>>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 23 நவம்பர், 2020

    நாளெல்லாம் நடந்தாலும் நாற்பதடி செல்லாது... கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    ---------------------------------------------------------

    கொஞ்சம் சிரிங்க பாஸ்!!

    ---------------------------------------------------------

    ராமு : யானைக்கு உடம்பு சரியில்லைன்னு ஆஸ்பத்திரிக்குப் போச்சு. எறும்பு நானும் வரேன்னு சொல்லி கூடவே போச்சு. ஏன்?

    சோமு : தெரியலையே?

    ராமு : யானைக்கு ரத்தம் தேவைப்பட்டால் கொடுக்கத்தான்.

    சோமு : 😂😂

    ---------------------------------------------------------

    பாபு : உன் மனைவி யாருக்கு ஓட்டுப் போடுவாங்க?

    கோபு : நான் யாருக்கு ஓட்டுப் போடுவனோ, அவருக்குத்தான்.

    பாபு : யார் அவர்?

    கோபு : அதை இன்னும் என் மனைவி முடிவு செய்யலையே!

    பாபு : 😏😏

    ---------------------------------------------------------

    பாபு : என் தாத்தா ஐம்பத்தைந்து வயதில் மரணமடைந்தார். எனக்கு அறுபத்தைந்து வயது. இன்னும் உயிருடன் இருக்கிறேன்.

    கோபு : இரண்டுமே வருத்தப்பட வேண்டிய விஷயந்தான்.

    பாபு : 😬😬

    ---------------------------------------------------------

    குறளும், பொருளும்...!!

    ---------------------------------------------------------

    பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை

    வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

     

    பொருள் :

     

    பொருள் சேர்க்கும்போது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும் போது பகுந்து உண்பதை மேற்கொண்டால், அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.

    ---------------------------------------------------------

    விடுகதைகள்...!!

    ---------------------------------------------------------

    1. நாளெல்லாம் நடந்தாலும் நாற்பதடி செல்லாது, அந்த நாயகனுக்கோ உடல் மேல் கவசம். அது என்ன? 

     

    2. நீளவால் குதிரையின் வால் ஓடஓடக் குறையும். அது என்ன? 

     

    3. வீட்டுக்கு வந்த தொந்தியப்பன் தினமும் கரைகிறான். அவன் யார்? 

     

    4. முறையின்றித் தொட்டால், ஒட்டிக் கொண்டு உயிரை எடுப்பான். அவன் யார்?

     

    5. வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்க ஆளில்லை. அது என்ன? 

     

    விடைகள் :

    1. நத்தை 

    2. தையல் ஊசியும், நூலும்

    3. நாட்காட்டி

    4. மின்சாரம் 

    5. செருப்பு


     குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
    இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

     

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக