Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 8 ஜூன், 2020

முயற்சி செய்பவன்... சோம்பலாய் இருப்பவன்... இறுதியில் பெறுவது என்ன தெரியுமா? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

---------------------------------------------------------------------
      சிரிப்பதற்கான நேரம்...!
---------------------------------------------------------------------
கோபி : மாப்பிள்ளைக்கு ரொம்ப குறும்பு?
ரமேஷ் : ஏன்.. என்னாச்சு?
கோபி : அறுபதாம் கல்யாணத்துலயும் அதே பொண்ணுக்குத்தான் தாலி கட்டணுமான்னு கேக்குறாரு!
ரமேஷ் : 😫😫
---------------------------------------------------------------------
தினேஷ் : வித்தியாசமா இருக்கட்டுமேன்னு, போர்டுக்கு பதிலா டீ-சர்ட்ல 'டு லெட்"-னு எழுதி வாசல்ல தொங்கவிட்டது தப்பா போச்சு...
ரவி : ஏன், என்னாச்சு?
தினேஷ் : எவனோ ஒருத்தன் அந்த டீ-சர்ட்டை எடுத்துக்கிட்டு, அதுக்கு பதிலா அவனோட அழுக்கு பனியன்ல 'Thank You"-னு எழுதி மாட்டிட்டு போயிட்டான்.
ரவி : 😝😝
---------------------------------------------------------------------
பயணி : யோவ் டிரைவர்! பஸ்ஸை நிறுத்து... ஒருத்தர் பஸ்ல இருந்து தவறி விழுந்துட்டாரு.
டிரைவர் : சும்மா இருய்யா! கண்ட இடத்துல பஸ்ஸை நிறுத்துனா கண்டக்டர் என்னை திட்டுவாரு.
பயணி : யோவ்! விழுந்ததே கண்டக்டர்தான்...
டிரைவர் : 😩😩
---------------------------------------------------------------------
ஆசிரியர் : உன்கிட்ட 3 பிஸ்கெட் இருக்கு... அப்போ உன்ன பாக்க உன் Frirnds வராங்க... நீ என்ன பண்ணுவ...?
மாணவன் : பிஸ்கெட்ட மறச்சு வெச்சுருவேன் சார்...
ஆசிரியர் : 😂😂

---------------------------------------------------------------------
             பெண்...!
---------------------------------------------------------------------
👰 பெண் அன்பில் தாய்,

👰 பெண் அழகில் ஒரு தேவதை,

👰 பெண் அறிவில் ஒரு மந்திரி,

👰 பெண் ஆதரவில் ஒரு உறவு,

👰 பெண் வெறுப்பில் ஒரு நெருப்பு,

👰 பெண் வெற்றிக்கு ஒரு மலை,

👰 பெண் தோல்விக்கு ஒரு பள்ளம்,

👰 பெண் நட்பில் ஒரு நேர்மை,

👰 பெண் கண்டிப்பில் ஒரு ஆசிரியர்,

👰 இருந்தாலும் பெண் ஒரு புரியாத புதிர்...!
---------------------------------------------------------------------
          சிறந்த வரிகள்...!!
---------------------------------------------------------------------
வெற்றி எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்காது...
அதேபோலத்தான் தோல்வி திட்டமிட்டது போல நடக்காது...
வாழ்க்கை பல ஆச்சரியம் நிறைந்த பயணம்...
அதில் எது வந்தாலும் மகிழ்ச்சியோடு ஏற்பது சிறப்பு...

வாழ்க்கையில் எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு உண்டு...
முயற்சி செய்து தேடி கண்டுபிடிப்பவன் வெற்றி பெறுகிறான்...
முயற்சியின்றி சோம்பலாய் இருப்பவன் தொடர் தோல்வியில் இருக்கின்றான்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக