Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 2 டிசம்பர், 2020

FAU-G vs PUBG: இரண்டு விளையாட்டுகளுக்கும் இடையிலான 5 வித்தியாசங்கள்

 FAU-G vs PUBG: இரண்டு விளையாட்டுகளுக்கும் இடையிலான 5 வித்தியாசங்கள்


FAU-G விளையாட்டு, PUBG மொபைல் இந்தியாவுடன் ஒப்பிடுகையில், இரண்டு விளையாட்டுகளும் மற்றொன்றிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கும்.அதில் முக்கியமான ஐந்து வித்தியாசங்களை முக்கியமாக சொல்லலாம்.  FAU-G PUBG மொபைல் இந்தியாவில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது? இதோ பட்டியலாக:

1) FAU-G ஒரு அதிரடி விளையாட்டு (action game): FAU-G ஐ PUBG மொபைல் இந்தியாவுடன் ஒப்பிடுகையில், இரண்டு விளையாட்டுகளும் ஒன்றுக்கொன்று மிகவும் வித்தியாசமானவை. FAU-G ஒரு அதிரடி விளையாட்டு, அதே நேரத்தில் PUBG மொபைல் இந்தியா அதன் உலகளாவிய பதிப்பைப் போலவே ஒரு battle royale game ஆகும். நிறுவனம், பல்வேறு சந்தர்ப்பங்களில், FAU-G PUBG மொபைலுக்கு ஒரு போட்டியாளர் அல்ல என்று கூறியுள்ளது.

2) உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட அத்தியாயங்கள் (Episodes): FAU-G இன் முதல் எபிசோட் கால்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் பொருள், PUBG மொபைலைப் போலன்றி, இது உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது என்று புரிகிறது. கால்வான் பள்ளத்தாக்கு (Galwan Valley) எல்லையில் இந்திய ராணுவத்தின் தீரத்தை எடுத்துக் காட்டும் ஒரு காட்சியை நிறுவனம் முன்பு வெளிப்படுத்தியிருந்தது நினைவிருக்கலாம். விளையாட்டில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் (weapons) குறித்து எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.

3) இந்தியா தயாரிப்பு (Made in India): பெயரை PUBG மொபைல் இந்தியா (PUB-G mobile India) என்று மாற்றியிருந்தாலும், இந்த விளையாட்டு குறிப்பாக இந்தியாவில் உருவாக்கப்படவில்லை. தென் கொரியாவை தளமாகக் கொண்ட PUBG கார்ப்பரேஷன் (PUBG Corporation) உருவாக்கிய அசல் விளையாட்டின் மாற்றியமைக்கப்பட்ட பதிப்பாகும். FAU-G, இந்திய பின்புலத்தில் இந்தியாவில் உருவாக்கப்பட்டது. பெங்களூரை தளமாகக் கொண்ட nCore கேம்ஸ் (nCore Games) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.

4) இது ஒரு புதிய விளையாட்டு: FAU-G ஒரு புதிய விளையாட்டு. PUBG மொபைல் இந்தியா (PUBG Mobile India), அசல் PUBG மொபைல் விளையாட்டின், மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். PUBG ளையாட்டின் புதிய இந்திய பதிப்பு, இந்தியர்களுக்கு மிகவும் பொருத்தமான அம்சங்களுடன் வரும்.

5) விளையாடுபவர்களின் தரவு பாதுகாப்பாக இருக்கும்: PUBG மொபைல் மீண்டும் இந்தியாவில் செயல்பட இருப்பதை அறிவிக்கும் போதே, இதை விளையாடுபவர்கள் தொடர்பான தரவுகளின் (data) தனியுரிமை மற்றும் பாதுகாப்பு ஆகியவை மிக முக்கியமான இரண்டு அம்சங்களாக இருக்கும் என்று நிறுவனம் PUBG அறிவித்துள்ளது. PUBG இன் தாய் நிறுவனமான KRAFTON சமீபத்தில் மைக்ரோசாப்ட் அஸூர் (Microsoft Azure) உடன் PUBG கேம்கள் தொடர்பான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. 

இந்த ஒப்பந்தமானது,  இந்திய அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட PUBG விளையாட்டுடன், சீனாவின் பங்கை குறைப்பதற்கான உத்தியக இருக்கும். FAU-G இன் விஷயத்தில், விளையாடுபவர்களின் தகவல்களின் தனியுரிமை ஒருபோதும் ஒரு பிரச்சனையாக இருக்காது, ஏனெனில் அந்த தரவுகள் அனைத்துமே நாட்டிற்குள்ளேயே சேமிக்கப்படும், PUBGயில் பயனர்களின் தரவுகள் வெளிநாடுகளில் சேமிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக