-------------------------------------------------------
வாய்விட்டு சிரிங்க..!!
-------------------------------------------------------
ராமு : இந்திய ஜனத்தொகை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறதே, எதனால் தெரியுமா?
சோமு : தெரியலயே...
ராமு : தீப கர்ப்பமா இருக்கிறதுனால.
சோமு : 😖😖
-------------------------------------------------------
ரமேஷ் : நம்ம தமிழ் வாத்தியாரை யாரோ அடிச்சுட்டாங்களாமே?
சுரேஷ் : ஆமாம்... யாரோ இங்கே தமிழாசிரியர் யாரு-ன்னு இவரைக் கேட்டதுக்கு அடியேன்... அடியேன்னு... சொல்லியிருக்காரு. அதான்.
ரமேஷ் : 😄😄
-------------------------------------------------------
தீபக் : ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என்னோட வாட்ச் காவேரியில விழுந்துடுச்சு. ஆனா இன்னும் ஓடிக்கிட்டிருக்கு!
தீபன் : அதே வாட்சா?
தீபக்; : இல்ல, காவேரி.
தீபன் : 😛😛
-------------------------------------------------------
பாலு : வாங்க, வாங்க!
சங்கர் : உங்கள் வீட்டில் ஒரு போர்ஷன் காலியாக இருக்காமே!
பாலு : இந்த சாக்கிலாவது என்னைப் பாக்க வந்தீங்களே!
சங்கர் : சாக்கில் வரவில்லை! ஆட்டோவில் தான் வந்தேன்!
பாலு : 😉😉
-------------------------------------------------------
சின்ன சின்ன டிப்ஸ்...!!
-------------------------------------------------------
🦎 வீட்டில் பல்லிகள் வருகை அதிகமிருந்தால் ஆங்காங்கே மயிலிறைகை போட்டு வைப்பது அவற்றின் வருகையை குறைத்து விடும். சுவற்றின்மீது கூட அலங்காரமாக ஒட்டி வைப்பது நல்ல பலனைத் தரும்.
👉 மேஜை ட்ராயரின் இரு ஓரங்களிலும் சிறிது மெழுகு அல்லது சோப்பைத் தடவினால் எப்போதும் சிரமமில்லாமல் திறந்து மூடலாம்.
இன்றைய கடி...!!
பசி தீர்க்கும் இரண்டு ஊர்கள் எது தெரியுமா?
.
.
.
.
.
பூரி, சோத்துப்பாக்கம்.😋
சீப்புக்கும், வாழைப்பழத்து தோலுக்கும் ஓர் ஒற்றுமை. அது என்ன?
.
.
.
.
.
சீப்பு தலை வாரும்... வாழைப்பழத் தோல் காலை வாரும்.😎
மெதுவடை, வடைகறி - இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
.
.
.
.
.
ஒரு நாள் வித்தியாசம்.😝
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக