Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 8 ஜூன், 2020

You are great... மருமகனின் பேச்சு... சிரிங்க... சிந்தியுங்க... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

---------------------------------------------------------------------
    சிரிக்கலாம் வாங்க...!
---------------------------------------------------------------------
காவலர் : போன்ல உங்களுக்கு கொலை மிரட்டல் விடுறவன், ஒருவேளை நீங்க ஆப்ரேஷன் பண்ணுன பேஷண்ட்டுகள்-ல யாராவதா இருக்குமோ?
டாக்டர் : எனக்கு தெரிஞ்சு, அப்படி யாரும் உயிரோட இருக்கிற மாதிரி தெரியலையே!
காவலர் : 😧😧
---------------------------------------------------------------------
மனைவி : அழகான மனைவியுடன் இருப்பவன் அதிர்ஷ்டசாலியா? அல்லது அறிவான மனைவியுடன் இருப்பவன் அதிர்ஷ்டசாலியா? என்று பட்டிமன்றம் நடந்துச்சே... எந்த அணி ஜெயிச்சுது?
கணவன் : அதுவா... திருமணம் ஆகாதவனே அதிர்ஷ்டசாலி என்று நடுவர் தீர்ப்பு சொல்லிட்டாரு...!
மனைவி : 😏😏
---------------------------------------------------------------------
சிரிங்க... சிந்தியுங்க...!
---------------------------------------------------------------------
நாலு பெண்களைக் கட்டிக் கொடுத்து கடமைகளை முடிச்ச ஒரு மாமனாரிடம் ஒரு மருமகன் பேசிட்டு இருந்தாரு...

மாமா, உங்க கடமையெல்லாம் சரிவர நிறைவேத்திட்டீங்க... பெரிய விஷயம்... 

ஆமாம் மாப்பிள்ளை... சந்தோஷம்... நிம்மதியா இருக்கேன்..

ஒரே ஒரு சின்ன குறைதான் மாமா..

என்னது?

பொண்ணுங்களை கொஞ்சம் புத்திசாலியா வளர்த்திருக்கலாம்..

ஆமால்ல... அத விடுங்க மாப்பிள்ள... அப்புறம் அதுக்கேத்த மாதிரி புத்திசாலி மாப்பிள்ளையா தேடி இருக்கணும். பெரிய வேலையாய் போயிருக்கும்...😱😜😇
---------------------------------------------------------------------
        மனைவிக்காக..!
---------------------------------------------------------------------
💞 விட்டுக்கொடுத்து செல்லுங்கள்,
அவளை விட்டுக்கொடுத்து பேசாதீர்கள்...

💞 தியாகம் செய்யுங்கள்,
அவளின் தியாகத்தை மதிக்காமல் இருக்காதீர்கள்...

💞 கோபம் கொள்ளுங்கள்,
அவளின் கோபத்திற்கு காரணமாகி விடாதீர்கள்...

💞 அழ வையுங்கள் தவறில்லை,
ஆனால் சிரிக்க வைக்க தவறாதீர்கள்...

💞 புரிந்து கொள்ளுங்கள்,
அவளின் புரிதலும் அர்த்தமாகும்...

💞 சந்தோஷப்படுத்துங்கள்,
உங்களின் சந்தோஷத்திற்காக போராடுபவள் அவள்...

💞 அவளிடம் பேசுங்கள்,
அவளுக்காகவும் பேசுங்கள்...

💞 மனைவியிடம் தோற்றுப்போய் பாருங்கள்,
அது அத்தனை அழகானது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக