திங்கள், 8 ஜூன், 2020

10-ம் வீட்டில் குரு இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

'குரு பார்க்க கோடி நன்மை" என்பது பழமொழி. அத்தனை சக்தி வாய்ந்தது குருவின் பார்வை. இவர் அமரும் வீட்டை விட பார்க்கும் வீட்டிற்குத்தான் யோகம் அதிகம்.

குருவிற்குரிய தேதிகள், கிழமைகள், நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு பல யோகங்கள் உண்டாகும்.

குருவின் அனுக்கிரகம் இருந்தால் பிள்ளைப்பேறு கிட்டும். திருமணத்தடை நீங்கவும், புத்திரபாக்கியம் கிடைக்கவும், உயர்கல்வியில் இடம் பிடிக்கவும் குருவின் அருள் வேண்டி பரிகாரம் செய்கின்றனர்.

லக்னத்திற்கு 10-ம் இடத்தில் குரு நின்றால் அந்த ஜாதகக்காரருக்கு பிரபலமான யோகங்கள் மற்றும் லட்சுமி கடாட்சம் பரிபூரணமாக இருக்கும்.

10ல் குரு இருந்தால் என்ன பலன்?

👉 கண்ணியம் மிகுந்த பெருந்தன்மையான குணம் கொண்டவராக இருப்பார்கள்.

👉 செய்தொழிலின் மூலம் மேன்மை அடையக்கூடியவர்கள்.

👉 பொருள் ஈட்டுவதில் வல்லவர்கள்.

👉 மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்காதவர்கள்.

👉 படிப்படியான முன்னேற்றத்தை அடையக்கூடியவர்கள்.

👉 அமைதியான செயல்பாடுகளை உடையவர்கள்.

👉 வாகனங்களின் மூலம் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.

👉 சாஸ்திர அறிவு, கீர்த்தி மற்றும் அரசு வெகுமதி பெறக்கூடியவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்