Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 11 ஏப்ரல், 2020

மாதவிடாய் மாதாமாதம் தள்ளிப் போகுதா? இத சாப்பிடுங்க... கரெக்டா 28 நாள்ல வந்துடும்...

உணவுப் பழக்கம், ஊட்டச்சத்து குறைபாடு, ஹார்மோன் சமநிலையின்மை ஆகிய காரணங்களால் மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வருகின்றன. சிலசமயம் தள்ளிப்போதல், வராமலே இருப்பது போன்ற பிரச்சினையெல்லாம் வரும். அதுபோல் முறையற்ற மாதவிடாய் ஏற்படாமல் மிக சரியாக வருவதற்கு எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.
 
உணவுப் பழக்கம், ஊட்டச்சத்து குறைபாடு, ஹார்மோன் சமந்ியைின்மை ஆகிய காரணங்களால் மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வருகின்றன. சிலசமயம் தள்ளிப்போதல், வராமலே இருப்பது போன்ற பிரச்சினையெல்லாம் வரும். அதுபோல் முறையற்ற மாதவிடாய் ஏற்படாமல் மிக சரியாக வருவதற்கு எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.

பெண்களுக்கு மிகவும் பொதுவான பிரச்சினையாக கருதப்படும் ஒழுங்கற்ற மாதவிடாய் மருத்துவ ரீதியாக ‘oligomenorrhea‘என அழைக்கப்படுகிறது. எடை இழப்பு, உடல் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை முறை போன்ற பல்வேறு காரணிகளால் ஏற்படும் இந்த பொதுவான சிக்கல், தேவையற்ற மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை விளைவிக்கும். இதன் காரணமாக பாதுகாப்பான மற்றும் இயற்கையான தீர்வுகளை நோக்கி நாம் போக வேண்டியிருக்கிறது.

இயற்கை நமக்குக் கிடைத்த மிகப்பெரிய கொடை தான் பார்ஸ்லி முதல் வைட்டமின் சி நிறைந்த பழங்கள் வரை எண்ணற்ற உணவுப்பொருள்களை நமக்கு வழங்கியுள்ளது. எல்லா நோய்களுக்குமான தீர்வு என்பது அதில் உண்டு. அந்த இயற்கையின் கொடையான உணவுகளின் மூலமாகவே உங்களுடைய முறையற்ற மாதவிடாயை சரிசெய்து, எப்படி சீக்கிரமாக வரவைக்கலாம் என்று இங்கே விளக்கமாகப் பார்க்கலாம்.

ஓம விதைகள்

ஓமம் வயிறு தொடர்பான பிரச்சினை மற்றும் அஜீரணக் கோளாறுகளை சரிசெய்யும் என்பது நமக்கு மிக நன்றாகத் தெரியும். அதுபோலவே ஓம விதைகள் மற்றும் வெல்லம் ஆகியவற்றின் கலவையானது மாத விடாய் தாமதத்தை சரிசெய்து, கருப்பை சுருக்கங்களை நீக்குவதோடு, மாதவிடாயை முறையாகத் தூண்டவும் உதவும். ஒரு கப் நீரில் 1 தேக்கரண்டி ஓம விதைகளையும் 1 தேக்கரண்டி வெல்லமும் சேர்த்து வேகவைத்து காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளவும்.

பப்பாளி

பப்பாளி சாப்பிட்டால் மாதவிடாய் முறையாக வரும் என்பது நிறைய பேருக்குத் தெரிந்தது தான். முன்கூட்டிய மாத விடாய்களுக்கு இது மிகவும் பயனுள்ள வீட்டு வைத்தியம். பப்பாளி கருப்பையில் உள்ள சுருக்கங்களைத் தூண்டுவதோடு மட்டும் அல்லாமல் மாத விடாய் தூண்டுவதற்கு உதவும். பப்பாளியில் உள்ள கரோட்டின், ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனைத் தூண்டுவதால் இது முன்கூட்டிய மாத விடாய்களுக்கு வழி வகுக்குகிறது. ஒரு நாளைக்கு இரண்டு முறை பப்பாளியை பச்சையாகவோ அல்லது சாறு பிழிந்தோ உட்கொள்ளலாம். ஒரு கப் பப்பாளி சாறு (தோராயமாக 200 மிலி) அல்லது ஒரு கிண்ணம் நிறைய பழுத்த பப்பாளி பழத் துண்டுகளை மாத சுழற்சி காலத்தின் நடுவில் சாப்பிடலாம்.

இஞ்சி

இஞ்சி தேநீர் ஏராளமான உடல்நலக் கோளாறுகளுக்கு மிகவும் சக்திவாய்ந்த துணை மருந்தில் ஒன்றாகும் (மாதவிடாய் ஓட்டத்தைத் தூண்டும் அற்புத பண்புகளைக் கொண்ட மூலிகைகளில் ஒன்று தான் இந்த இஞ்சி. இது பார்ஸ்லி இலைகள் போலல்லாமல் கொஞ்சம் கூடுதல் அமிலத்தன்மை கொண்டது. அதனால் முறையாக எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

இஞ்சியை தேநீருடனோ, தேனுடன் கலந்த இஞ்சி சாறு வடிவிலோ அல்லது வெறும் இஞ்சியை தேனுடன் கலந்தோ உட்கொள்ளலாம். வழக்கமான மாதவிலக்கிற்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு கப் இஞ்சி சாறை தண்ணீருடன் 2: 1 என்ற விகிதத்தில் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வரலாம்.

செலரி ஜூஸ் குடிப்பது பாதுகாப்பான முறையில் மாதவிலக்கை முன்கூட்டிய தூண்டுவதற்கான மிகச் சிறந்த வழிமுறையாகும். இது மிகவும் இயற்கையான, பாதுகாப்பான ஒன்றாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு முறை ஃபிரஷ்ஷாகத் தயாரிக்கப்பட்ட செலரி ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள். அது உங்களுடைய இடுப்புப் பகுதி மற்றும் கருப்பையில் இரத்த ஓட்டத்தை நன்கு தூண்டும் வேலையைச் செய்யும். இது உங்கள் மாதவிடாயை முறையாகத் தூண்டும்.


கொத்தமல்லி விதைகளில் ஏராளமான மருத்துவப் பண்புகள் அடங்கியிருக்கின்றன. அவற்றின் காரணமாக ஒழுங்கற்ற மாத விடாய்களுக்கும் சிறந்த தீர்வாக இந்த கொத்தமல்லி விதைகள் பரிந்துரை செய்யப்படுகின்றது. 2 கப் தண்ணீருடன் 1 தேக்கரண்டி கொத்தமல்லி விதைகளைப் போட்டு ஒரு கப் தண்ணீராக வற்றும் வரை கொதிக்க வைக்கவும். பின்னர் விதைகளை வடிகட்டி எடுத்துவிட்டு, தண்ணீரை ஒரு நாளைக்கு மூன்று முறை வீதம் உங்கள் மாத சுழற்சிக்கு ஒரு வாரம் முன்னதாக இருந்தே தொடர்ந்து தினமும் குடியுங்கள்.
பல நூற்றாண்டு பாரம்பரியமாக , பார்ஸ்லே தழைகள் மாதவிடாயைத் தூண்டுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. "இந்த இலைகளில் உள்ள அபியோல் மற்றும் மிரிஸ்டிசின் என்ற இரண்டு பொருட்கள் , கருப்பையின் சுருக்கங்களைத் தூண்டுவதால் மாத விடாயை வருவதற்கு எளிமைப்படுத்துகிறது. அதனால் ஊட்டச்சத்து நிபுணர்களும் இந்த பார்ஸ்லி இலைகளை எடுத்துக் கொள்ளும்படி பரிந்துரை செய்கின்றனர். உங்கள் தினசரி தேவையாக 6 கிராம் உலர்ந்த பார்ஸ்லி இலை எடுத்துக் கொள்ள வேண்டும். வேண்டும், இது தலா 2 கிராம் என 3 தடவைகளில் 150 மில்லி தண்ணீரில் வேக வைத்து சாப்பிடுங்கள் அல்லது இது கலந்த தேநீர் ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கலாம் .

சீரகம்

இந்தியில் ஜீரா என்றும் அழைக்கப்படும் சீரகம் பார்ஸ்லி போன்ற தாவர குடும்பத்தைச் சேர்ந்தவை. இதே போன்ற பலன்களை அளிக்கிறது. அகம் என்னும் உடலின் உள்புறத்தை சீராக வைத்துக் கொள்வதால் தான் இதற்கு சீரகம் என்று பெயர். அந்த அகம் என்பதற்குள் பெண்களின் கருப்பையும் அடக்கம் தானே. சீரகத்தை எவ்வளவுக்கு எவ்வளவு நம் உணவில் சேர்த்துக் கொள்கிறோமோ அந்த அளவுக்கு வயிறு மற்றும் கருப்பை தொடர்புடைய பிரச்சினைகள் குறைய ஆரம்பிக்கும்.

பெருஞ்சீரகம் விதைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து தேநீர் தயாரிக்கலாம். அதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரலாம், உங்கள் விடாயை ஒழுங்குபடுத்துவதற்கும் ஆரோக்கியம் பெறுவதற்கும் இந்த சோ்புத் தண்ணீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

எவ்வாறு பயன்படுத்துவது: ஒரு கப் தண்ணீரில் 2 தேக்கரண்டி பெருஞ்சீரகம் விதைகளை கலந்து ஒரு இரவு முழுதும் விட்டு விடுங்கள். காலையில் தண்ணீரை மட்டும் வடிகட்டி குடிக்கவும். இந்த முறையிலும் பயன்படுத்தலாம்.

வெந்தய விதைகள் மாதவிடாயை தூண்டுவதற்கு வல்லுநர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. வெந்தயம் உடலின் அதிகப்படியான வெப்பத்தைக் குறைத்து, உடலைக் குளிர்ச்சியாக்குகிறது. வயிறு சம்பந்தப்பட்ட, சருமம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும். அதோடு மட்டுமல்லாது, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியைக் குறைக்கும் ஆற்றல் வெந்தயத்துக்கு உண்டு. வெந்தயத்தை முதல் நாள் இரவே தண்ணீரில் கழுவி விட்டு ஊறவைத்துவிடுங்கள். காலையில் தண்ணீருடன் வேகவைத்து அதை காலையிர் குடித்து வாருங்கள். அதேபோல் மதிய வேளைகளில் மோரில் வெந்தயத்தை ஊறவைத்து குடித்து வாருங்கள்.

மாதுளம் பழம்

மாதுளம் பழங்களின் சாறு மாதவிடாயை தூண்டுவதற்கு உதவியாக இருக்கும். குறிப்பாக, மாதுளம் பிஞ்சை விதையுடன் அதில் உள்ள மெல்லிய வெண்மைநிற தோலுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். இது மாதவிடாய் காலத்து வயிறு வலியைக் குறைக்கும். மாதுளை பூக்களையும் சேர்த்து சாப்பிடலாம். உங்கள் வழக்கமான மாதவிடாய்க்கு 10 முதல் 15 நாட்களுக்கு முன்னதாக ஒரு நாளைக்கு மூன்று முறை தூய மாதுளை சாற்றைக் குடிக்கத் தொடங்குங்கள். கரும்புச் சாறுடன் மாதுளை சாற்றை சம அளவில் கலந்து ஒரு நாளைக்கு நான்கு முறை குடிக்கவும்.​

கற்றாழை

கற்றாழை சாறு பொதுவாக உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சிப் படுத்தும். கற்றாழை உடல் நோய்கள். சருமப் பிரச்சினை, தலைமு பிரச்சினை என எல்லாவற்றுக்குமான தீர்வாக அமையும் அதிசய மூலிகை. கற்றாழையை இரண்டாக வெட்டி அதன் ஜெல்லை பிழிந்து எடுக்கவும்.. ஜெல்லுடன் 1 தேக்கரண்டி தேன் கலந்து காலை உணவுக்கு முன் உட்கொள்ளுங்கள். சில மாதங்களுக்கு இந்த செயல்முறையை மேற்கொண்டால் நல்ல முடிவுகளைப் பெறலாம்.

எள்

எள் உங்கள் மாதவிலக்கை வேகமாகத் தூண்டும் என்பது நம் எல்லோருக்குமே தெரியும். ஆனால் அவை உடலில் அதிக வெப்பத்தை ஏற்படுத்துவதால் மிதமாக மட்டுமே சாப்பிட வேண்டும். அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் மாதவிடாய்க்கு 15 நாட்களுக்கு முன்பு வெப்பத்தை உருவாக்கும் இந்த எள்ளை தினமும் சாப்பிடலாம். நீங்கள் ஒரு நாளைக்கு சூடான நீரில் ஒரு தேக்கரண்டி எள்ளுடன் இரண்டு முறை சாப்பிடலாம். அல்லது தேநீருடன் ஒரு தேக்கரண்டி வறுத்த அல்லது பச்சை எள் ஒரு நாளைக்கு 2-3 முறை உட்கொள்ளலாம். அதுவும் குறைந்த அளவே எடுத்துக் கொள்ளுங்கள்.

வைட்டமின் சி

அதிக அளவிலான வைட்டமின் சி உடலில் ஈஸ்ட்ரோஜனின் அளவை அதிகரிப்பதன் மூலம் மாதவிடாயைத் தூண்டும் ஆற்றல் கொண்டது. இந்த ஹார்மோன் சமநிலை அளவு கருப்பைச் சுருக்கங்களைத் தூண்டுவதோடு , இரத்தப் போக்கின் அளவையும் அதிகரிக்கிறது. வைட்டமின் சி புரோஜெஸ்ட்டிரோன் அளவைக் கட்டுப்படுத்துவதால் கருப்பைச் சுவர்களின் முறிவைத் தொடங்கி, முன்கூட்டியே மாதவிடாயை வரவழைக்க வழிவகுக்கிறது. வைட்டமின் சி நிறைந்த உணவுகளான சிட்ரஸ் பழங்கள், கிவி மற்றும் தக்காளி, ப்ரோக்கோலி, பெல் பெப்பர்ஸ் போன்ற காய்கறிகள் உங்கள் அன்றாட உணவில் கட்டாயமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக