மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதற்காக FAME II திட்டத்தின் கீழ் மானியத்தை சமீபத்தில் அரசாங்கம் (Government) அதிகரித்துள்ளது. இதன் கீழ் ஏதர் எனர்ஜியின் ஸ்கூட்டர் ஏதர் 450 எக்ஸ்-சில் சுமார் 14,500 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்த மின்சார ஸ்கூட்டரின் (Electric Scooter) முக்கிய சிறப்பம்சங்கள் பற்றி இங்கே காணலாம்.
Ather 450X-ன் அம்சங்கள்
Ather 450X-ன் எடை முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது 11 கிலோ குறைவாக உள்ளது. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால், இது 116 கி.மீ வரையிலான ரேஞ்சை அளிக்கின்றது. ஈகோ மோடில் 85 கி.மீ ரேஞ் மற்றும் ரைட் மோடில் 75 கி.மீ. ரேஞ்சை அளிக்கின்றது. Ather 450X-ல் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான பயனர் இடைமுகத்தைப் பெறலாம். மேலும், இதில் டார்க் மோட் மற்றும் புளுடூத் கனெக்டிவிடி போன்ற அம்சங்கள் கிடைக்கின்றன. இதன் மூலம் நீங்கள் இன்கமிங் கால்களை அதாவது உங்களுக்கு வரும் அழைப்புகளை ஏற்கலாம் அல்லது கட் செய்யலாம்.
பவர் மற்றும் விலை விவரங்கள்
இந்த ஸ்கூட்டர் 2.9 கிலோவாட் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இது 6 கிலோவாட் பவரை உருவாக்குகிறது, மெலும் 26 என்எம் முறுக்குவிசையையும் உருவாக்குகிறது. இந்த ஸ்கூட்டர் (Scooter) வெறும் 3.41 வினாடிகளில் 0 முதல் 40 கி.மீ வரையிலான வேகத்தை அடைய முடியும்.
இதன் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைப்புக்கு பிறகு, முன்னர் ரூ .1,46,926-க்கு விற்கப்பட்ட Ather 450X-ன் விலை தற்போது ரூ .1,32,426 ஆக குறைந்துள்ளது.
இந்த ஸ்கூட்டர்களுடன போட்டியிடும்
Ather 450X எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak) மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் போன்ற ஸ்கூட்டர்களுடன் போட்டியிடுகிறது. இந்தியாவில் தற்போது வாகன சந்தையில் மக்களிடம் பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்த ஸ்கூட்டர் நல்ல விற்பனையை கண்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக