தற்போதைய பதிவுகள்
Loading latest posts...

Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 22 ஆகஸ்ட், 2022

குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டு செல்லும் போது பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை.!

திங்கள், ஆகஸ்ட் 22, 2022
தங்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட பெற்றோர்கள் பெரிதும் விரும்புகிறார்கள். ஆனால் இருவரும் வேலைக்கு சென்றால் தான் குடும்பத்தை நன்றாக நடத்த முடியும் என்ற கட்டாயம் உள்ள இந்த நவீன காலத்தில், குழந்தையை டேகேர் அல்லது வீட்டில் தனியாக விட்டுச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

உங்களது குழந்தையை நீங்கள் விரும்பியோ, விரும்பாமலோ, வேலை அல்லது ஏதாவது எமெர்ஜென்சி காரணமாக சில மணிநேரங்களாவது வீட்டில் தனியாக விட்டுச் செல்ல வேண்டிய சூழல் ஏற்படும். இது போன்ற தவிர்க்க முடியாத நேரத்தில் அவர்களை வீட்டில் தனியாக இருக்க தயார்படுத்துவது சிறந்தது. நீங்கள் தொலைவில் இருக்கும் போது சுதந்திரமாக செயல்பட, உங்களையே நம்பியிருப்பதைத் தவிர்க்க குழந்தைகளுக்கு உதவும். அதே போல குழந்தைகள் தனியாக வீட்டில் இருக்கும் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்ய கூடாதவை பற்றி அவர்களுக்கு கற்பிப்பது முக்கியம்.

உங்கள் குழந்தைகளை வீட்டில் தனியாக இருக்க விடும் முன் நீங்கள் பின்பற்ற வேண்டிய சில குறிப்புகள் இங்கே...

எமர்ஜென்சிக்கு சில நம்பர்கள்..

ஒரு குழந்தை தனியாக இருக்கும் நேரத்தில் குறைந்தபட்சம் உங்களது மொபைல் நம்பர் உட்பட 3 முதல் 5 அவசரகால தொடர்பு நம்பர்களையாவது மனதளவில் அறிந்து வைத்திருப்பது அவசியம். இதில் பெற்றோர், நெருங்கிய உறவினர் மற்றும் நம்பகமான அண்டை வீட்டாரின் தொலைபேசி எண்கள் இருக்க வேண்டும். தவிர அவசரநிலை ஏற்பட்டால் ஆம்புலன்ஸ், தீயணைப்புப் படை மற்றும் காவல்துறை போன்ற பிற அவசர தொடர்பு எண்களை பற்றியும் குழந்தைகளுக்குச் சொல்லி அவற்றை எழுதிய டைரியை அவர்கள் கைகளுக்கு எட்டும் தூரத்தில் வைக்க வேண்டும். வெளியில் இருந்தாலும் வீட்டிற்கு அடிக்கடி கால் செய்தோ அல்லது அக்கம்பக்கத்தினரை அடிக்கடி கண்காணிக்கவோ கேட்கலாம்.

சில ரூல்ஸ் அவசியம்:

குழந்தைகள் வீட்டில் தனியாக இருக்கும் போது நாள் முழுவதும் டிவி பார்ப்பது அல்லது வீடியோ கேம்ஸ் விளையாடுவது போன்றவற்றில் ஈடுபட்டால் அதை கட்டுப்படுத்த சில அடிப்படை ரூல்ஸ்களை கடைபிடிக்க வைப்பது மிகவும் முக்கியம். எனவே நீங்கள் சில பேசிக் ரூல்ஸ்களை உருவாக்கி, அதை கடைபிடிப்பது ஏன் அவசியம் என்பதை அவர்களுக்கு முதலில் புரிய வைக்க வேண்டும். குழந்தைகள் டிஜிட்டல் ஸ்கிரீன்களில் நேரத்தை செலவிடுவதை தவிர்க்க கலைபொருட்கள் செய்வது அல்லது புதிர் விளையாட்டுகளில் ஈடுபடும் பழக்கத்தை ஏற்படுத்தி ஊக்குவிக்கலாம்.

பாதுகாப்பு முக்கியம்:

ஒரு குழந்தை வீட்டில் தனியாக இருக்கும் போது அதன் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. உங்கள் குழந்தை அடுப்பு, தீப்பெட்டி, கத்தி, பிளேடுகள், மருந்துகள் உள்ளிட்ட இன்னும் பல அபாயகரமான பொருட்களை தனியே இருக்கும் போது பயன்படுத்தாமல் பார்த்து கொள்வது அவசியம். தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்களை உங்கள் பிள்ளையின் கை மற்றும் பார்வைக்கு எட்டாதவாறு வைப்பது நல்லது. அதே போல தீ, கொள்ளை, மருத்துவ நெருக்கடிகள் அல்லது வேறு ஏதேனும் அவசரகால சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது என்பதை அவர்களுக்கு கற்று கொடுப்பதும் முக்கியம். தீ விபத்து ஏற்பட்டால் தீயை அணைக்கும் கருவியை எப்படி பயன்படுத்துவது, முதலுதவி பெட்டியை எவ்வாறு பயன்படுத்துவது உள்ளிட்டவற்றை கற்று கொடுக்க வேண்டும்.

அத்தியாவசிய உணவுகள்..

குழந்தையை தனியாக விட்டு செல்லும் முன் அவர்கள் அணுகுமாறு அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுகள் இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். சில பழங்கள், ஆரோக்கியமான தின்பண்டங்கள் அல்லது உணவுகளை அவர்கள் லிதில் எடுத்து சாப்பிடும் வகையில் வைத்து செல்ல வேண்டும். கரண்ட் போகும் சூழலை அவர்கள் சமாளிக்க மின் விளக்குகளையும் அவர்களுக்கு கொடுத்து வைக்க வேண்டும்.

கதவை திறப்பதில் கவனம்..

வீட்டில் யாரும் இல்லாத போது கதவு தட்டும் சத்தம் அல்லது காலிங் பெல் சத்தம் கேட்டால் கதவை திறப்பதற்கு முன், வெளியில் யார் இருக்கிறார்கள், எதற்காக இங்கே வந்திருக்கிறார்கள் என்பதை உங்கள் குழந்தை கேட்டறிந்து பின் கதவை திறப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். தெரியாத புது நபர்கள் வந்தால் கட்டாயம் கதவை திறக்கவே கூடாது என்பதை அவர்களுக்கு தெளிவாக புரிய வைக்க வேண்டும்.

சனி, 24 ஜூலை, 2021

விந்தணு குறையாமல் இருக்க இந்த ‘5’ உணவுகளை ஆண்கள் தவிர்க்க வேண்டும்..!

சனி, ஜூலை 24, 2021
விந்தணு குறையாமல் இருக்க இந்த ‘5’ உணவுகளை ஆண்கள் தவிர்க்க வேண்டும்..!

புதுடெல்லி: ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பற்றி கூறுகையில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் தினசரி உணவு தேர்வுகள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. இருப்பினும், ஆண்கள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் உள்ளன. ஏனென்றால், அது அவர்கள் திருமண வாழ்க்கையை பாதிக்கக்கூடும்

1. சோயா உணவுகள்

சோயா தயாரிப்புகளில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் ( phytoestrogens)  அதிகம் உள்ளன. பைட்டோ ஈஸ்ட்ரோஜன்களை அதிகமாக உட்கொள்வது உடலின் ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கும் என்று சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பாஸ்டனில் உள்ள விந்தணு குறைபாடுகளுக்காக சிகிச்சை பெற்று வரும் 99 ஆண்களின் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, அதிகப்படியான சோயா உட்கொள்வதால் விந்தணு குறையக்கூடும் என்பது தெரிய வந்துள்ளது. 

2. டிரான்ஸ் கொழுப்புகள் (Trans Fats)

டிரான்ஸ் கொழுப்பு உள்ள உணவுகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆரோக்கியமற்றதாகக் கருதப்படுகின்றன. டிரான்ஸ் கொழுப்புகள் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது என்றாலும், ஆண்களுக்கு இது விந்தணு குறைபாட்டை ஏற்படுத்தும் என  2011 ஆம் ஆண்டு ஸ்பானிஷ் நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

3. பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் (Processed Meats)

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை அதிகமாக எடுத்துக் கொள்வதால், விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதாக கூறப்படுகிறது. இருப்பினும், அதே ஆய்வுகளில், சிக்கன் சாப்பிடுவதற்கும் விந்தணு ஆரோக்கியத்திற்கும் எந்த தொடர்பும் இருப்பதாக உறுதிபடுத்தப்படவில்லை

4. பூச்சிக்கொல்லிகள் மற்றும் பிஸ்பெனால்-ஏ (BPA)

பூச்சிக்கொல்லிகளை நாம் நேரிடையாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், நல்ல விளைச்சல் கொடுக்க பயிர்களில் பயன்படுத்தப்படும், பூச்சிக் கொல்லிகள் மற்றும் ரசாயனங்கள், நாம் உட்கொள்ளும் காய்கறிகள் மற்றும் பழங்களின் மூலம் உணவில் சேருகின்றன. அதோடு, பேக்கேஜிங் மற்றும் கேன்களில் உள்ள உணவுகளில் பிபிஏ மற்றும் பூச்சிக்கொல்லிகளில் உள்ள ரசாயனங்கள் இரண்டும் ஜீனோஎஸ்ட்ரோஜன்களாக செயல்படுகின்றன. Xenoestrogens என்பவை ஈஸ்ட்ரோஜனைப் போலவே செயல்படும்  இரசாயனம். சோயாவில் உள்ள பைட்டோ எஸ்ட்ரோஜன்களைப் போலவே, ஜீனோ ஈஸ்ட்ரோஜன்களும் விந்தணு எண்ணிக்கையை குறைக்கக் கூடும் என ஆய்வுகள் கூறுகின்றன. அதனால், காயக்றி, பழங்களை நன்றாக உப்பு மற்றும் மஞ்சள் கலந்து நீரில் சுத்தம் செய்து சாப்பிடுவது பொதுவாக எல்லோருக்குமே நல்லது. 

5. அதிக கொழுப்பு உள்ள பால் பொருட்கள்

அதிக கொழுப்பு பால் பொருட்கள் அதிகம் எடுத்துக் கொள்வதும் விந்தணுக்களை குறைக்கும். Rochester Young Men நடத்திய ஆய்வில், 18-22 வயதுக்குட்பட்ட 189 ஆண்கள் மீது விந்துணவுக்களின் அளவு மற்றும் உணவிற்கு இடையிலான தொடர்பு பற்றி பகுப்பாய்வு நடத்தப்பட்டது. அதிக கொழுப்புள்ள பால் பொருட்கள் (கொழுப்பு நீக்கப்படாத பால், கிரீம் மற்றும் சீஸ்) ஆகியவை காரணமாக விந்தணு குறைவாக இருந்தது தெரிய வந்துள்ளது. 

பொதுவாக, அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு எனக் கூறுவது போல், எதையும் அதிகமாக உட்கொள்வது நிச்சயமாக ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. எனவே, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ புத்திசாலித்தனமான மற்றும் சிறந்த உணவு தேர்வுகளை செய்யுங்கள்.

புதன், 16 ஜூன், 2021

பாலூட்டும் தாய்மார்கள் மறந்தும் இவற்றை சாப்பிடக் கூடாது

புதன், ஜூன் 16, 2021
புதிதாக பிறந்த குழந்தை தாய்ப்பாலை மட்டுமே சார்ந்திருப்பதால், தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்கள் (Breastfeeeding Mothers) தங்களது உணவுகள் மற்றும் பானங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியமாகும். சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, தாய்ப்பால் குடிப்பது குழந்தைகளை அனைத்து விதமான நோய்களிலிருந்தும் காப்பாற்றும். 

தாய்ப்பால் கொடுக்கும் போது, ​​உடல் ஆண்டியாக்சிடெண்ட் ஹார்மோனை வெளியிடுகிறது. இது குழந்தைகளின் ஆரோக்கியத்தை நன்றாக வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், தாய் மற்றும் குழந்தையின் பிணைப்பையும் பலப்படுத்துகிறது. எனினும், இவை அனைத்தும், தாய்ப்பால் கொடுக்கும் போது தாய் சரியான உணவை உட்கொண்டால் மட்டுமே சாத்தியமாகும். 

உணவியல் நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங் கருத்துப்படி, தாய்ப்பால் கொடுக்கும் போது சில உணவுகளை உட்கொள்வது ஆரோக்கியமற்றதாக கருதப்படுகிறது. பாலூட்டும் பெண்கள் எவற்றையெல்லாம் சாப்பிடக்கூடாது என்று இங்கே பார்க்கலாம்: 

சிட்ரஸ் பழங்களை உட்கொள்வது தீங்கு விளைவிக்கும்

டாக்டர் ரஞ்சனா சிங்கின் கருத்துப்படி, வைட்டமின் சி கொண்ட சிட்ரஸ் பழங்களை (Citrus Fruits) உட்கொள்வது பாலூட்டும் பெண்களுக்கு ஏற்றதல்ல. பாலூட்டும் தாய் இந்த பழங்களை உட்கொள்ளும்போது, ​​பாலில் அமிலம் உருவாகத் தொடங்குகிறது. இந்த அமிலம் பாலுடன் குழந்தையின் உடலுக்குச் செல்கிறது, இது வயிற்று வலி, வயிற்றுப்போக்கு மற்றும் எரிச்சல் ஆகியவற்றை அதிகரிக்கிறது.

கோதுமை சாப்பிட வேண்டாம்

பாலூட்டும் தாய்மார்கள் கோதுமையால் செய்யப்படும் ரொட்டியை சாப்பிடக்கூடாது என்று டாக்டர் ரஞ்சனா சிங் கூறுகிறார். ஏனெனில் கோதுமையில் குளூடன் என்ற புரதம் உள்ளது. இது பல சமயம் பச்சிளம் குழந்தைகளுக்கு பிரச்சனையை ஏற்படுத்துகிறது. தாய்ப்பால் குடிக்கும் குழந்தையின் மலத்தில் இரத்தம் காணப்பட்டால், அது குளூடன் சகிப்பின்மை காரணமாக இருக்கலாம். மேலும், இதனால் குழந்தைகளுக்கு வயிற்று வலி மற்றும் எரிச்சலும் ஏற்படலாம். 

காபி குடிக்க வேண்டாம்

பாலூட்டும் பெண்களுக்கு காபி (Coffee) மிகவும் தீங்கு விளைவிக்கும் என்று டாக்டர் ரஞ்சனா சிங் கூறுகிறார். காபியில் காஃபின் ஏராளமாக உள்ளது. இது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதிக அளவு காஃபின் உட்கொள்வது குழந்தைகளுக்கு வயிற்று வலி மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும்.

காரமான, மசாலா கொண்ட உணவை தவிர்க்கவும் 

பாலூட்டும் பெண்கள் காரமான, மசாலா பொருட்கள் சேர்த்த உணவை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதிக காரமான உணவை சாப்பிட்டால், அந்த காரத்தன்மை பாலிலும் கலந்து குழந்தையின் மிருதுவான வயிற்றை பாதிக்கக்கூடும். வயிற்று வலி பிரச்சனையும் ஏற்படலாம். பாலூட்டும் தாய்மார்கள் மசாலா பொருட்களை உட்கொண்டால், அது தாய்க்கும் சேய்க்கும் அஜீரணத்தை உண்டு பண்ணலாம்.

வெள்ளி, 11 ஜூன், 2021

விந்தணுக்கள் யோனிக்கு உள்ளேயும், வெளியேயும் எவ்வளவு நாட்கள் உயிருடன் இருக்கும் தெரியுமா?

வெள்ளி, ஜூன் 11, 2021

இயற்கையாக கருத்தரிப்பதற்கு, ஒருவர் சாதாரண விந்து அளவுருக்களைக் கொண்டிருக்க வேண்டும். கருமுட்டையை கருத்தரிக்க வைக்க மில்லியன் கணக்கான விந்தணுக்கள் தேவைப்படுகின்றன. ஒரு டீஸ்பூன் விந்துகளில் 100-600 மில்லியன் விந்தணுக்கள் இருப்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் அளவு, எண்ணிக்கை, இயக்கம் மற்றும் உருவவியல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பொறுத்தது.

கர்ப்பத்தில் சிக்கல்

மேற்கூறிய அளவுருக்களில் ஏதேனும் சிக்கல் இருந்தால், அது இயற்கையான கருத்தாக்கத்தை கடினமாக்கும். இந்த தருணத்தில்தான் இதற்கான காரணங்கள் மற்றும் சிகிச்சையை அறிய உங்களுக்கு கருவுறுதல் நிபுணரின் ஆலோசனை தேவைப்படும். இந்த மில்லியன் விந்தணுக்களில், 10-20 மட்டுமே முட்டையை அடைகின்றன.

யோனிக்கு உள்ளேயும், வெளியேயும் விந்தணுக்கள் எவ்வளவு காலம் உயிரோடு இருக்கும்

விந்தணுக்கள் யோனிக்கு உள்ளே மட்டுமல்ல, விந்தணுக்கள் உடலுக்கு வெளியே உயிர்வாழ முடியும், ஆனால் 20-30 நிமிடங்கள் மட்டுமே. வெப்பமான சூழலில் விந்தணுக்கள் சில நொடிகள் முதல் நிமிடங்கள் வரை மட்டுமே உயிருடன் இருக்கும். பாதுகாப்பற்ற உடலுறவுக்குப் பிறகு, விந்தணுக்கள் பெண் பிறப்புறுப்பில் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை உயிர்வாழும். பிறப்புறுப்புக் குழாயிலிருந்து சுரப்பு விந்தணுக்களுக்கு ஊட்டச்சத்தை அளிக்கிறது. படிப்படியாக இயங்கும் விந்து கருப்பை வழியாக கர்ப்பப்பை வாய் சுரப்பு வழியாக நீந்துகிறது, பின்னர் கருமுட்டையை நோக்கி ஃபலோபியன் குழாய் வழியாக நீந்துகிறது.

கருத்தரிக்க என்ன செய்ய வேண்டும்?

கர்ப்பம் தரிக்க, அண்டவிடுப்பின் போது விந்தணுக்கள் பிறப்புறுப்புக் குழாயில் இருக்க வேண்டும், ஏனெனில் விந்தணுவுடன் ஒப்பிடும்போது முட்டையின் ஆயுள் மிகக் குறைவு. உறைந்த நிலையில் விந்தணுக்கள் பல ஆண்டுகளாக உயிர்வாழும். அவை பல்வேறு மருத்துவ காரணங்களுக்காக உறைந்திருக்கின்றன, அவை ஆண் கருவுறுதலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

விந்தணுக்கள் எப்படி யோனியில் எப்படி பாதிப்பை ஏற்படுத்தும்?

உடலுறவிற்குப் பிறகு உங்கள் யோனியில் வித்தியாசமான வாசனை வந்தால் அது உங்கள் யோனியில் உள்ள விந்து ஆரோக்கியமாக இல்லை என்பதற்கான அறிகுறியாகும். மேலும் விந்தணுக்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்பதையும் இது குறிக்கலாம். பாதிக்கப்படாத விந்துவாக இருக்கும் பட்சத்தில், அது உங்கள் யோனிக்குள் சுய சுத்தம் செய்யும் திறன் காரணமாக அழுகாது. ஆரோக்கியமற்ற விந்து உங்கள் யோனியின் பயோமை ஆரோக்கியமான பாக்டீரியாவைக் கொல்லும், இது பாக்டீரியா வஜினோசிஸ் மற்றும் ஈஸ்ட் தொற்று போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இது சிறுநீர் பாதை நோய்த்தொற்று மற்றும் பாலியல் பரவும் நோய்த்தொற்றுக்கு வழிவகுக்கும்.

சனி, 30 ஜனவரி, 2021

குழந்தைக்கு மூச்சு விட சிரமமா இருக்கும் போது நெபுலைசர் பயன்படுத்தலாமா? அது நல்லதா?

சனி, ஜனவரி 30, 2021

குழந்தைக்கு சளியோடு கூடிய காய்ச்சல் காலங்களில் அவர்கள் மூச்சு விடுதலில் சிரமத்தை உணர்ந்தால் மருத்துவர் நெபுலைசர் பயன்படுத்துவார். இதை குழந்தைகள் இருக்கும் வீட்டில் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்துள்ளது.குழந்தைக்கு மூச்சு விட சிரமமா இருக்கும் போது நெபுலைசர் பயன்படுத்தலாமா? அது நல்லதா?

ஆஸ்துமா, அதிகமான சளி, மூச்சுத்திணறல், சுவாசக்கோளாறு பாதிப்பு கொண்டிருப்பவர்களுக்கு உடனடியாக நிவாரணம் அளிக்க அறிமுகப்படுத்தப்பட்டது தான் நெபுலைசர். இதை மூக்கில் பொருத்தும் போது அதில் இருக்கும் மருந்து சுவாசப்பாதையில் உள்ள சளியைக் கரைக்க செய்கிறது. இது நுரையீரலுக்கு சென்று அங்கிருக்கும் குறைபாட்டையும் போக்குகிறது. பயன்படுத்திய உடனேயே இது பலன் கொடுக்க கூடியது என்பதால் இதை எல்லோருமே விரும்புகிறார்கள்.

பொதுவாக ஆஸ்துமா நோயாளிகளுக்கு இன்ஹேலர் என்னும் சிறிய கருவியில் மாத்திரையை போட்டு அதிக அழுத்தம் கொடுத்து உள்ளே இழுப்பார்கள். ஆனால் நெபுலைசர் பயன்பாடு அதை காட்டிலும் எளிதானது.

அதோடு அவ்வபோது மருத்துவமனைக்கு சென்று பயன்படுத்தி வரலாம். நெபுலைசர் கருவி குறைந்த விலை என்பதால் இதை வீட்டிலும்வாங்கி பயன்படுத்துவது எளிதாக இருப்பதால் எல்லோரும் இதை வாங்க விரும்புகிறார்கள்.

குறிப்பாக குழந்தைகள் இன்ஹேலர் பயன்படுத்துவதை காட்டிலும் நெபுலைசர் பயன்படுத்துவதையே விரும்புகிறார்கள் என்பதும் நெபுலைசர் மீதான ஈர்ப்புக்கு காரணமாகிறது.


ஒரு வயது குழந்தை முதல் ஏழு வயது குழந்தைகள் வரை தான் அதிகமாக மூச்சுத்திணறல் ஆஸ்துமா பிரச்சனைகளை கொண்டிருக்கிறார்கள். மருத்துவரக்ள் அவர்களுக்கு இன்ஹேலர் மருந்து மாத்திரைகளை பரிந்துரைத்தாலும் அவர்கள் நெபுலைசர் உடனடியாக தீர்வு தருகிறது என்று நினைக்கிறார்கள்.

உண்மையில் நிரந்தரமாக குழந்தைகள் இந்த பிரச்சனையிலிருந்து விடுபட வேண்டுமெனில் அதற்கு நெபுலைசர் சிறந்த தீர்வாக இருக்காது (குழந்தைகளை தவிர்த்து). மருத்துவரின் ஆலோசனையோடு மிகவும் அவசியம் என்னும் போது மட்டுமே நெபுலைசர் பயன்படுத்த வேண்டும்.

நெபுலைசர் திரவ மருந்தை சுவாச அமைப்பு முதல் நுரையீரல் வரை உள்ளே செலுத்தும் ஒரு சிறிய சாதனம் ஆகும். மருந்து கப் எடுத்து சில துளிகள் சேர்த்து ஏர் கம்ப்ரசர் இயக்கி குழந்தையின் முகத்தில் முகமூடியை போல் மாட்ட வேண்டும்.

நெபுலைசர் இன்ஹேலர் போல் அல்லாமல் எவ்வளவு மருந்தையும் உள்ளே செலுத்த முடியும். இதனால் அளவுக்கு மீறி மருந்து சென்று விட வாய்ப்புண்டு. அனால் இன்ஹேலர் ஒரு முறை குறிப்பிட்ட அளவு மட்டுமே மருந்துகளை வழங்க முடியும்.

நெபுலைசரில் பலவிதமான மருந்துகளை சேர்த்து பயன்படுத்தலாம் இன்ஹேலர் ஒரு மருந்தை மட்டுமே பயன்படுத்தக்கூடியது. அதே நேரம் மிகச்சிறிய குழந்தைகளுக்கு நெபுலைசர் பயன்படுத்த எளிதானது. ஆனால் இன்ஹேலர் சிறுவர்களுக்கும், பெரியவர்களும் மட்டுமே பயன்படுத்த முடியும்.நெபுலைசர் ஜெட் நெபுலைசர், மெக்கானிக்கல் நெபுலைசர், அல்ட்ராசோனிக் நெபுலைசர், வைப்ரேட்டிங் நெபுலைசர் என்று நான்குவிதங்களில் உள்ளது.

குழந்தைகளுக்கு நெபுலைசர் பயன்படுத்துவது நல்லதா?

குழந்தைகளுக்காகத்தான் நெபுலைசர். அதே நேரம் எல்லா நேரங்களிலும் இதை பயன்படுத்த கூடாது. இயற்கையாக சுவாசிக்க முடியாமல் திணறும் குழந்தைகளுக்கு இன்ஹேலரை உபயோகிக்க முடியாது. அப்போது நெபுலைசர் பயன்படுத்தலாம்.

குழந்தைகளுக்கு நெபுலைசர் எப்போதெல்லாம் தேவைப்படும்.

குழந்தைக்கு நாள்பட்ட சுவாச நிலைமைகள் இருக்கும் போது அவர்களுக்கு நெபுலைசர் தேவைப்படலாம். இது சுவாச அமைப்பு விரிவாக்க உதவக்கூடியது. மார்பு நெரிசலை உண்டாக்கும் போது குழந்தைக்கு நெபுலைசர் தேவைப்படலாம். ஆஸ்துமா மற்றும் சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் நிலைகளில் குழந்தைக்கு நெபுலைசர் தேவைப்படலாம்.

சுவாசக்குழாய் நோய்த்தொற்றுகள், மூச்சுக்குழாய் அழற்சி தொற்று, மூச்சுக்குழாய்களில் வீக்கம், கடுமையான இருமல் மற்றூம் சளி இருக்கும் போது ஏற்படுகிறது. அப்போது நுரையீரலுக்கான மருந்து நெபுலைசர் மூலம் அளிக்கப்படுகிறது. சுவாசப்பாதைகளில் மேல் பகுதிகளில் மருந்து அளிப்பதற்கும் நெபுலைசர் பயன்படுகிறது.

பாதுகாப்பாக நெபுலைசர் பயன்படுத்தும் முறை

நெபுலைசரை சரியான முறையில் சுத்தம் செய்வது அவசியம். ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் ஒவ்வொன்றையும் சுத்தம் செய்ய வேண்டும். அதே போன்று சுத்தம் செய்ததும் அதை ஈரப்பதம் போக உலரவைத்து எடுத்து வைக்க வேண்டும்.

நெபுலைசர் மருந்து கலந்து பயன்படுத்துவதால் உடனடியாக பலன் கிடைக்கிறது. இன்ஹேலர் பயன்படுத்த முடியாத நிலையில் நெபுலைசர் சிறந்த நிவாரணியாகவே இருக்கிறது. இன்ஹேலர் போன்று மூச்சை இழுத்து பிடித்து பயன்படுத்த வேண்டியதில்லை. சிறு குழந்தைகளுக்கு சளி, மூச்சுத்திணறல் இருக்கும் போது நெபுலைசர் பயன்பாடு எளிதாக இருக்கும்.

நெபுலைசரால் பக்கவிளைவுகள் உண்டாகுமா?


இன்ஹேலர் போன்று இல்லாமல் மருந்து நேரடியாக நெபுலைசர் வழியாக நுரையீரலுக்கு செல்கிறது. இதனால் நெபுலைசர் சரியாக பராமரிக்காத போது அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் நேரடியாக மூச்சுக்குழாய் சென்று அங்கு பாதிப்பை உண்டாக்க வாய்ப்புண்டு. மருந்தை நேரடியாக செலுத்துவதால் அது மூச்சுப்பாதையில் தடுப்பை அகற்றி விடுகிறது இதனால் சுவாசக்குழாயில் சளி கரைக்கப்பட்டு தூய்மையாக்கப்படுகிறது. அதே நேரம் நெபுலைசர் எடுத்து சுவாசிக்கும் போது இடையில் இருக்கும் பாக்டீரியாக்கள் நேரடியாக நுரையீரலுக்கு சென்று பாதிப்பை உண்டாக்கலாம்.

அடிக்கடி நெபுலைசர் பயன்படுத்தும் போது அது குழந்தையின் மூக்கு எரிச்சல், தொண்டை வறட்சி போன்ற பிரச்சனையையும் உண்டாக்கிவிடுகிறது. மேலும் குழந்தையின் வாய்ப்பகுதி வரை மூடி இருப்பதால் சமயங்களில் நாக்கின் சுவை உணர்வும் பாதிக்கப்படுகிறது.

குறிப்பு
நெபுலைசரை மருத்துவரின் அறிவுரையோடு குறிப்பிட்ட இடைவெளியில் எடுத்துகொள்ளும் போது அது பாதுகாப்பானதுதான். மருத்துவரின் அறிவுறுத்தலோடு மருந்துகள் சரியான அளவில் கொடுக்க வேண்டும். அதிலும் தவிர்க்க முடியாத சூழலில் மட்டுமே. குழந்தைக்கு ஆஸ்துமா பிரச்சனை, மூச்சுத்தினறல் இருந்தால் சுயமாக நெபுலைசர் பயன்படுத்துவதை தவிர்த்து மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம்.

இறுதியாக இன்ஹேலர் பயன்படுத்தும் தெளிவு கொண்ட சிறுவர்களுக்கு நெபுலைசர் பழக்கப்படுத்த வேண்டாம். மாறாக உடற்பயிற்சி, மருந்து, மாத்திரைகள் மூலம் குணப்படுத்திவிடமுடியும். குழந்தைகளை பலூன் ஊத பழக்கினால் கூட போதுமானது. தவிர்க்க முடியாத சூழலில் மட்டுமே நெபுலைசர் அவசியமானது.

வெள்ளி, 29 ஜனவரி, 2021

பெண்கள் ப்ரா அணிந்துகொண்டு தூங்குவதால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா? உஷாரா இருங்க...!

வெள்ளி, ஜனவரி 29, 2021
எடிமா

தூங்கும்போது உள்ளாடைகள் அணிந்து கொண்டு தூங்கலாமா அல்லது தூங்கக்கூடாதா என்பது அனைவருக்குமே இருக்கும் குழப்பமாகும். குறிப்பாக பெண்களை பொறுத்தவரை தூங்கும்போது ப்ரா அணிந்து கொண்டு தூங்குவது அவர்களுக்கு பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்ற அச்சம் அனைத்து பெண்களுக்குமே இருக்க வாய்ப்புள்ளது.

சில பெண்கள் ப்ராவுடன் தூங்குவது மிகவும் அசௌகரியமாக இருப்பதாக கூறுகிறார்கள், சிலர் இது மார்பகத் தொய்வை ஏற்படுத்துவதாக கூறுகிறார்கள். பல ஆராய்ச்சியாளர்கள் தூங்கும்போது ப்ரா அணிவது மார்பக புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்றும் சிலர் இந்த நடைமுறையை கடைப்பிடிப்பது தொய்வு செயல்முறையை தாமதப்படுத்தும் என்றும் கூறுகின்றனர். உண்மையில் தூங்கும்போது பெண்கள் ப்ரா அணியலாமா கூடாதா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளாலாம்.

இரத்த ஓட்டத்தை பாதிக்கிறது

ப்ரா மற்றும் பேண்டீஸ் உள்ளாடைகள் இரத்த ஒட்டத்தை பாதிக்கிறது. இதிலுள்ள கம்பி மார்பக பகுதியைச் சுற்றியுள்ள தசைகளையும் சுருக்கி நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. மிகவும் இறுக்கமாக இருக்கும் பிற வகை ப்ராக்கள் மார்பக திசுவை காயப்படுத்துகின்றன. எனவே நீங்கள் படுக்கைக்கு செல்லும் முன் ப்ராவை அகற்றுவது நல்லது.

சருமத்தில் எரிச்சல் ஏற்படலாம்

பெண்கள் தூங்கும் போது ப்ரா அணிந்தால், கொக்கிகள் மற்றும் பட்டைகள் சருமத்தில் நீண்டுவிடும் வாய்ப்புகள் அதிகம். இது தோல் எரிச்சலை ஏற்படுத்தக்கூடும். பெண்கள் நீண்ட காலத்திற்கு ப்ரா அணிந்தால், அது புண்கள் மற்றும் நீர்க்கட்டிகள் கூட ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. உங்களுக்கு ஏதேனும் அசெளகரியம் ஏற்பட்டால் உடனடியாக உங்கள் ப்ராவை அகற்றவும்.

பூஞ்சைகள் மார்பக ஆரோக்கியத்தை பாதிக்கும்

தூங்கும் போது ப்ரா அணிவது பூஞ்சை தொற்று வளர்ச்சியை அதிகரிக்கும், ஏனெனில் இது மார்பக பகுதியைச் சுற்றி ஈரப்பதத்தை உருவாக்கும். தூங்கும் போது ப்ரா அணிவதைத் தவிர்த்து, உங்கள் மார்பகங்களுக்கு சுவாசிக்க நேரம் கொடுங்கள்.

தூக்கத்தை பாதிக்கும்

தூங்கும் போது ப்ரா அணிவது பல சங்கடத்தை ஏற்படுத்தும். குறிப்பாக இது உங்கள் தூக்கத்தில் கடுமையான அசெளரியத்தை ஏற்படுத்தக்கூடும், இதனால் உங்கள் தூக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும்.

சருமத்தை சிதைக்கும்

ப்ராக்கள் பொதுவாக கச்சிதமாக பொருத்தப்பட்டிருக்கும். நீண்ட காலத்திற்கு அணியும்போது, அவை நிறமி, நிறமாற்றம், கருமையான புள்ளிகள் மற்றும் சில சந்தர்ப்பங்களில் தோல் வெடிப்புகளை கூட ஏற்படுத்தக்கூடும்.

எடிமா

ஒரு இறுக்கமான ப்ராவை வழக்கமாக அணிந்துகொள்வது ஒரு நிலையைத் தூண்டும், இது துவாரங்கள் மற்றும் உடலின் திசுக்களில் திரவத்தின் உபரி திரட்சியால் வகைப்படுத்தப்படுகிறது. இந்த நிலை ‘எடிமா' என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது தேவையற்ற சுகாதார சிக்கல்களைத் தூண்டும்.

மார்பக புற்றுநோய்

ப்ராவுடன் தூங்குவது மார்பக புற்றுநோயை ஏற்படுத்துமா என்பதை நிரூபிக்க உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆனால் தவறான வகை அல்லது அளவு ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். வலிகள் மற்றும் வலிமிகுந்த கம்பிகள் ஆகியவற்றுடன், இரவில் ப்ராவில் தூங்குவது மார்பக புற்றுநோயை அதிகரிக்கும்.

மார்பக உடலியல் பாதிக்கிறது

24 மணி நேரமும் ப்ரா அணிவது சருமத்திற்கு எந்தவொரு சேதத்திலிருந்தும் தன்னை மீட்டு சரிசெய்யும் வாய்ப்பை வழங்காது. கட்டுப்படுத்தப்பட்ட ப்ராக்கள் தோல் திசுக்களில் நீடித்த உள்தள்ளல்களுக்கு வழிவகுக்கும், இதனால் மார்பக உடலியல் பாதிக்கப்படுகிறது.

அணியலாமா? கூடாதா?

மார்பக ஆரோக்கியத்தில் அதன் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை கருத்தில் கொண்டு, தூங்குவதற்கு முன் ப்ராவை அகற்ற பரிந்துரைக்கப்படுகிறது. மார்பக தொய்வைப் பொருத்தவரை, உறுதியான மற்றும் நிறமான மார்பகங்களைப் பெற உதவும் சிறப்பு பயிற்சிகள் மற்றும் மசாஜ் சிகிச்சைகள் உள்ளன

 

திங்கள், 25 ஜனவரி, 2021

பிறந்த குழந்தைக்கு பவுடர் போடலாமா?

திங்கள், ஜனவரி 25, 2021

பிறந்த குழந்தையை குளிப்பாட்டியதும் கைக்கொள்ளாத பவுடரை சருமத்தில் பூசி விடுவது இயல்பு. அப்படி குழந்தைக்கு அதிகம் பவுடர் பூசி விடலாமா?

பிறந்த குழந்தை பராமரிப்பு குறித்து பலமுறை படித்திருக்கிறோம். குழந்தையை தூக்குவதும் தாய்ப்பாலூட்டுவதும் போன்று குழந்தையை குளிப்பாட்டுவதும் கூட தனி பராமரிப்பு தான். பிறந்த குழந்தை அடிக்கடி இயற்கை உபாதை கழிப்பதோடு அவர்கள் மீதான வாடையும் சேரும்.


இது ஒருவித வாசனையை உண்டாக்கும். அதனால் குழந்தைகள் எப்போதும் புத்துணர்ச்சியாக இருக்க வேண்டும் என்று குழந்தைக்கு அதிகமாக பவுடர் போடும் அம்மாக்கள் இது குறித்து தெரிந்துகொள்ள வேண்டும்.

​குழந்தைக்கு பவுடர்

 

பிறக்கும் குழந்தை இயல்பாகவே அழகாக இருப்பவர்கள் தான். குழந்தைகளை குளிப்பாட்டிய பிறகு அவர்களை சுத்தமாக துடைத்து உடனடியாக பவுடர் போடுவது வழக்கம். அதைத் தாண்டி குழந்தைக்கு ஒவ்வொரு முறை டயபர் மாற்றும் போதும் அந்த இடத்தில் பவுடர் போட்டு விடுவதும் உண்டு.

உண்மையில் குழந்தைக்கு பவுடர் அவசியமே இல்லாதது என்பது தான் உண்மை. ஆனால் குழந்தைக்கு அதிகமாக பவுடர் பயன்படுத்தும் போது அது சரும நுண் துகள்களுக்குள் சுவாசிப்பதை தடை செய்யும். இது நுரையீரல்களுக்குள் சென்று சுவாச பிரச்சனையை உருவாக்கவும் வாய்ப்பு உண்டு என்று ஆராய்ச்சிகள் சொல்கிறது. வெகு அரிதாக இது புற்றுநோயுடனான தொடர்புகளிலும் பொருந்துவதாக சொல்லப்படுகிறது.

​டால்கம் பவுடர் தயாரிப்பு

 

குழந்தைக்கான பவுடர் தயாரிப்பில் மெக்னீசியம், சிலிக்கான் மற்றும் ஆக்ஸிஜன் கூறுகள் உள்ளது. இது சருமத்திலிருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சி தோல் மீது உண்டாகும் உராய்வை குறைத்து நன்மை செய்கிறது. இது டயபர் சரும பிரச்சனையை தடுக்க செய்கிறது. இந்த டால்க் என்னும் கனிம கலவையால் தான் பவுடர் தயாரிக்கப்படுகிறது.

அதே நேரம் இந்த டால்க் அதன் இயற்கையான வடிவில் ஆஸ்பெஸ்டாஸ் என்னும் பொருளை உள்ளடக்கியுள்ளது. இது புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது. இந்த ஆஸ்பெஸ்டாஸ் சுவாசிக்கும் போது அது உள்ளே சென்று புற்றுநோயை உண்டாக்க வாய்ப்புண்டு.

உலக சுகாதார நிறுவனத்தில் அங்கம் வகிக்கும் இன்டர் நேஷனல் ஏஜென்சி ஃபார் ரிசர்ச் ஆன் கேன்சர் அமைப்பு டால்கம் பவுடரில் இருக்கும் ஆஸ்பெஸ்டாஸ் மனிதர்களுக்கு புற்றூநோய் அபாயத்தை உண்டு செய்வதாக கூறியிருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கான பவுடர் தயாரிப்பில் குழந்தையின் சரும ஈரப்பதத்தை போக்க டால்க் கனிம கலவை அல்லது சோளமாவு ஆகியவற்றை கொண்டிருக்கிறது. எனினும் குழந்தைக்கு பவுடர் அத்தியாவசியமான ஒன்று என்பதை யாரும் வலியுறுத்தவில்லை.

​குழந்தைக்கு பவுடர் அவசியமா?

 

உண்மையில் குழந்தைக்கு பவுடர் தேவையில்லை என்கிறது அமெரிக்கன் ஆஃப் பீடியாட்ரிக்ஸ். அதுமட்டுமல்ல குழந்தைகளுக்கு லோஷன்கள் எதுவும் தேவைப்படாது.

மேலும் இது குறித்த ஆய்வில் குழந்தைகளுக்கு பவுடர் பயன்படுத்தும் போது அது நுரையீரல் பாதிப்பு, சுவாச பிரச்சனைகள், மூச்சுத்திணறல் போன்றவை உண்டாவதாகவும் தெரிவித்துள்ளது.

அப்படியெனில் குழந்தைக்கு பவுடர் போடவே கூடாதா என்கிறீர்களா, பயன்படுத்தலாம் ஆனால் எப்படி என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

​குழந்தைக்கு பவுடர் போடும் போது

 

குழந்தைக்கு பவுடர் பயன்படுத்தும் போது தரமானதை வாங்கி பயன்படுத்துங்கள். இது குறித்து சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகுவது அவசியம். ஒவ்வாமை குறைவான அல்லது ஆர்கானிக் முறையில் தயாரிக்கப்பட்ட பவுடர்களை பார்த்து வாங்குங்கள்.

குழந்தைக்கு பவுடர் போடும் போது நேரடியாக அவர்கள் முகத்தில் கொட்டி பயன்படுத்த வேண்டாம். கைகளில் கொட்டி அல்லது மெல்லிய வெள்ளைத்துணியில் கொட்டி குழந்தையின் கண், காது, மூக்கு, வாய் பகுதியில் படாதவாறு அளவாக குறைவாக பயன்படுத்த வேண்டும்.

குழந்தையை குளிப்பாட்டி முடித்ததும் சரும ஈரத்தோடு பவுடர் பயன்படுத்தாமல் சிறிது நேரம் குழந்தையின் சருமம் நன்றாக உலரும் வரை வைத்திருந்து பிறகு அளவு குறைவாக பயன்படுத்த வேண்டும்.

​ டயபர் மாற்றும் போது பவுடர் அவசியமா

 

குழந்தைக்கு ஒவ்வொரு முறை டயபர் மாற்றும் போதும் அம்மாக்கள் பவுடரை அள்ளி தெளிப்பதும் உண்டு. குழந்தை இயற்கை உபாதை கழித்த பிறகு டயபர் மாற்றும் போது பவுடர் அவசியம் தவிர்ப்பதே நல்லது.

டயபர் மாற்றலுக்கு பிறகு சிறுநீர் கழித்திருந்தாலும், மலம் கழித்தாலும் வெதுவெதுப்பான நீரில் இரண்டு முறை சுத்தமாக துடைத்து எடுக்கவும். பிறகு மெல்லிய துணியில் துடைத்து உலர வைத்து வேறு டயபரை மாற்றினாலே போதுமானது.

ஒரு வேளை நீங்கள் டயபரை மாற்றும் போது பவுடர் பயன்படுத்துவதாக இருந்தால் ஏற்கனவே பூசியிருக்கும் பவுடரை சுத்தமாக துடைத்து பிறகு இலேசாக பவுடரை மெல்லிய துணியில் போட்டு தொடை பகுதியில் மட்டும் போடவும்.

எக்காரணம் கொண்டும் குழந்தையின் அந்தரங்க உறுப்பில் பவுடர் போட வேண்டாம். அதிலும் பெண் குழந்தைகளாக இருந்தால் பெண் உறுப்பில் பவுடர் படவே கூடாது.

குறிப்பு குழந்தைகளுக்கு பவுடர் போடும் போது அளவாக பயன்படுத்த வேண்டும். கழுத்து, கை, அக்குள், கால், தொடை இடுக்குகளில் போடலாம். அதே போன்று குழந்தையை குளிக்க வைக்கும் போதும், இயற்கை உபாதைக்கு பிறகு துடைக்கும் போது மடிப்புகளில் இருக்கும் பவுடரை சுத்தமாக துடைத்து விடுவதும் பாதுகாப்பானது. 

வெள்ளி, 25 டிசம்பர், 2020

மாத்திரை இல்லாம மாதவிடாய் தள்ளிபோகணுமா, இதை சாப்பிடுங்க பக்கவிளைவும் கிடையாது!

வெள்ளி, டிசம்பர் 25, 2020

மாதவிடாய் நாளில் ஃபங்ஷனோ, பண்டிகையோ இருந்தால் அது இரண்டு நாள் தள்ளி வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா?

மாதந்தோறும் வரக்கூடிய மாதவிடாய் சுழற்சி இயற்கையாக உடலில் நடக்கும் மாற்றங்களால் வரக்கூடியது. மாதவிடாய் நாட்கள் எப்போதும் அசெளகரியமாக இருக்கும் என்பதால் அந்த நாட்களில் வெளியே செல்லாமல் பெரும்பாலும் வீட்டிலேயே இருக்கவே விரும்புவார்கள். ஆனால் மாதவிடாய் நாட்களின் போது பண்டிகையோ முக்கியமான விழாக்களோ இருக்கும் நாட்களில் மாதவிடாய் வரக்கூடிய நாளாக இருந்தால் அதை தவிர்க்கவே விரும்புவார்கள்.

அதற்கு கடைகளில் மாத்திரைகள் கிடைக்கிறது என்றாலும் உடல் இயற்கையாக இந்நிகழ்ச்சியை ஹார்மோன் மூலம் செய்யும் போது மாத்திரைகள் ஹார்மோன் சுழற்சியில் குழப்பத்தை உண்டு செய்கிறது. அதனால் மாத்திரைகளை அதிகம் பயன்படுத்த வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். பக்க விளைவில்லாமல் சில நாட்கள் இயற்கை வைத்தியம் மூலம் மாதவிடாய் தள்ளி வைக்கலாம். அதற்கு என்ன செய்யலாம் என்று பார்க்கலாம். இது பக்கவிளைவு இல்லாத முறையும் கூட.

​ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர் உடல் எடை குறைய, சரும பராமரிப்பின் போது, நெஞ்செரிச்சல் இருக்கும் போது பயன்படுத்துவதுண்டு. ஆப்பிள் சீடர் வினிகர் மாதவிடாய் தள்ளி போக உதவும். மாதவிடாய் தள்ளி போவதற்காக இதை பயன்படுத்தும் போது மீண்டும் மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தபோக்கு உண்டாகாமல் தடுக்கவும் இவை உதவும்.

தினமும் ஒரு டம்ளர் நீரில் 3 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து குடிக்க வேண்டும். இதை தினமும் 10 நாட்கள் வரை குடிக்க வேண்டும். இது 4 முதல் ஒரு வாரம் வரை உங்கள் நாட்களை தள்ளிபோக செய்யும். கூடுதலாக உடலில் இருக்கும் நச்சையும் வெளியேற்றும்.

​எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு வைட்டமின்கள் மற்றும் சிட்ரிக் அமிலத்தின் நிறைந்த மூலம் என்பதை அறிவோம். இதை மாதவிடாய் நாட்களுக்கு முன்பு குடித்துவந்தால் இது மாதவிடாய் காலத்தை தாமதமாக்கும். மேலும் வரும் மாதவிடாய் கால கட்டத்தில் உதிரபோக்கு அசெளகரியம் இல்லாமல் இலகுவானதாக இருக்கும்.

இதை தொடர்ந்து ஒரு வாரம் வரை குடித்தால் மாதவிடாய் காலத்தை தள்ளி போக உதவும். எலுமிச்சை சாறை அப்படியே குடிக்காமல் ஒரு டம்ளர் நீரில் கலந்து குடிக்க வேண்டும். அமிலம் நிறைந்ததால் இது பற்கள், ஈறுகள், வயிறு குடல்களில் பயணிக்கும் போது அது எரிச்சலை அடைய செய்யலாம்.

​ஜெலட்டின்

கடைகளில் ஜெலட்டின் பாக்கெட்டுகள் கிடைக்கும். இது மாதவிடாய் ஒரு நாள் முதல் ஒரு வாரம் வரை தள்ளி வைக்க உதவுகிறது. இது மாதவிடாய் சுழற்சியின் வேகத்தை குறைக்க செய்கிறது. ஜெலட்டின் தூளை வெதுவெதுப்பான நீரில் கரைத்து குடிப்பதால் அது குறைந்தது நான்கு மணி நேரமாவது உங்கள் இயக்கங்களை தள்ளிவைக்கும் என்று சொல்லப்படுகிறது.

இது எப்படி செயல்படுகிறது என்பது குறித்த ஆய்வுகள் இதுவரை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரம் இதை அதிகமாக எடுத்துகொள்ளும் போது இது செரிமானம், மன உளைச்சல் போன்ற சில பக்கவிளைவுகளையும் உண்டாக்க கூடும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

​பருப்பு வகைகள்

நமது பாரம்பரிய உணவில் பருப்பு வகைகள் மற்றும் பயறு வகைகள் மிக முக்கியமானவை. இது மாதவிடாய் காலத்தை மெதுவாக்க செய்கிறது. பயறு வகைகளில் பொட்டாசியம் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மாதவிடாய் சுழற்சியை மெதுவாக்குவதோடு அதற்கு பிந்தைய மாதவிடாய் தொடர்பான அறிகுறிகளையும் மெதுவாக்குகிறது.

பருப்பை மிதமாக வைத்து பொடியாக்கி வைத்துகொள்ள வேண்டும். இதை சூப் போன்று குடித்துவரலாம். ஸ்மூத்தி போல் குடிக்கலாம். அதிக அளவு எடுக்கும் போது அது வயிறு வலி, வீக்கம் போன்றவற்றை உண்டாக்கிவிடக்கூடும் என்பதால் அளவாக எடுத்துகொள்வது நல்லது. மாதவிடாய்க்கு முந்தைய ஒரு வாரகாலத்திலிருந்து இதை எடுத்துகொள்ள வேண்டும்.

​கொத்துமல்லி விதைகள் அல்லது தழைகள்

இரண்டுமே மாதவிடாய் தள்ளி போக உதவக்கூடும். கொத்துமல்லி விதைகளை எடுக்கும் போது ஒரு டம்ளர் நீரில் 10 கிராம் விதைகள் சேர்த்து தண்ணீர் பாதியாக சுண்டும் வரை கொதிக்க வைத்து இறக்கி ஆறிய பிறகு குடிக்கவும். மாதவிடாய்க்கு முன்பு ஒரு வாரம் முதல் இதை செய்யலாம். விதைகள் இல்லாத நிலையி கொத்துமல்லியை நீரில் சேர்த்து வேகவைத்து இறக்கி ஆறியதும் குடித்து வந்தால் மாதவிடாய் காலம் தாமதமாக்கும். மேலும் இவை உடலில் இருக்கும் நச்சுக்களையும் வெளியேற்ற செய்கிறது.

கடுகு

கடுகை இலேசாக வறுத்து பொடியாக்கி கொள்ளவும். மாதவிடாய் வரப்போவதற்கு ஒரு வாரம் முன்பிருந்தே இரவு ஒரு டம்ளர் பாலில் ஒரு டீஸ்பூன் கடுகுத்தூள் கலந்து குடித்து வந்தால் மாதவிடாய் தள்ளிபோக கூடும்.

உடற்பயிற்சி

விளையாட்டு வீரர்களும் தினசரி கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்பவர்களும் அவர்களது மாதவிடாய் காலத்தை பெரும்பாலும் தள்ளி அனுபவிப்பார்கள். மாதவிடாய்க்கு முந்தைய 10 நாட்களிலிருந்தே உடல் தீவிரமான உடற்பயிற்சியை மேற்கொண்டால் அது உங்கள் மூளைக்கு மெதுவாக சமிக்ஞையை கொண்டு செல்ல கூடும். ஏனெனில் தீவிரமான உடல்பயிற்சி மாதவிடாய் காலத்துக்கான செயல்களை தாமதப்படுத்துகிறது.

மேற்கண்டவற்றை உங்கள் மாதவிடாய் காலத்துக்கு முந்தைய 10 நாட்களுக்கு முன்கூட்டியே தொடங்கிவிட்டால் உங்கள் நாளை ஒரு நாள் முதல் ஒருவாரம் வரை தள்ளிபோக செய்யலாம். அதே நேரம் கார உணவுகளை தவிர்ப்பது சிறந்தது.


குழந்தைக்கு கொசு கடித்து சருமம் வீக்கமா இருக்கா, இந்த வைத்தியம் செய்யுங்க! அரிப்பும் அடங்கும்!

வெள்ளி, டிசம்பர் 25, 2020

குழந்தைகளை கொசு கடித்தால் மென்மையான சருமம் வீக்கத்தையும், அரிப்பையும் அதிகமாக சந்திக்கும்.

கொசு வகைகள் அதிகம் இருந்தாலும் சில குறிப்பிட்ட அனோபீஸ், குலெக்ஸ் மற்றும் ஏடிஸ் கொசுவகைகள் மிக முக்கியமானவை. இவை நோய்த்தொற்றுகளை உண்டாக்க கூடியவை. குறிப்பாக பெண் கொசுக்கள் தங்கள் முட்டைகளுக்கு ஊட்டச்சத்து அளிக்க மனித உடலில் ரத்தத்தை உறிஞ்சுகின்றன.

பெரியவர்களை காட்டிலும் குழந்தைகளை கொசு கடிக்கும் போது ஒவ்வாமை அல்லது தொற்றுகளுக்கு ஆட்படுகிறார்கள். கொசு ரத்தத்தை உறிஞ்சும் போது அது நம் ரத்தத்தில் அதன் உமிழ்நீரில் கலக்கிறது. இதிலிருக்கும் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் ரத்த உறைதலை தடுக்கிறது, குழந்தையின் நோய் எதிர்ப்புசக்தியை உண்டாக்குகிறது.

மிக முக்கியமாக இது சிவத்தல், அரித்தல் மற்றும் வீக்கத்துக்கு வழி ஏற்படூத்துகிறது. குழந்தைக்கு கொசு கடிக்கும் போது சரும வீக்கம் இரண்டு நாட்கள் வரை இருக்க கூடும். இளஞ்சிவப்பு நிறத்தில் சருமம் தடித்திருக்கும். இதை போக்க வீட்டில் இருக்கும் பொருள்களை அம்மாக்கள் பயன்படுத்தலாம். எனினும் தீவிரம் அதிகமாக இருந்தால் கொசுக்களால் பரவும் நோயை தடுக்க மருத்துவ உதவி தேவைப்படலாம்.

​ஐஸ்கட்டி

குழந்தைகளுக்கு ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுக்கலாம். குளிர்ந்த நிலையில் இவை ரத்த நாளங்களை கட்டுப்படுத்த கூடும். இது ஒவ்வாமைக்கு எதிர்வினையாக செயல்படூவதோடு இது சருமத்தில் அரிப்பையும் போக்கும்.

ஐஸ்கட்டியை மெல்லிய துணியில் சுற்றி ஒன்று அல்லது இரண்டு மணி நேரங்களுக்கு ஒருமுறை கொசு கடித்து வீக்கமான சருமத்தில் ஒற்றி எடுக்கவும். தொடர்ந்து 10 நிமிடங்கள் வரை வைத்து எடுத்தால் போதும்.

​க்ரீன் டீ

க்ரீன் டீ அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இது சருமத்தின் வீக்கத்தை வேகமாக குறைக்கும். க்ரீன் டீ பேக் ஃப்ரிட்ஜ்ஜில் வைத்திருங்கள். அவை இலேசாக குளிர்ந்து போகும் போதே எடுத்து குழந்தைக்கு ஒத்தடம் கொடுக்கலாம். தினமும் 3 அல்லது நான்கு முறை வரை இப்படி செய்தால் போதுமானது.

வினிகர்

அமிலத்தன்மை கொண்ட வினிகர் நச்சுத்தன்மையை சமநிலைப்படுத்துகிறது, இது கொசுக்கடி போன்று தேனிக்கள் போன்ற பூச்சிகளீருந்தும் சருமத்தை பாதுகாக்கிறது.

வினிகர் அமிலத்தன்மை நிறைந்தது என்பதால் அதை சம அளவு நீரில் கலந்து சுத்தமான பருத்தி துணியால் துடைத்து எடுக்கவும். இரண்டு வேளை தடவினால் போதுமானது.

​எலுமிச்சை தைலம்

எலுமிச்சையில் தயாரிக்கப்படும் இந்த எலுமிச்சை தைலம் இயற்கை ஆண்டிஹிஸ்டமைன் என்று சொல்லலாம். இது சரும அரிப்பை நீக்க உதவுகிறது.

எலுமிச்சை தைலம் இல்லையென்றால் எலுமிச்சை இலையை கசக்கி அதன் சாறைநீரில் கலந்து சருமத்தின் மீது நேரடியாக பூசவும். சருமத்துக்கு ஊறுவிளைவிக்காது என்றாலும் மென்மையான சருமம் என்பதால் நீங்கள் குழந்தையின் குளியல் தொட்டியில் ஒரு மூடி விட்டு சில நிமிடங்கள் கழித்து அந்த நீரில் குழந்தையை குளிப்பாட்டலாம்.

பால்

பால் சருமத்தை பாதுகாக்க வைத்திருக்க உதவும். பாலில் உள்ள புரதங்கள் வீக்கத்தை குறைத்து சருமத்தை அமைதிப்படுத்த செய்யும். மேலும் இது சருமத்தில் வீக்கம் மற்றும் சிவத்தலை கட்டுப்படுத்தக்கூடும்.

பாலை சிறிதுதட்டில் வைத்து சுத்தமான காட்டனில் துடைத்து சருமத்தின் மீது தடவி விடவும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை இதை தடவி விடலாம். ஆனால் பால் வாடையை எறும்புகள் உணர்ந்து வரக்கூடும் என்பதால் குழந்தையின் அருகில் இருக்கும் போது மட்டும் இதை செய்யுங்கள். அதற்கு பிறகு மீண்டும் வெதுவெதுப்பான நீரில் துடைத்து எடுங்கள்.

​டீ ட்ரி ஆயில்

இதில் உள்ள எண்ணெய்கள் ரசாயனங்கள் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை கொல்வதால் இது கிருமிகளை வெளியேற்றுகிறது. இது சரும வீக்கத்தை குறைக்க செய்கிறது.இதன் வாடைக்கு கொசுக்கள் அருகில் வராது என்பதால் கொசு அதிகமாக இருக்கும் வீட்டில் வசிப்பவர்கள் முன்கூட்டியே குழந்தைக்கு இதை தடவி விடுவது நல்லது.

இந்த எண்ணையோடு சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து சருமத்தின் மீது தடவுங்கள்.கொசு கடித்தபிறகு இந்த பராமரிப்பு செய்வதை காட்டிலும் கொசு கடிக்காமல் இருக்க கூடுமான முயற்சிகள் எடுப்பது மிகவும் நல்லது.

வியாழன், 24 டிசம்பர், 2020

குழந்தைக்கு பாட்டில்ல பால் கொடுக்கும் போது எப்படி கொடுக்கணும் தெரியுமா?

வியாழன், டிசம்பர் 24, 2020

பிறந்த குழந்தைக்கு ஆறுமாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். சமயங்களில் தாய்ப்பால் இல்லாத போது குழந்தைக்கு துணை பாட்டில் தான். அப்படி குழந்தைக்கு பாட்டில் பால் கொடுக்கும் போது என்னவெஆம் கவனிக்கலாம் தெரிந்து கொள்வோம்

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் தான் சிறந்தது என்றாலும் வெகு அரிதாக சில குழந்தைகளுக்கு தாய்ப்பால் பற்றாக்குறை உண்டாகிறது. அல்லது தாய்ப்பால் கிடைக்காமல் போகிறது. அப்படி இருக்கும் போது குழந்தைகளுக்கு பாட்டில் பால் கொடுப்பது வழக்கம். அதே போன்று தாய்ப்பால் கொடுத்தாலும் ஆறுமாதங்களுக்கு பிறகு குழந்தைக்கு இணை உணவு கொடுத்தாலும் கூட தாய்ப்பால் பற்றாக்குறையாக இருக்கும். அதனால் குழந்தைக்கு மாற்றுப்பாலும் பழகுவார்கள். அப்போதுதான் பாட்டில் பழக்கத்தை ஏற்படுத்துவோம்.

குழந்தைக்கு பாட்டில் பழகும் போது முதலில் குழந்தை பாட்டில் பாலை குடிக்க திணறுவார்கள்.அம்மாவின் மார்பு காம்புகளில் உறிஞ்சு குடித்த குழந்தைக்கு திடீரென்று பாட்டில் பால் சிரமமாக இருக்கும். பாட்டில் பழகுவதற்கு சில வாரங்கள் வரை ஆகலாம். எனினும் குழந்தைக்கு பாட்டில் பால் பழகும் போது இதையெல்லாம் மனதில் வையுங்கள்.

குழந்தைக்கு பால் புகட்டும் போது உங்கள் முழங்கையை கைகளில் மடித்து குழந்தையின் தலையை உங்கள் கை மேல் வைத்து கையை குழந்தையை சுற்றி இறுக்கி பாட்டிலை பிடித்து கொள்ளுங்கள் .குழந்தையின் தலை நிமிர்ந்த நிலையில் இருக்க வேண்டும்.முதுகு வளைந்த நிலையில் இருக்க கூடாது. எக்காரணம் கொண்டும் குழந்தையை படுத்த நிலையில் வைத்து பால் புகட்ட கூடாது.


குழந்தைக்கு பாட்டில் பால் கொடுக்கும் போது அம்மாக்களும் நேராக உட்கார்ந்துகொள்ள வேண்டும். குழந்தையை முழங்கால்கள், வயிற்றிலும் கோணலில்லாமல் குழந்தையை சீராக வைத்திருக்க வேண்டும். தாய்ப்பால் போன்று அம்மாக்கள் குழந்தையின் முகத்தை ஒட்டி இருக்க வேண்டும். குழந்தையின் பால் பாட்டில் நிப்பிள் முழுவதும் குழந்தையின் வாயில் வைக்க வேண்டும். இல்லையெனில் குழந்தை பாட்டில் பாலை உறிஞ்சும் போது குழந்தையின் வாய் வழியே காற்று சென்றுவிட வாய்ப்புண்டு.

குழந்தை சற்றூ வளர்ந்ததும் குழந்தையின் தலையை தட்டையாக வைக்காமல் சற்று உயரமான தலையணையில் படுக்க வைத்து கொடுக்கவும். பாட்டிலில் பால் புகட்டுவதால் அதிக கவனம் தேவை. பாட்டிலில் பால் கொடுத்தால் தான் என்றில்லை. குழந்தை பாட்டிலில் தண்ணீர் குடிக்கும் போதும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

குழந்தைக்கு பாட்டிலில் பால் கொடுக்கும் போது அம்மாக்கள் ஒரு சிக்கலை பொதுவாகவே சந்திப்பார்கள். குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது அங்கும் இங்கும் வேடிக்கை பார்ப்பார்கள். குறும்பு செய்வார்கள். சில நேரம் நாக்கை நீட்டியபடி அம்மாவின் முகத்தை பார்த்துகொண்டிருப்பது,கைகளை வாய்க்குள் வைத்து விளையாடுவது, பசியின்மையை கொண்டிருப்பது, விரல்களை வாயில் வைத்திருப்பது இவற்றுக்கு இடையே தான் அவர்கள் பால் குடிப்பார்கள். ஆனால் பால் பாட்டில் குடிக்கும் போது அவர்கள் உறிஞ்சுவிட்டாலே பால் வரத்தொடங்கி விடும்.

அதனால் குழந்தைக்கு அடிக்கடி பால் புகட்ட வேண்டியிருக்காது. ஆனால் தாய்ப்பால் குடிக்கும் போது குழந்தை அதிகமாக பால் குடித்தது. ஆனால் பாட்டில் பாலில் குழந்தை பால் அதிகம் கொடுப்பதில்லை என்று அம்மாக்கள் கவலைகொள்வார்கள். இதனால் குழந்தையின் வாயில் பால் பாட்டிலை வலுக்கட்டாயமாக புகட்டுவார்கள். ஆனால் பாட்டில் பால் கொடுக்கும் போது குழந்தைக்கு தொடர்ந்து கொடுக்காமல் இடைவெளிவிட்டு கொடுக்க வேண்டும். குழந்தை பாட்டிலில் பால் உறிஞ்சுவதற்கு ஏற்றதாக உள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும்.

குழந்தைக்கு பாட்டிலில் பால் கொடுத்தாலும் தண்ணீர் கொடுத்தாலும் வேகமாகவோ மெதுவாகவோ இல்லாமல் சீராக வெளிவருகிறதா என்பதை கவனிக்க வேண்டும். குழந்தை ஒரே மூச்சில் பால் குடிக்க வேண்டும் என்று நினைக்காமல் சில நிமிடங்கள் அல்லது குழந்தை 15 முறை விழுங்கிய உடன் இடைவெளி விட வேண்டும். இது குழந்தைக்கு உடல்பருமனை உண்டாக்கிவிடவும் வாய்ப்புண்டு. குழந்தைக்கு வயிறு நிறைவது தெரியாமல் அதிகமாக கொடுத்துவிட வாய்ப்புண்டு.

குழந்தைக்கு பால் கொடுக்கும் போது பால் வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும்படி பார்த்துகொள்ளுங்கள். பாலை மணிக்கட்டில் சில துளி விட்டு பிறகு சரியான வெப்பத்தில் கொடுக்கலாம். குழந்தை வளர வளர ஈறுகள், பற்கள் வளர்வதால் குழந்தை நிப்பிள் கடிப்பார்கள். அதனால் நிப்பிள் அதிகமாக விரிசலை சந்திக்க கூடும். அதையும் அடிக்கடி கவனத்தில் கொண்டு பார்க்க வேண்டும்.

இறுதியாக பாட்டில்களை பயன்படுத்தும் போது சரியான பாட்டிகளை தேர்வு செய்யுங்கள். தரமான பாட்டில்களாக பயன்படுத்துவது அவசியம். பாட்டில்களை சரியான முறையில் சுத்தம் செய்வது அவசியம். பாட்டில்கள், வளையம், நிப்பிள் அனைத்தையும் தனித்தனியாக கழட்டி சுத்தம் செய்யவும். தினமும் கொதிநீரில் பாட்டிலை போட்டு எடுக்கவும்.பாட்டிலை கழுவி துடைத்து வெயிலில் உலர வைத்து எடுக்கவும். பாட்டில் வாங்கும் போது ஏதும் சந்தேகம் இருந்தால் மருத்துவரின் ஆலோசனை பெறவும் தயங்க வேண்டாம்

தாய்ப்பால் தரும் போது இந்த 4 கீரையை மறந்துடாதீங்க, தாய்ப்பாலும் அதிகரிக்கும், சத்தும் கிடைக்கும்!

வியாழன், டிசம்பர் 24, 2020

 

பிரசவித்த பெண்கள் கர்ப்ப காலம் போன்றே தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் கீரைகளை அதிகம் சேர்க்க வேண்டும்.

பிறந்த குழந்தைக்கு முதல் ஆறுமாதங்கள் வரை எந்த இணை உணவுமே இல்லாமல் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்றுதான் மருத்துவர்களும் ஊட்டச்சத்து நிபுணர்களும் வலியுறுத்துகிறார்கள். ஆனால் தற்போதைய சூழலில் பெண்கள் கர்ப்பகாலத்திலேயே பலவீனமாகிவிடுகிறார்கள். பிரசவகாலத்தில் இது அதிகமாகிறது. அதற்கு பிறகு தாய்ப்பால் கொடுக்கும் போதும் தாய் சேய் இருவருக்கும் ஊட்டச்சத்து பற்றாக்குறையாவதும் உண்டு. இதனால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி பெறுவதில் சிக்கலாகிறது. தாயின் உடல் தேறுவதும் தாமதமாகிறது. அதோடு குழந்தைக்கு போதுமான தாய்ப்பால் கிடைப்பதும் சிக்கலாகிறது.

பிரசவத்துக்கு பிறகு தாய் சேய் இருவருமே உடலளவில் அதிக ஆரோக்கியம் பெற உணவு தான் உதவுகிறது. அந்த வகையில் உணவில் தினம் ஒரு கீரை சாப்பிடுவதன் மூலம் தாய் சேய் இருவருக்குமே நிறைவான ஆரோக்கியம் கிடைக்கும். அப்படி சேர்க்க வேண்டிய கீரைகள் குறித்து தான் பார்க்க போகிறோம்
.

​தாய்ப்பால் சுரப்பு

இயற்கையான முறையில் தாய்ப்பால் சுரக்க கர்ப்பகாலம் முதலே பெண்கள் உடல் ஆரோக்கியம் குறைபாடில்லாமல் வைத்திருக்க வேண்டும். பிரசவத்துக்கு பிறகு தாயின் மார்பகத்தில் பால் சேமிக்காது. ஆனால் தாயின் மார்பக சுரப்புகள் கொழுப்பாக சேமித்துவைக்கப்படுகிறது. குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டும் போது இந்த கொழுப்பானது அத்தியாவசிய அமினோ அமிலங்களை புரதம் மற்றும் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ், கால்சியம் சேர்த்து பாலாக சுரக்கிறது.

ப்ரொலாக்டின் என்னும் சுரப்பு மார்பகத்தை தூண்ட செய்கிறது. ஆக்ஸிடோசின் என்னும் பெண் ஹார்மோன் கொழுப்பை பாலாக மாற்றி வெளியேற்றுகிறது. இந்த ஹார்மோன்கள் சீராக செயல்படும் வரையில் தாய்ப்பால் சுரப்பும் சீராக இருக்கு. வேகமாக இருக்கும். வெகு அரிதாக சில பெண்களுக்கு ஹார்மோன் சுரப்பில் பிரச்சனை உண்டாகும் போது தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும். குழந்தைக்கு போதுமான தாய்ப்பால் கிடைக்காது. அப்படி தாய்ப்பால் சுரக்க வேண்டிய சத்தான உணவு பொருள்களில் மிக முக்கியமானது கீரை வகைகள். தினம் ஒரு கீரை நிச்சயம் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யும்.

​முருங்கைக்கீரை

முருங்கைக்கீரை மிக நன்மை அளிக்க கூடிய கீரை. எளிதாக எல்லா இடங்களிலும் இவை கிடைக்கவும் செய்யும். இரும்புச்சத்து நிறைந்த கீரை. கர்ப்பகாலத்தில் இரும்புச்சத்து குறைபாடு, ரத்த சோகையை போக்கி நல்ல ரத்தம் உருவாக்கும் கீரை பிரசவத்துக்கு பிறகு தாய்ப்பால் சுரப்பிலும் அதிக நன்மையை தருகிறது. பிரசவத்துக்கு பிறகு பெண்கள் விரைவாக உடல் பலம் பெற இது உதவுகிறது.

முருங்கைக்கீரையை பறித்து இலைகளை தனியாக எடுத்து ஒருகப் அளவு வைக்கவும். பூக்கள் இருந்தாலும் சேர்க்கலாம். 5 டீஸ்பூன் அளவு துவரம்பருப்பு அல்லது பாசிப்பருப்பை சேர்த்து வேகவைத்து எடுக்கவும். வாணலியில் இலேசாக எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து, காரமில்லாத வரமிளகாய் சேர்த்து கால் கப் நறுக்கிய சாம்பார் வெங்காயம் போட்டு வதக்கி கீரையை சேர்க்கவும்.

கீரை வேகும் அளவு இலேசாக தன்ணீர் விட்டு 15 நிமிடங்கள் மிதமான தியில் வைத்து இறக்கும் போது பருப்பு, உப்பு சேர்த்து இறக்கவும். கீரையை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். இது மலச்சிக்கலையும் தீர்க்கும். வெகு சிலருக்கு இந்த கீரை ஒவ்வாமையை உண்டாக்க வாய்ப்புண்டு என்பதால் அவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.

அரைக்கீரை

அரைக்கீரை அனைத்துவகை சத்துக்களையும் கொண்டுள்ளது. தங்கச்சத்தும், இரும்புச்சத்தும் அதிகமாகவே இதில் உள்ளது. மேலும் இதில் புரதம், சுண்ணாம்புச்சத்தும் உள்ளது. மகப்பேறு காலங்களில் இருக்கும் பெண்களுக்கு மட்டும் அல்லாமல் பிரசவக்காலத்துக்கு பிறகும் நோய்கள் வராமல் தடுக்க உதவும் உணவாக இருக்கிறது.

சளி, இருமல் தவிர்க்கவும், மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடவும் இவை உதவும். பிரசவக்காலத்துக்கு பிறகு பெண்கள் இழந்த சக்தியையும், பலத்தையும் இவை தருகிறது. உடல் பலவீனத்தை போக்குவதில் இவை வேகமாக செயல்படுகிறது. இடுப்பு எலும்புகளை வலுப்படுத்துகிறது.

அரைக்கீரையை மென்மையான காம்புகளோடு சேர்த்து நறுக்கி பாசிப்பருப்பு சேர்த்து கூட்டு போல் செய்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். மசித்தும் சாப்பிடலாம். தாய்ப்பால் மிக மிக குறைவாக இருக்கும் பெண்கள் அரைக்கீரையோடு பூண்டு பல்லையும் சேர்த்து சாப்பிட்டால் தாய்ப்பால் சுரப்பு நிச்சயம்.

​பொன்னாங்கண்ணி கீரை

மின்னும் மேனி பொன்னாங்கண்ணி என்று சொன்னாலும் இந்த கீரையில் அதிக அளவு புரதமும், மாவுச்சத்தும், வைட்டமின்களும் நிறைந்திருக்கிறது. இது ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்க செய்வதால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கிறது.

பொன்னாங்கண்ணியில் சிவப்பு பொன்னாங்கண்ணி, பச்சை பொன்னாங்கண்ணி இரண்டுமே உண்டு. இதை தேங்காய் சேர்த்து சாப்பிடுவது வழக்கம் என்றாலும் தேங்காய் ஜீரணத்தை தாமதமாக்கும். குழந்தைக்கு பால் கக்கும் தன்மை அதிகரிக்கும்.

பொன்னாங்கண்ணி கீரையை சிறு துண்டுகளாக நறுக்கி பூண்டு பல், சாம்பார் வெங்காயம் சேர்த்து இலேசாக காரம் சேர்த்து வேகவிட்டு மண்சட்டியிலேயே கடைந்து விடவும். இதை சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். காலை, இரவு வேளை தவிர்த்து மதியம் ஒரு வேளை மட்டும் இதை எடுத்துகொள்ளலாம்.

​அவுத்திக்கீரை

தாய்ப்பால் சுரக்கும் தாய்மார்களுக்கு தேடி வாங்கித்தரும் பொருள் அகத்திக்கீரை சற்றே கசப்பு நிறைந்த பொருள் இருந்தாலும் இது தாய்ப்பால் சுரப்புக்கு பெரிதும் உதவும். இது வயிற்றை சுத்தம் செய்ய கூடிய பொருள். செரிமானம் வெகு தாமதமாக ஆக கூடும்.

அகத்திக்கீரையை சுத்தம் செய்து நன்றாக அலசி விடவும். இதை அரிசி களைந்த நீரில் வேகவைத்து பொரிக்க வேண்டும். இது இரண்டு மடங்கு சத்து கொடுக்ககூடியவை. அரிசி கழுவிய நீர் என்பதால் இது கசப்பு சுவையை குறைக்க கூடியவை. அகத்திக்கீரை நன்மை செய்யகூடிய அளவுக்கு தீமையும் கொடுக்கும்.

அதனால் இந்த கீரையை தினசரி எடுக்காமல் பத்து நாட்களுக்கு ஒரு முறை எடுக்கலாம். அதே நேரம் இது செரிமானத்தை தாமதமாக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதே போன்று இது வாயுவை உண்டாக்கும் என்பதால் சீரகம், பெருங்காயம் சேர்த்து சமைக்க வேண்டும்.

திங்கள், 14 டிசம்பர், 2020

உங்களுக்கு தாய்ப்பால் குறைவாக உள்ளதா?..

திங்கள், டிசம்பர் 14, 2020

 குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவதால் ஏற்படும் நன்மைகள்! - Update News 360 |  Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News

குழந்தை பெற்ற தாய்மார்கள் பலருக்கு தாய்ப்பால் குறைவாக இருக்கின்றது. அப்படி அவர்களுக்கு தாய்ப்பால் குறைவாக இருப்பதற்கு அவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவுகளும் ஒரு காரணமாக இருக்கும். அந்த வகையில் தாய்ப்பாலை அதிகரிக்க என்ன உணவுகள் எடுத்துக்கொள்ளலாம் என வாங்க பார்க்கலாம்.

பெருஞ்சீரகம் தாய்ப்பாலை அதிகரிக்கப் பெரிதும் உதவுகிறது.

பெருஞ்சீரகம் ஈஸ்ட்ரோஜன் அளவை சீர்படுத்த உதவுகிறது. பெருஞ்சீரகம் கொண்டு நீங்கள் தேநீர் கூடத் தயாரித்துக் குடிக்கலாம். தண்ணீரில் பெருஞ்சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க விட்ட பின் அதில் சிறிதளவு தேனை விட்டுப் பருகி வந்தால் தாய்ப்பால் அதிகரிக்கும்.

வெந்தயம் தாய்ப்பாலின் அளவை அதிகரிக்க உதவும்.

வெந்தயம் உடல் சூட்டைத் தனிப்பதோடு ஈஸ்ட்ரோஜன் அளவையும் அதிகப் படுத்தும். ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை எடுத்து நீரில் நன்கு கொதிக்க விட்டு, அதில் சிறிதளவு தேன் சேர்த்துப் பருகி வந்தால் சில நாட்களிலேயே தாய்ப்பால் அளவு அதிகரிக்கும்



சனி, 5 டிசம்பர், 2020

முத்த ரகசியங்கள்...முத்தம் கொடுப்பதால் பெறும் 7 அற்புத நன்மைகள்!

சனி, டிசம்பர் 05, 2020

 

முத்தம் என்பது அன்பை வெளிக்காட்டும் ஓர் வழியாகும். முத்தம் ஒரு நல்ல உணர்வைக் கொடுப்பதோடு, நம் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது என்பது தெரியுமா? உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பதால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்குமாம். அந்தவகயில் இந்த கட்டுரையில் அதுக் குறித்து தான் பார்க்கப் போகிறோம்.

முத்தம் கொடுத்த பின், நாம் வேகமாக சுவாசிப்போம். சாதாரணமாக ஒரு நிமிடத்திற்கு 20 முறை சுவாசித்தால், முத்தம் கொடுத்த பின்பு ஒரு நிமிடத்திற்கு 60 முறை சுவாசிப்போம். நாம் அதிகமாக மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுவதன் மூலம், நுரையீரல் சம்பந்தமாக பிரச்சனைகள் தடுக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

1980 களில், ஒரு ஆய்வு, வேலைக்குச் செல்வதற்கு முன்பு தங்கள் மனைவிகளை முத்தமிடும் ஆண்கள் குறைவான கார் விபத்துக்களில் சிக்கிக்கொள்கிறார்கள் என்றும், அதிக வருமானத்துடன் இருந்ததாகவும் கண்டறிந்தது. தினமும் மனைவியை முத்தமிடுபவர்கள் நீண்ட காலம் வாழ்ந்ததாக ஆய்வுகள் கூறியது.

முதல் முத்தம் பெரும்பாலும் பதட்டத்தை உருவாக்குவதாக இருக்கும், ஆனால் சிலருக்கு, முத்தமிடுவது மிகவும் பயத்தை ஏற்படுத்தும், இது ஒரு உண்மையான பயத்தை உருவாக்குகிறது. இந்த போபியா இருப்பவர்கள் முத்தமிட எப்பொழுதும் பயப்படுவார்கள்.

வாய் பாக்டீரியாவை பரிமாறிக்கொள்வது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது, மேலும் ஒரு முத்தத்தின் போது நாம் உருவாக்கும் கூடுதல் உமிழ்நீர் பல ஆபத்தான பாக்டீரியாக்களை அழிக்கும். மேலும் இதயத்துடிப்பை அதிகரிப்பதுடன், இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.

ஒரு நிமிடம் முத்தமிடுவதால் 26 கலோரிகள் கரையும். காரணம், நீங்கள் முத்தமிடும்போது, 34 முக தசைகள் மற்றும் 112 தோரணை தசைகள் உட்பட 146 தசைகளைப் பயன்படுத்துகிறீர்கள்.

முத்தம் ஏன் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று நீங்கள் ஆர்வமாக இருக்கலாம், ஏனென்றால் நீங்கள் முத்தமிடும்போது, உங்கள் மூளை டோபமைனை வெளியிடுகிறது. போதைப்பொருள் எடுத்துக்கொள்ளும்போது வெளியிடப்படும் வேதிப்பொருளும் இதுதான்.

முத்தம் உங்கள் இரத்தத்தில் உள்ள கார்டிசோல் என்ற மன அழுத்த ஹார்மோனின் அளவைக் குறைக்க உதவுகிறது. கார்டிசோலின் குறைந்த அளவு பாதுகாப்பு உணர்வுக்கு பங்களிக்கிறது.


வியாழன், 3 டிசம்பர், 2020

இந்தியாவிடம் அரிசி வாங்கிய சீனா! 30 ஆண்டுகள் கழித்து இறக்குமதி!

வியாழன், டிசம்பர் 03, 2020

சென்ற ஆண்டில் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் பரவியது. இதையடுத்து சீனாவுடன் வர்த்தக உறவு வைத்துக்கொள்ளவே உலக நாடுகள் தயக்கம் காட்டுகின்றன. மறுபுறம் இந்திய எல்லைப் பகுதியில் சீனாவின் அத்துமீறலால் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவிலும் விரிசல் ஏற்பட்டது. சீனாவிலிருந்து மேற்கொள்ளும் இறக்குமதியை இந்திய அரசு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து வருகிறது. சீனாவைச் சேர்ந்த மொபைல் செயலிகளுக்கும் இந்தியாவில் தடை விதிக்கப்பட்டு வருகிறது.

மற்ற நாடுகளில் இருந்து சீனாவுக்கான இறக்குமதி குறைந்துள்ளதால் இந்தியா மீது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு அரிசியை இந்தியாவிலிருந்து சீனா இறக்குமதி செய்துள்ளது. மற்ற நாடுகளை விட இந்தியாவில் அரிசி விலை குறைவாக இருப்பதாலும் சீனாவின் பார்வை இந்தியா மீது திரும்பியுள்ளது. சீனா ஒவ்வொரு ஆண்டும் 40 லட்சம் டன் அளவிலான அரிசியை இறக்குமதி செய்கிறது. ஆனால் இந்தியாவில் அரிசியின் தரம் குறைவாக இருப்பதாகக் கூறி இந்திய அரிசியை இறக்குமதி செய்யாமல் இருந்தது. இந்நிலையில், வேறு வழியில்லாமல் இந்திய அரிசியை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது.

வருகிற டிசம்பர் - பிப்ரவரி மாதங்களில் மட்டும் இந்தியாவிலிருந்து 1 லட்சம் டன் அரிசியை இறக்குமதி செய்ய சீனா ஒப்பந்தம் செய்துள்ளது. டன் ஒன்றுக்கு 300 டாலர் என்ற விலையில் அரிசி ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. தாய்லாந்து, மியான்மர், பாகிஸ்தான், வியட்நாம் போன்ற நாடுகள் சீனாவுக்கான அரிசி ஏற்றுமதியைக் குறைத்துள்ள நிலையில் இந்தியாவுக்கு இந்த வாய்ப்பு வந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். விலையைப் பொறுத்தவரையில், மேற்கூறிய நாடுகளில் அரிசி விலை இந்தியாவை விட 30 டாலர் வரையில் அதிகமாக இருக்கிறது.

இந்த ஆண்டின் ஜனவரி - அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் அரிசி ஏற்றுமதி 43 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது. தற்போது சீனாவும் இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளதால் அடுத்து வரும் மாதங்களில் இந்தியாவின் அரிசி ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


புதன், 2 டிசம்பர், 2020

மாதவிடாய் முடிந்தபின் பிரவுன் கலரில் உதிரப்போக்கு ஏற்படுகிறதா? இந்த பிரச்சினையாக கூட இருக்கலாம்...

புதன், டிசம்பர் 02, 2020

மாதவிடாய் காலங்களில் இரத்த போக்கின் நிறம் மாறுபட வாய்ப்பு. பழுப்பு, ஆரஞ்சு போன்ற இரத்த போக்கை அவர்கள் பெற வாய்ப்பு உள்ளது. எனவே இதைக் கண்டு பெண்கள் பயப்படுகின்றனர். ஆனால் இந்த இரத்த போக்கு சாதாரணது தான் நீங்கள் எப்பொழுது மருத்துவரை அணுக வேண்டும் என்பது குறித்து மகப்பேறியல் மருத்துவர் கூறுகிறார்.

பெண்களின் மாதவிடாய் காலங்களில் பெண்கள் முற்றிலுமாக பல மாற்றங்களை சந்திக்கின்றனர். குறிப்பாக மாதவிடாய் இரத்த போக்குகளில் மாற்றங்களை அவர்கள் சந்தித்து வருகிறார்கள். சிலருக்கு ஆரஞ்சு நிறத்தில், பழுப்பு நிறத்தில் என இரத்த போக்கு ஏற்படுவதுண்டு. சில நேரங்களில் இந்த பழுப்பு வெளியேற்றம் முற்றிலும் சாதாரணமானது. எனவே அதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம். இது குறித்து மகப்பேறியல் மருத்துவர் நமக்கு சில விவரங்களை எடுத்துரைக்கிறார்.

மாதவிடாய் காலம்

பெண்கள் மாதவிடாய் காலங்களை அடிக்கடி சமாளிக்க வேண்டும். இந்த மாதவிடாய் காலங்களில் நம்முடைய ஹார்மோன்கள் பல மாற்றங்களுக்கு உள்ளாகும். ஆனால் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பழுப்பு நிற இரத்தத்தால் பெண்கள் பயப்படுகின்றனர். ஏன் இந்த பழுப்பு நிற வெளியேற்றம் ஏற்படுகிறது. இது சாதாரணமானதா வாங்க தெரிஞ்சுக்கலாம்.

பழுப்பு நிற வெளியேற்றம் என்றால் என்ன?

பழுப்பு நிற வெளியேற்றம் கவலைக்கு ஒரு காரணமல்ல. இது பிறப்புறுப்பில் இருந்து வெளிப்படும் பழைய இரத்தமாகும். மாதவிடாய் காலங்களில் பெண்ணுறுப்பில் இருக்கும் பழைய இரத்தமே ஆக்ஸிஜனுடன் தொடர்பு கொள்ளும்போது ஆக்ஸிஜனேற்றப்படுகிறது. நம் இரத்தத்தில் இரும்பு இருப்பதால், அது பழுப்பு நிறமாக மாறும். உங்க மாதவிடாய் கால கட்டத்தில் காணும் சிவப்பு இரத்தம் புதிய இரத்தமாகும். எனவே இதைப்பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. ஒரு வேளை இந்த பழுப்பு இரத்த வெளியேற்றமே அடிக்கடி நிகழ்ந்தால் நீங்கள் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது. உங்கள் வெளியேற்றம் வலி மற்றும் நமைச்சலுடன் இருந்தால், நீங்கள் விரைவில் உங்கள் மருத்துவரை சந்திக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

பழுப்பு வெளியேற்றத்திற்கான காரணங்கள்

உங்கள் மாதவிடாய் காலகட்டத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு அப்பால் நீங்கள் பழுப்பு நிற வெளியேற்றத்தைப் பெறுகிறீர்கள் என்றால், மன அழுத்தம் மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாக இருக்கும் என்று அவர் கூறுகிறார்.

மன அழுத்தம் நம் உடலில் ஒரு ஹார்மோன் ஏற்றத்தாழ்வை உருவாக்குகிறது, இது இந்த பழுப்பு வெளியேற்றத்திற்கும் வழிவகுக்கிறது. மன அழுத்தம் தவிர சில மருத்துவ நிலைமைகளும் பழுப்பு நிற வெளியேற்றத்திற்கு காரணமாக அமைகின்றன.

கர்ப்பம்

எண்டோமெட்ரியோமா

ஃபைப்ராய்டுகள் (கருப்பை நார்த்திசுக்கட்டிகள்)

தைராய்டு ஒழுங்கற்ற செயல்பாடு

இடுப்பு அழற்சி நோய்

மெனோபஸ்க்கு முன்

சில நேரங்களில், கடுமையான உடற்பயிற்சி கூட பழுப்பு வெளியேற்றத்திற்கு வழிவகுக்கும்.

அதற்காக பழுப்பு நிற வெளியேற்றம் ஏற்படும் போதெல்லாம் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தமல்ல. இதைப்பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.

ஒரு வேளை இது ப்ரீமெனோபாஸ் அறிகுறியாக கூட இருக்கலாம். 45 முதல் 50 வயதிற்குட்பட்ட பெண்களில் பழுப்பு நிற வெளியேற்றம் மாதவிடாய் நின்பதற்கான முந்தைய அகுறியாகும். இதன் அறிகுறியாக வெள்ளைப்படுதல், மனநிலையில் மாற்றங்கள், தூக்கமின்மை, பெண்ணுறுப்பு வறட்சி போன்றவை ஆகும்.

மருத்துவரை நீங்கள் எப்போது அணுக வேண்டும்

மருத்துவர் கருத்துப்படி ஒரு தடவை பழுப்பு நிற இரத்த போக்கு ஏற்பட்டால் அது குறித்து கவலைப்பட வேண்டாம். ஒரு வேளை உங்களுக்கு மறுபடியும் மறுபடியும் பழுப்பு நிற இரத்த போக்கு ஏற்படுகிறது என்றாலோ வலி, காய்ச்சல் மற்றும் துர்நாற்றம் இருந்தால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள்.


Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!