Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 16 ஜூன், 2021

பாலூட்டும் தாய்மார்கள் மறந்தும் இவற்றை சாப்பிடக் கூடாது

புதிதாக பிறந்த குழந்தை தாய்ப்பாலை மட்டுமே சார்ந்திருப்பதால், தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்கள் (Breastfeeeding Mothers) தங்களது உணவுகள் மற்றும் பானங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியமாகும். சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, தாய்ப்பால் குடிப்பது குழந்தைகளை அனைத்து விதமான நோய்களிலிருந்தும் காப்பாற்றும். 

தாய்ப்பால் கொடுக்கும் போது, ​​உடல் ஆண்டியாக்சிடெண்ட் ஹார்மோனை வெளியிடுகிறது. இது குழந்தைகளின் ஆரோக்கியத்தை நன்றாக வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், தாய் மற்றும் குழந்தையின் பிணைப்பையும் பலப்படுத்துகிறது. எனினும், இவை அனைத்தும், தாய்ப்பால் கொடுக்கும் போது தாய் சரியான உணவை உட்கொண்டால் மட்டுமே சாத்தியமாகும். 

உணவியல் நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங் கருத்துப்படி, தாய்ப்பால் கொடுக்கும் போது சில உணவுகளை உட்கொள்வது ஆரோக்கியமற்றதாக கருதப்படுகிறது. பாலூட்டும் பெண்கள் எவற்றையெல்லாம் சாப்பிடக்கூடாது என்று இங்கே பார்க்கலாம்: 

சிட்ரஸ் பழங்களை உட்கொள்வது தீங்கு விளைவிக்கும்

டாக்டர் ரஞ்சனா சிங்கின் கருத்துப்படி, வைட்டமின் சி கொண்ட சிட்ரஸ் பழங்களை (Citrus Fruits) உட்கொள்வது பாலூட்டும் பெண்களுக்கு ஏற்றதல்ல. பாலூட்டும் தாய் இந்த பழங்களை உட்கொள்ளும்போது, ​​பாலில் அமிலம் உருவாகத் தொடங்குகிறது. இந்த அமிலம் பாலுடன் குழந்தையின் உடலுக்குச் செல்கிறது, இது வயிற்று வலி, வயிற்றுப்போக்கு மற்றும் எரிச்சல் ஆகியவற்றை அதிகரிக்கிறது.

கோதுமை சாப்பிட வேண்டாம்

பாலூட்டும் தாய்மார்கள் கோதுமையால் செய்யப்படும் ரொட்டியை சாப்பிடக்கூடாது என்று டாக்டர் ரஞ்சனா சிங் கூறுகிறார். ஏனெனில் கோதுமையில் குளூடன் என்ற புரதம் உள்ளது. இது பல சமயம் பச்சிளம் குழந்தைகளுக்கு பிரச்சனையை ஏற்படுத்துகிறது. தாய்ப்பால் குடிக்கும் குழந்தையின் மலத்தில் இரத்தம் காணப்பட்டால், அது குளூடன் சகிப்பின்மை காரணமாக இருக்கலாம். மேலும், இதனால் குழந்தைகளுக்கு வயிற்று வலி மற்றும் எரிச்சலும் ஏற்படலாம். 

காபி குடிக்க வேண்டாம்

பாலூட்டும் பெண்களுக்கு காபி (Coffee) மிகவும் தீங்கு விளைவிக்கும் என்று டாக்டர் ரஞ்சனா சிங் கூறுகிறார். காபியில் காஃபின் ஏராளமாக உள்ளது. இது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதிக அளவு காஃபின் உட்கொள்வது குழந்தைகளுக்கு வயிற்று வலி மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும்.

காரமான, மசாலா கொண்ட உணவை தவிர்க்கவும் 

பாலூட்டும் பெண்கள் காரமான, மசாலா பொருட்கள் சேர்த்த உணவை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதிக காரமான உணவை சாப்பிட்டால், அந்த காரத்தன்மை பாலிலும் கலந்து குழந்தையின் மிருதுவான வயிற்றை பாதிக்கக்கூடும். வயிற்று வலி பிரச்சனையும் ஏற்படலாம். பாலூட்டும் தாய்மார்கள் மசாலா பொருட்களை உட்கொண்டால், அது தாய்க்கும் சேய்க்கும் அஜீரணத்தை உண்டு பண்ணலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக