உரிமையாளரின் போனை எடுத்து ஆன்லைனில் ஆர்டர் செய்த குரங்கு! ஆர்டர் செய்தது என்ன தெரியுமா?
புதிய பொடியன்
திங்கள், டிசம்பர் 09, 2019
கிழக்கு
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள யான்செங் காட்டு விலங்கியல் பூங்காவில் உள்ள
பபூன் வகை குரங்கு தனது உரிமையாளரின் மொபைல் போனை எடுத்து, ஆன்லைன் ஷாப்பிங்
தளத்தில் சில பொருட்களை ஆர்டர் செய்துள்ளது. இந்த பதிவு அங்குல சிசிடிவி கேமராவில்
பதிவாகியுள்ளது. தற்பொழுது இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
குரங்கு சேட்டைக்கு பஞ்சம் இல்லை
எல்வி
மெங்மெங் என்பவர் கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள யான்செங் காட்டு
விலங்கியல் பூங்காவில் பணிபுரிந்து வருகிறார். இவரின் கட்டுப்பாட்டின் கீழ் தான்
இந்த பபூன் வகை குரங்கு சிறுவயதிலிருந்து வளர்க்கப்பட்டு வருகிறது. குரங்கு
என்றாலே சேட்டைக்குப் பஞ்சம் இருக்காது அல்லவா? அப்படித்தான் இந்த குரங்கும்,
கொஞ்சம் படு சுட்டி.
மொபைல்
போனில் ஆன்லைன் ஆர்டர் செய்த குரங்கு
எல்வி
மெங்மெங் தான் வளர்த்து வரும் பபூன் குரங்கு முன்னிலையில் தனது மொபைல் போனில் சில
பொருட்களைத் தனது ஆன்லைன் ஷாப்பிங் கார்டில் ஆட் செய்து வைத்துள்ளார். சிறிய
வேலைக்காக மொபைல் போனை அங்கே விட்டுச் சென்றிருக்கிறார். வேலையை முடித்துவிட்டு
வந்து பார்த்த பொழுது அவர் போனில் பல நோட்டிபிகேஷன்கள் வந்துள்ளதைக் கண்டு
அதிர்ந்து போயுள்ளார்.
ஆன்லைனில்
ஆர்டர் நோட்டிபிகேஷன்
அவருடைய போனிற்கு
வந்திருந்த அனைத்து நோட்டிபிகேஷன்களும் ஆன்லைனில் ஆர்டர் உறுதி செய்யப்பட்டு,
அதற்கான தொகை செலுத்தப்பட்டதற்கான கன்பர்மேஷன் மெசேஜ்கள் தான். யாரோ தன்னுடைய போனை
எடுத்து இந்த வேலையைச் செய்துள்ளனர் என்ற சந்தேகத்தில் எல்வி மெங்மெங் சிசிடிவி
வீடியோவை சோதனை செய்துள்ளார்
சிசிடிவி
வீடியோவில் சிக்கிய குரங்கு
சிசிடிவி
வீடியோகளை சோதனை செய்த போது எல்வி மெங்மெங்கின் குரங்கு தான் மொபைல் போனை எடுத்து
ஆன்லைன் ஆர்டர் செய்துள்ளது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எல்வி மெங்மெங்
போனிற்கு பாஸ்வோர்ட் லாக் இல்லாததால் குரங்கு எளிதாக மொபைலை ஓபன் செய்து
பயன்படுத்தியுள்ளது என்று கூறப்படுகிறது.
கட்டணம்
எப்படி செலுத்தப்பட்டது?
ஆன்லைன்
கார்டில் முன்பு ஆட் செய்யப்பட்டிருந்த பொருட்களுடன் சில பலசரக்கு பொருட்களைக்
குரங்கு ஆர்டர் செய்துள்ளது. எல்வி மெங்மெங்கின் கார்டு விபரங்கள் மற்றும் அனைத்து
தகவலும் போனில் முன்பே பதியப்பட்டிருந்ததால் எந்த சிக்கலும் இல்லாமல் ஆர்டர்
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறைந்த தொகை என்பதனால் சிசிவி தகவல் கேட்கப்படவில்லை
என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
குரங்குகள்
புத்திசாலிகள்
குரங்கு
ஆர்டர் செய்த பொருட்களை எல்வி மெங்மெங் கேன்சல் செய்யவுமில்லை, ஆர்டர் செய்யப்பட்ட
பொருட்கள் அவரின் வீட்டிற்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளது. குரங்குகளுக்கு அறிவு
அதிகமுள்ளது என்பதை உறுதிப்படுத்தும் இந்த செயலை மக்களுக்கு நிரூபிக்க வேண்டும்
என்று எல்வி மெங்மெங் தனது வலைத்தள பக்கத்தில் சிசிடிவி வீடியோவை பதிவிட்டுள்ளார்.
குரங்கு
கையில் பூ மாலை இல்லை ஸ்மார்ட்போன்
குரங்கு
கையில் பூ மாலை என்ற காலம் போய் குரங்கு கையில் ஸ்மார்ட்போன் என்ற கதை ஆகிப்போனது.
தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகிவருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக