ரேடியோவில் ஆர்ஜே-வாக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் ஆர் ஜே பாலாஜி.
ஆரம்பத்தில் டபுள் மீனிங் காமெடியில் அதிகம் பயணித்த ஆர்ஜே பாலாஜி தற்போது தன்னுடைய டிராக்கை மாற்றி ஹீரோவாகி விட்டார்.
எல்கேஜி என்ற அரசியல் நையாண்டி படத்தை எடுத்து வெற்றி பெற்றதை தொடர்ந்து சமீபத்தில் நயன்தாராவுடன் மூக்குத்தி அம்மன் எனும் படத்திலும் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
ஹீரோவாக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மூக்குத்தி அம்மன் படத்தில் பணியாற்றினர் ஆர் ஜே பாலாஜி. ஆனால் அந்த படம் பெரிய அளவு ரசிகர்களை கவரவில்லை என்றே சொல்லப்படுகிறது.
என்னதான் சக்சஸ் பார்ட்டி வைத்து கொண்டாடினாலும் ரசிகர்கள் மத்தியில் படம் நினைத்த அளவு வரவேற்பை பெறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இருந்தாலும் வழக்கம் போல் மற்ற நடிகர்கள் செய்யும் அதே வேலையைத்தான் ஆர்ஜே பாலாஜியும் செய்துள்ளார். தான் நடித்த படம் சூப்பர் ஹிட் எனவும் விரைவில் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் வெளி வர அதிக வாய்ப்பு இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
பொழுதுபோக்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக