✴ மீன ராசியின் அதிபதி குருபகவான் ஆவார். தனது வீடான மீன ராசியில் குரு ஆட்சி பெற்று செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.
✴ நல்ல கம்பீரமான தோற்றத்தையும், அழகிய தோற்ற பொலிவினையும் உடையவர்கள்.
✴ பேசுவதை காட்டிலும் செயல்பாட்டிற்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.
✴ வழிபாடுகளும், விரதங்களும் நேரம் தவறாமல் செய்யக்கூடியவர்கள்.
✴ இனப்பற்று இருப்பினும் அனைவரையும் ஒரே மாதிரியாக வழிநடத்தவும், அவர்களுக்கு உகந்த மரியாதையும் அளிக்கக்கூடியவர்கள்.
✴ திருத்தலம் சம்பந்தமான பணிகளை செய்வதில் விருப்பமும், நாட்டமும் உடையவர்கள்.
✴ சுயநலமின்றி பொது நலத்துடன் செயல்படக்கூடியவர்கள்.
✴ புத்திக்கூர்மையுடனும், எதிலும் எச்சரிக்கை உணர்வோடும் செயல்படக்கூடியவர்கள்.
✴ தொழில் வளமும் அதைச் சார்ந்த அறிவும் உடையவர்கள்.
✴ கிடைத்த அதிகாரத்தை என்றும் தவறாக உபயோகப்படுத்தமாட்டார்கள்.
✴ எதையும் நேர்மையான பாதைகளில் மட்டும் சந்திக்கக்கூடியவர்கள்.
✴ குடும்பத்தை சிறந்த முறையில் வழிநடத்தி செல்லக்கூடியவர்கள்.
✴ கூட்டுக்குடும்பமாக இருக்க விரும்புபவர்கள்.
✴ பயனற்ற செலவுகளை முற்றிலும் தவிர்க்கக்கூடியவர்கள்.
✴ ரசனையான பேச்சுகளையும், எப்போதும் மகிழ்ச்சியாகவும் இருக்க விரும்புபவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக