இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கந்த
சஷ்டி ஸ்பெஷல் : சூரபத்மனின் யுகம் கடந்த தவம்... சோதித்த சிவபெருமான்..!!
தவத்தில்
இருந்த காசிபர் கண் விழித்துப் பார்த்தபொழுது புத்திரர்கள் யாருமின்றி மாயா
மட்டும் தனியாக நின்று கொண்டிருந்தாள். மாயாவிடம் புத்திரர்கள் எங்கே? என்று
வினவியபோது மாயா நிகழ்ந்த யாவற்றையும் காசிபரிடம் எடுத்துரைத்தார். அதாவது
சுக்கிராச்சாரியாரின் ஆலோசனைப்படியே தான் இங்கு வந்ததாகவும், அசுர குலத்தை
மேம்படுத்துவதற்காக மட்டுமே நான் தங்களுடன் இணைந்ததாகவும் கூறிவிட்டு
அவ்விடத்திலிருந்து மறைந்து சென்றாள்.
அவள்
மறைந்ததும், அவள் உருவாக்கிய அழகிய அரண்மனைகள், நந்தவனம் யாவும் மறைந்தன. மோக
வயத்தால் அகப்பட்டு தான் செய்த தவறுகளால் இவ்வுலகம் அடையும் துன்பத்தை எண்ணி
மிகவும் மனம் வருந்தினார் காசிபர். அப்பொழுது அவரின் தந்தையான பிரம்மதேவர்
அவ்விடம் தோன்றி காமனின் இலக்கிற்கு எவரும் விதிவிலக்கல்ல. ஆகவே நிகழ்ந்ததை எண்ணி
மனம் வருந்தாமல் செய்த தவறுக்கான பரிகாரம் தேடுவாயாக என்று கூறினார். நீர் செய்த
இச்செயலால் விளையும் அனைத்து துன்பத்திற்கான தண்டனையை அளிக்கக்கூடியவர்
சிவபெருமான் மட்டுமே. ஆகவே அவரை எண்ணி தவம் புரிந்து தண்டனையையும், மன்னிப்பையும்
பெறுவாய் என்று கூறி மறைந்தார். தன் தந்தையின் கூற்றில் இருந்த உண்மையை உணர்ந்த
காசிபரும் தன் மனதை திடப்படுத்தி சிவபெருமானை நோக்கி தவம் புரியத் தொடங்கினார்.
அசுர
லோகத்தில் இருந்த சுக்கிராச்சாரியாரை கண்ட அசுரர்கள் அனைவரும் அவரை வணங்கி
ஆசிப்பெற்றனர். பின்பு மானிட உருவம் கொண்ட சூரபத்மன் சுக்கிராச்சாரியாரிடம் தகுந்த
ஆலோசனை பெற்று சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரியத் தொடங்கினான். காலங்கள்,
யுகங்கள் என அனைத்தையும் மறந்து சிவபெருமானை எண்ணி அசுரனான சூரபத்மன் கடுந்தவம்
புரியத் தொடங்கினான். தேவர்கள் அனைவரும் அவனின் தவத்தினை கண்டு மனதில் ஒருவிதமான
அச்சத்தை கொண்டனர். தேவர்கள் அனைவரும் இணைந்து சூரபத்மனின் தவத்தை கலைக்க முயற்சி
செய்தனர். இருப்பினும் அவர்களால் அவனது தவத்தை கலைக்க இயலவில்லை.
காலங்கள்
விரைய எம்பெருமான் வருகை இல்லாமையால் இவ்வுலகில் நான் வாழ்ந்து என்ன பயன்?... என
எண்ணி தன் முன் ஒரு யாக வேள்வியை உருவாக்கினான் சூரபத்மன். தான் உருவாக்கிய
வேள்வியில், தனது அங்கங்களை வெட்டி வேள்வி தீயில் எறிந்தான். இறுதியாக தனது
சிரத்தை வெட்டும்போது மாபெரும் பேரொளியுடன் எம்பெருமான் அவருக்கு காட்சியளித்தார்.
உன் தவத்தாலும், உன் மன உறுதியாலும் யாம் மனம் மகிழ்ந்தோம்... வேண்டும் வரத்தைக்
கேட்பாயாக... என்றார் எம்பெருமான்.
எம்பெருமானை
வணங்கி அவரிடம் 108 யுகங்கள் உயிர் வாழவும், 1008 அண்டம் அரசாளவும், இந்திர ஞாலம்
என்னும் தேரையும் வரமாக பெற்று, தான் என்றும் அழியாமல் உயிருடன் வாழ சாகாவரம்
அளிக்க வேண்டும் என்றும் வேண்டி நின்றான். சிவபெருமான் சூரபத்மனை நோக்கி உலகில்
தோன்றிய உயிர்களுக்கு பிறப்பு என்பது எவ்விதம் இருக்கின்றதோ அவ்விதம் இறப்பு
என்பது உண்டு. அதை யாராலும் மாற்ற இயலாது. இயற்கையை எவராலும் மீறி செயல்பட இயலாது
என்று கூறி இவ்வரத்தினை தவிர்த்து வேறு வரத்தை கேட்பாயாக... என்று கூறினார்.
தொடரும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக