோதிடத்துடனும் சிந்திக்கவும், செயல்படவும் பழகுங்கள்.

    ⚡ உங்களை பிறர் நம்பும் விதமாக, ஒரே விதமான நல்ல பண்புகளுடன் வாழுங்கள்.

    ⚡ அப்போது உங்களுக்கு பிறருடைய அன்பும், ஆதரவும் கிடைக்கும்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக