Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 2 டிசம்பர், 2020

மாதவிடாய் முடிந்தபின் பிரவுன் கலரில் உதிரப்போக்கு ஏற்படுகிறதா? இந்த பிரச்சினையாக கூட இருக்கலாம்...

மாதவிடாய் காலங்களில் இரத்த போக்கின் நிறம் மாறுபட வாய்ப்பு. பழுப்பு, ஆரஞ்சு போன்ற இரத்த போக்கை அவர்கள் பெற வாய்ப்பு உள்ளது. எனவே இதைக் கண்டு பெண்கள் பயப்படுகின்றனர். ஆனால் இந்த இரத்த போக்கு சாதாரணது தான் நீங்கள் எப்பொழுது மருத்துவரை அணுக வேண்டும் என்பது குறித்து மகப்பேறியல் மருத்துவர் கூறுகிறார்.

பெண்களின் மாதவிடாய் காலங்களில் பெண்கள் முற்றிலுமாக பல மாற்றங்களை சந்திக்கின்றனர். குறிப்பாக மாதவிடாய் இரத்த போக்குகளில் மாற்றங்களை அவர்கள் சந்தித்து வருகிறார்கள். சிலருக்கு ஆரஞ்சு நிறத்தில், பழுப்பு நிறத்தில் என இரத்த போக்கு ஏற்படுவதுண்டு. சில நேரங்களில் இந்த பழுப்பு வெளியேற்றம் முற்றிலும் சாதாரணமானது. எனவே அதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம். இது குறித்து மகப்பேறியல் மருத்துவர் நமக்கு சில விவரங்களை எடுத்துரைக்கிறார்.

மாதவிடாய் காலம்

பெண்கள் மாதவிடாய் காலங்களை அடிக்கடி சமாளிக்க வேண்டும். இந்த மாதவிடாய் காலங்களில் நம்முடைய ஹார்மோன்கள் பல மாற்றங்களுக்கு உள்ளாகும். ஆனால் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பழுப்பு நிற இரத்தத்தால் பெண்கள் பயப்படுகின்றனர். ஏன் இந்த பழுப்பு நிற வெளியேற்றம் ஏற்படுகிறது. இது சாதாரணமானதா வாங்க தெரிஞ்சுக்கலாம்.

பழுப்பு நிற வெளியேற்றம் என்றால் என்ன?

பழுப்பு நிற வெளியேற்றம் கவலைக்கு ஒரு காரணமல்ல. இது பிறப்புறுப்பில் இருந்து வெளிப்படும் பழைய இரத்தமாகும். மாதவிடாய் காலங்களில் பெண்ணுறுப்பில் இருக்கும் பழைய இரத்தமே ஆக்ஸிஜனுடன் தொடர்பு கொள்ளும்போது ஆக்ஸிஜனேற்றப்படுகிறது. நம் இரத்தத்தில் இரும்பு இருப்பதால், அது பழுப்பு நிறமாக மாறும். உங்க மாதவிடாய் கால கட்டத்தில் காணும் சிவப்பு இரத்தம் புதிய இரத்தமாகும். எனவே இதைப்பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. ஒரு வேளை இந்த பழுப்பு இரத்த வெளியேற்றமே அடிக்கடி நிகழ்ந்தால் நீங்கள் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது. உங்கள் வெளியேற்றம் வலி மற்றும் நமைச்சலுடன் இருந்தால், நீங்கள் விரைவில் உங்கள் மருத்துவரை சந்திக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

பழுப்பு வெளியேற்றத்திற்கான காரணங்கள்

உங்கள் மாதவிடாய் காலகட்டத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு அப்பால் நீங்கள் பழுப்பு நிற வெளியேற்றத்தைப் பெறுகிறீர்கள் என்றால், மன அழுத்தம் மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாக இருக்கும் என்று அவர் கூறுகிறார்.

மன அழுத்தம் நம் உடலில் ஒரு ஹார்மோன் ஏற்றத்தாழ்வை உருவாக்குகிறது, இது இந்த பழுப்பு வெளியேற்றத்திற்கும் வழிவகுக்கிறது. மன அழுத்தம் தவிர சில மருத்துவ நிலைமைகளும் பழுப்பு நிற வெளியேற்றத்திற்கு காரணமாக அமைகின்றன.

கர்ப்பம்

எண்டோமெட்ரியோமா

ஃபைப்ராய்டுகள் (கருப்பை நார்த்திசுக்கட்டிகள்)

தைராய்டு ஒழுங்கற்ற செயல்பாடு

இடுப்பு அழற்சி நோய்

மெனோபஸ்க்கு முன்

சில நேரங்களில், கடுமையான உடற்பயிற்சி கூட பழுப்பு வெளியேற்றத்திற்கு வழிவகுக்கும்.

அதற்காக பழுப்பு நிற வெளியேற்றம் ஏற்படும் போதெல்லாம் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தமல்ல. இதைப்பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.

ஒரு வேளை இது ப்ரீமெனோபாஸ் அறிகுறியாக கூட இருக்கலாம். 45 முதல் 50 வயதிற்குட்பட்ட பெண்களில் பழுப்பு நிற வெளியேற்றம் மாதவிடாய் நின்பதற்கான முந்தைய அகுறியாகும். இதன் அறிகுறியாக வெள்ளைப்படுதல், மனநிலையில் மாற்றங்கள், தூக்கமின்மை, பெண்ணுறுப்பு வறட்சி போன்றவை ஆகும்.

மருத்துவரை நீங்கள் எப்போது அணுக வேண்டும்

மருத்துவர் கருத்துப்படி ஒரு தடவை பழுப்பு நிற இரத்த போக்கு ஏற்பட்டால் அது குறித்து கவலைப்பட வேண்டாம். ஒரு வேளை உங்களுக்கு மறுபடியும் மறுபடியும் பழுப்பு நிற இரத்த போக்கு ஏற்படுகிறது என்றாலோ வலி, காய்ச்சல் மற்றும் துர்நாற்றம் இருந்தால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள்.


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக