>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 13 ஏப்ரல், 2020

    இரண்டு கிணற்றுக்கு ஒரு பாலம். அது என்ன? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    கலக்கல் ஜோக்ஸ்!!!
    ஆசிரியர் : உலகம் உருண்டைன்னு சொன்னது யார்?
    மாணவன் : போன வருஷ சயின்ஸ் டீச்சர் சார்...
    ஆசிரியர் : 😠😠
    --------------------------------------------------------------------
    தீபக் : ஏன் சார்.. அடிக்கடி உங்க பேர் மாறுது?
    குமார் : என்ன செய்யறது.. அடிக்கடி என் பேர மாத்தி வெச்சிக்கிறேன்னு பந்தயம் கட்றேனே..
    தீபக் : 😂😂
    --------------------------------------------------------------------
    காதலி : டியர்...! அவுட்டிங் போகலாமா??
    காதலன் : ம்.. போகலாமே!! உனக்கு பசிக்குதா பேபி...
    காதலி : ஆமா.. நல்லா பசிக்குது..
    காதலன் : அப்போ நல்லா சாப்பிடுட்டு வா.. அப்புறம் அவுட்டிங் போகலாம்.
    காதலி : 😳😳
    --------------------------------------------------------------------
    கணவன் : என்ன இது, சாம்பார்ல ரெண்டு ரூபாய் ஊழin கெடக்குது?
    மனைவி : நீங்க தானே சமையல்ல சேஞ்ச் வேணும்னு சொன்னீங்க..
    கணவன் : 😫😫
    --------------------------------------------------------------------
    பொன்மொழிகள்...!!

    🌟 திறமை கொண்ட மனிதனுக்கு தோல்விகள் தொடரலாம்.. வெற்றிகள் தாமதமாகலாம்.. ஆனால் வெற்றி கிடைப்பது உறுதி...

    🌟 உனது பொறுமையே உன் வயதினை சித்தரிக்கும்...

    🌟 சின்னக் கவலைகள் என்பது கொசு போல.. ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தால் அது பறந்து ஓடிவிடும்.

    🌟 ஒரு நாள் ஆத்திரம்.. பல நாள் துக்கத்தை தரும்...

    🌟 கிடைக்கும் போதே பயன்படுத்து... இருக்கும் போதே அனுபவி... நினைத்தவுடன் செய்து முடி... உணர்வுகளுக்கு கட்டுப்பட்டு, உன்னை இழந்து விடாதே.. ஏனென்றால் வாழ்க்கை ஒரே ஒருமுறை...
    --------------------------------------------------------------------
    விடுகதைகள்..!!
    👉 உயிர் இல்லா பறவை. ஊர் ஊராய் பறக்குது. அது என்ன?

    👉 இரண்டு கிணற்றுக்கு ஒரு பாலம். அது என்ன?

    👉 உயர்ந்த கொம்பிலே மலர்ந்த பூ. அது என்ன பூ?

    👉 அறுக்க உதவாத கருக்கு அரிவாள். அது என்ன?

    👉 அள்ளவும் முடியாது. கிள்ளவும் முடியாது. அவன் யார்?

    👉 கல்லை சுமந்தவன் கறிக்கு ருசியானவன். அவன் யார்?

    விடைகள் :

    🌟 கடிதம்
    🌟 மூக்கு
    🌟 குடை
    🌟 பிறைச்சந்திரன்
    🌟 காற்று
    🌟 புடலங்காய்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக