Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 9 டிசம்பர், 2019

சாம்சங்:146' இன்ச், 219' இன்ச், 292' இன்ச் அளவுகளில் தி வால் டிஸ்பிளே டிவிகள் அறிமுகம்.!

கோடி ரூபாயில் சாம்சங் டிவி அறிமுகம்

சாம்சங் நிறுவனம் 'தி வால்' டிஸ்பிளே என்ற பெயரில் புதிய டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய தி வால்' டிஸ்பிளே டிவிகளின் விலையைக் கேட்டால் யாராக இருந்தாலும் வாயைப் பிளப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

கோடி ரூபாயில் சாம்சங் டிவி அறிமுகம் 

கோடி ரூபாய் செலவு செய்து கார் அல்லது பைக் வாங்கிய நிகழ்வுகளை நாம் கேட்டிருப்போம், ஆனால் முதல் முறையாகக் கோடி ரூபாய் செலவில் புதிய டிவி வாங்க இந்தியாவில் அடுத்த ஆண்டில் நிச்சயம் சுமார் 25 முதல் 30 பயனர்கள் தயார் என்று சாம்சங் இந்தியாவின் நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் எண்டர்பிரைஸ் பிசினஸின், துணைத் தலைவர் புனீத் சேத்தி தெரிவித்துள்ளார்.

புதிய இராட்சச 'தி வால்' டிஸ்ப்ளே டிவி

பெரிய திரைகளில் திரைப்படங்கள் அல்லது ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சிகளைப் பார்க்க நீங்கள் விரும்பினால், சாம்சங் வியாழக்கிழமை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய தி வால் டிஸ்ப்ளே டிவியை வாங்கலாம். இந்த புதிய டிஸ்பிளே டிவிகள் 146' இன்ச் டிஸ்பிளே, 219' இன்ச் டிஸ்பிளே மற்றும் 292' இன்ச் கொண்ட டிஸ்பிளே மாடலாக ரூ.3.5 கோடி முதல் ரூ.12 கோடி வரை

ரூ.85.52 கோடி வரை வருவாய் கிடைக்கும் 

இந்தியாவில் சுமார் 140 பில்லியனர்கள் மற்றும் 950-க்கும் மேற்பட்ட பல மல்டி மில்லியனர்களைக் இருக்கிறார்கள் என்பதனால் 'தி வால்' டிவிகள் இந்தியாவில் விற்பனையாக நிறைய வாய்ப்புள்ளது என்றும், இதன்மூலம் அடுத்த ஆண்டில் சாம்சங் நிறுவனம் சுமார் ரூ.85.52 கோடி வரை வருவாய் ஈட்டும் என்று உறுதிபட உயர் நிறுவனத்தின் நிர்வாகி கூறியுள்ளார்.

இதுவரை அனுபவித்திடாத அட்டகாசமான அனுபவம் 

குவாண்டம் பிராசஸர் ஃப்ளெக்ஸ் மற்றும் AI பிக்சர் குவாலிட்டி என்ஜின் தொழில்நுட்பம் இந்த தி வால் டிவியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பயனர்களுக்கு அட்டகாசமான, மிகத் துல்லியமான கிரிஸ்டல் க்ளியர் காட்சி அனுபவத்தைப் பெறமுடியும் என்று சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை அனுபவித்திடாத அனுபவத்தைப் பயனர்கள் அனுபவிப்பார்கள் என்று உறுதிப்பட சாம்சங் தெரிவித்துள்ளது. 

தி வால் 'டிஸ்பிளே' உண்மையில் வால் டிவி தான்

தி வால் டிவி மிக மெல்லிசான பேசல்லெஸ் டிசைனில், சுவருடன் சுவராக இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. டிவி பயன்பாட்டில் இல்லாத போது, அம்பிஎண்ட் மோடில் பயனரின் விருப்பத்திற்கு ஏற்றார் போல் புகைப்படங்கள், ஓவியங்கள் மற்றும் வீடியோகளை டிஸ்பிளே செய்துகொள்ளலாம். இதனால் தான் இந்த டிவிக்கு தி வால் 'டிஸ்பிளே' என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

65 முதல் 70 மில்லியன் டாலர் வருவாய்க்கு இலக்கு 

தி வால் டிவிகள் 2020 ஆம் ஆண்டில் சுமார் 25-30 யூனிட்டு விற்பனை செய்யப்படுமென்றும், அதனை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டில் நிச்சயம் 100 ஆக உயருமென்றும், அதற்கு அடுத்த ஆண்டன 2022 ஆம் ஆண்டில் 200 ஆக உயரும் என்றும் சேத்தி கூறியுள்ளார். இந்தியாவில் டிஸ்பிளே விற்பனை அடுத்த ஆண்டுகளில் சுமார் 65 முதல் 70 மில்லியன் டாலர் வருவாயை ஈட்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

4K முதல் 8K டெபினிஷன் தரத்தில் தி வால் டிவிகள் 

தி வால் டிவியின் 146' இன்ச் மாடல் 4K டெபினிஷன் தரத்திலும், 219' இன்ச் டிஸ்பிளே மாடல் 6K டெபினிஷன் தரத்திலும் மற்றும் இதன் 292' இன்ச் டிஸ்பிளே மாடல் டிவி 8K டெபினிஷன் தரத்திலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கோடி ரூபாய் விலை கொண்ட டிவிகளை பயனர்கள் ஆன்லைன் மூலம் வாங்க இயலாது. அதனால் இந்த டிவிகளை வாங்கப் பயனர்கள் குருகிராமில் உள்ள சாம்சங் நிர்வாக மையத்தை அணுக வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!