Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 11 ஏப்ரல், 2020

சாப்பிட்டா வயிறு உப்புற மாதிரி இருக்கா? சாப்பிடதுக்கு முன்னாடி இத ஒரு ஸ்பூன் குடிங்க..

சிலருக்கு சாப்பிட்டு முடித்ததும் வயிறு உப்பியது போல பெரிதாகிவிடும். சிலர் திம்மென்று என்று வயிறு இருப்பதாக உணர்வார்கள். அதற்கு வாய்வுத்தொல்லை, அஜீரணக்கோளாறு போன்ற பல காரணங்கள் இருக்கின்றன. அப்படி ஆகாமல் எப்படி தவிர்ப்பது என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
 
சிலருக்கு சாப்பிட்டு முடித்ததும் வயிறு உப்பியது போல பெரிதாகிவிடும். சிலர் திம்மென்று என்று வயிறு இருப்பதாக உணர்வார்கள். அதற்கு வாய்வுத்தொல்லை, அஜீரணக்கோளாறு போன்ற பல காரணங்கள் இருக்கின்றன. அப்படி ஆகாமல் எப்படி தவிர்ப்பது என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சாப்பிட்ட பிறகு உங்கள் வயிறு வீங்கியதாக உணரும்போது அதனை வயிறு உப்புசம் அல்லது வயிறு மாந்தம் என்று கூறுவார்கள். இந்த வீங்கிய வயிறு உங்களுக்கு அசௌகரியத்தையும், குமட்டலையும், உங்கள் வழக்கமான வேலையைச் செய்வதில் சிரமத்தையும் ஏற்படுத்தும். இதை எப்படி வீட்டு வைத்தியத்தின் மூலம் எந்த வித மாத்திரை, மருந்துகளும் இல்லாமல் சரிசெய்ய முடியும். அதுவும் உப்பசம் வருவதற்கு முன்னமே எப்படி தவிர்க்க முடியும் என்று தெளிவாகப் பார்க்கலாம். அதனாலேயே சிலர் ஒவ்வொரு முறை சாப்பிட்டு முடித்த பின்னும் லெமன் சோடா, ஈனோ என எதையாவது குடித்துக் கொண்டே இருப்பார்கள். அதெல்லாம் இனி தேவையு இல்லை.​

ஏன் உண்டாகிறது?

வயிற்றுப் பகுதியில், அதிகப்படியான வாயு உற்பத்தி அல்லது செரிமான அமைப்பின் தசைகளின் இயக்கத்தில் ஏற்படும் தொந்தரவு காரணமாக சாப்பிட்டு முடித்ததும் வயிற்றில் வீக்கம் ஏற்படுகிறது. இது வலியை உண்டாக்கும். மேலும் வயிறு அடைத்தது போன்ற உணர்வு மற்றும் ஒருவித அசௌகரியம் போன்றவை உண்டாகும். உப்புசம் என்பது உங்கள் செரிமான அமைப்பில் அதிகப்படியான திடப்பொருள்கள், திரவங்கள் அல்லது வாயுவைக் குறிக்கிறது. சுமார் 16-30 சதவிகித மக்கள் வழக்கமான வயிறு உப்புசத்தை அனுபவித்ததாக தெரிவிக்கின்றனர். அதனால் தான் பெரியவர்கள் காலை எழுந்ததும் இரவு முழுக்க காலியாக இருக்கும் வயிற்றில் திட உணவை எடுக்காமல் நீராகாரம் சாப்பிட்டு வந்திருக்கிறார்கள்.
எப்படி சரி செய்வது

ஒவ்வொரு முறை சாப்பிடுவதற்கும் ஒரு 20 நிமிடங்களுக்கு முன்னால், கீழே சொல்லப்படும் இந்த பானத்தைக் குடித்து வாருங்கள். ஓரிரு வாரங்களிலேயே உங்களுக்கு இருக்கும் இந்த வயிற்றுப் பிரச்சினைகள் முழுமையாக குணமாகிவிடும்.

1 கிளாஸ் (200-250 மில்லி) தண்ணீர்

2 தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகர்.

செய்முறை

ஒரு கிளாஸ் தண்ணீரில் ஆப்பிள் சைடர் வினிகரை முன் குறிப்பிட்ட அளவுகளில் கலந்து, ஒழுங்காக கிளறவும். இப்போது உங்கள் பானம் தயாராக உள்ளது.

ஆப்பிள் சைடர் வினிகரின் சுவை மிகவும் கடினமாக இருந்தால், இரண்டிற்கு பதிலாக ஒரு தேக்கரண்டி மட்டுமே சேர்த்துக் கொள்ளலாம்.

ஏன் ஆப்பிள் சீடர் வினிகர்?

பயனுள்ள முடிவுகளைக் காண உங்கள் காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு 20-30 நிமிடங்களுக்கு முன்பு இந்த பானத்தை உட்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், நீங்கள் பயன்படுத்தும் ஆப்பிள் சைடர் வினிகரில் பாரம்பரிய கலாச்சார முறையில் தயாரிக்கப்பட்டிருப்பதை (mother culture)உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் ஆர்கானிக்காக இல்லை என்றால், அது பயனில்லை. மதர் கல்ச்சர் என்பது சுத்திகரிக்கப்படாத, பதப்படுத்தப்படாத மற்றும் வடிகட்டப்படாத ஆப்பிள்சீடர் வினிகர் ஆகும். தாய் கலாச்சார முறை சரியான பாக்டீரியாவை உங்கள் உடலில் ப்ரீபயாடிக் ஆக செயல்பட உதவுகிறது.


இந்த பானத்தைப் பருகுவதால் உணவுக்குப் பிறகு நீங்கள் அனுபவிக்கும் வீக்கம், வாய்வு மற்றும் வாயு உணர்வை குறைக்க உதவும். இந்த பானம் உங்கள் வயிற்றில் இன்னும் கொஞ்சம் அமிலங்களை சுரக்க உதவுகிறது, இது நாம் உண்ணும் உணவில் இருந்து புரதம் மற்றும் பாக்டீரியாக்கள் உடைக்கப்பட உதவுகிறது. உங்கள் குடல் ஆரோக்கியத்திற்கும் இந்த பானம் சிறந்தது.

பட்டையும் சேர்க்கலாம்

நீங்கள் தினமும் இரண்டு முறை இந்த பானம் சாப்பிடுகிறீர்களானால், ஒரு முறை ஒரு சிறிய அளவு இலவங்கப்பட்டை தூள் சேர்த்து இந்த பானத்தைப் பருகலாம். ஒவ்வொரு முறை உணவிற்கும் பிறகு ஏற்படும் இரத்த சர்க்கரை உயர்வைக் கட்டுப்படுத்த இந்த பானம் உதவும். சிலருக்கெல்லாம் இந்த பிரச்சினை வருடக் கணக்கில் இருக்கும். அவர்கள் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் காண விரும்பினால், குறைந்தபட்சம் 2-3 வாரங்களுக்கு இந்த பானத்தை தவறாமல் உட்கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக