Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 23 நவம்பர், 2020

பூனையோட மியாவ் சத்தத்தை மொழி பெயர்க்க ஓர் ஆப்!!

 



பூனையின் மியாவ் சத்தத்துக்கு என்ன பொருள் என்று கண்டு பிடிக்க ஒரு செயலி உருவாக்கப்பட்டுள்ளது. 

 

அமேசானின் அலெக்ஸா-வுக்காக வேலை செய்த முன்னாள் பொறியாளர் ஒருவர், பூனையின் மியாவ் சத்தத்துக்கு என்ன பொருள் என்று கண்டு பிடிக்க ஒரு செயலியை உருவாக்கி இருக்கிறார். அந்த செயலியின் பெயர் மியாவ் டாக் (Meow Talk).
 

இந்த மியாவ் டாக் செயலி முதலில் பூனையின் சத்தத்தை பதிவு செய்து கொண்டு, அதன் பின், அதன் பொருளைச் சொல்ல முயற்சிக்கிறது. பூனையின் உரிமையாளர்களும், பூனைகளின் சத்தத்துக்கு என்ன பொருள் என்று சொல்கிறார்கள். இதனால், இந்த செயற்கை நுண்ணறிவு மென்பொருளில் இருந்து ஒரு டேட்டா பேஸே உருவாகிக் கொண்டு இருக்கிறது.
 

இதுவரை மொத்தம் 13 சொற்கள் மட்டுமே இருக்கிறதாம். "பசிக்கிது" "சாப்பிடக் கொடுங்க" "என்னை தனியாக விடுங்கள்" என மிகச் சில சொற்கள் மட்டுமே இருக்கிறதாம். இந்த தொழில்நுட்பம், பூனையின் மியாவ் சப்தத்தை உடனடியாக மொழி மாற்றிக் கொடுக்கும், மனித குரலைக் கொண்ட, பூனையிடம், இந்த ஸ்மார்ட் காலர் வழியாகப் பேசலாம்.
 

பூனைகள் பொதுவாக, ஒரே மாதிரியான மொழியைப் பகிர்வதில்லை என்கிறது ஆராய்ச்சி. ஒவ்வொரு பூனையின் மியாவ் சத்தமும், தனித்தன்மை கொண்டதாகவும், தங்களின் உரிமையாளருக்கு என்றே தனித்துவமானதுமாகவும் இருக்கிறது.


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!