நாள் - கீழ் நோக்கு நாள்
பிறை - வளர்பிறை
திதி
சுக்ல பக்ஷ பிரதமை - Apr 28 01:01 AM – Apr 28 09:11 PM
சுக்ல பக்ஷ துவிதியை - Apr 28 09:11 PM – Apr 29 05:31 PM
நட்சத்திரம்
பரணி - Apr 28 12:38 AM – Apr 28 09:37 PM
கார்த்திகை - Apr 28 09:37 PM – Apr 29 06:47 PM
கரணம்
கிமிஸ்துக்கினம் - Apr 28 01:01 AM – Apr 28 11:05 AM
பவம் - Apr 28 11:05 AM – Apr 28 09:11 PM
பாலவம் - Apr 28 09:11 PM – Apr 29 07:19 AM
யோகம்
ஆயுஷ்மான் - Apr 28 12:19 AM – Apr 28 08:02 PM
சௌபாக்யம் - Apr 28 08:02 PM – Apr 29 03:53 PM
வாரம்
திங்கட்கிழமை
சூரியன் மற்றும் சந்திரன் நேரம்
சூரியோதயம் - 6:09 AM
சூரியஸ்தமம் - 6:25 PM
சந்திரௌதயம் - Apr 28 6:14 AM
சந்திராஸ்தமனம் - Apr 28 7:07 PM
அசுபமான காலம்
இராகு - 7:41 AM – 9:13 AM
எமகண்டம் - 10:45 AM – 12:17 PM
குளிகை - 1:49 PM – 3:21 PM
துரமுஹுர்த்தம் - 12:41 PM – 01:30 PM, 03:08 PM – 03:58 PM
தியாஜ்யம் - 09:01 AM – 10:25 AM
சுபமான காலம்
அபிஜித் காலம் - 11:52 AM – 12:41 PM
அமிர்த காலம் - 05:24 PM – 06:48 PM
பிரம்மா முகூர்த்தம் - 04:32 AM – 05:20 AM
ஆனந்ததி யோகம்
சரம் Upto - 09:37 PM
திரம்
வாரசூலை
சூலம் - கிழக்கு
பரிகாரம் - தயிர்
சூர்யா ராசி
சூரியன் மேஷம் ராசியில்
சந்திர ராசி
ஏப்ரில் 29, 02:53 AM வரை மேஷம் ராசி, பின்னர் ரிஷபம்
________________________________
திங்கள் ஹோரை
________________________________
காலை
06:00 - 07:00 - சந் - சுபம்
07:00 - 08:00 - சனி - அசுபம்
08:00 - 09:00 - குரு - சுபம்
09:00 - 10:00 - செவ் - அசுபம்
10:00 - 11:00 - சூரி - அசுபம்
11:00 - 12:00 - சுக் - சுபம்
பிற்பகல்
12:00 - 01:00 - புத - சுபம்
01:00 - 02:00 - சந் - சுபம்
02:00 - 03:00 - சனி - அசுபம்
மாலை
03:00 - 04:00 - குரு - சுபம்
04:00 - 05:00 - செவ் - அசுபம்
05:00 - 06:00 - சூரி - அசுபம்
06:00 - 07:00 - சுக் - சுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
________________________________
இன்றைய ராசி பலன்கள்
________________________________
மேஷம்
முடிவுகளை எடுப்பதில் கவனம் வேண்டும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்களை மேற்கொள்வீர்கள். நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். மனதில் புதுவிதமான தேடல்கள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே பொறுமை அவசியம். கலைத்துறையில் முயற்சிகள் ஈடேறும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். வரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல் நிறம்
அஸ்வினி : கவனம் வேண்டும்.
பரணி : தேடல்கள் அதிகரிக்கும்.
கிருத்திகை : ஏற்ற இறக்கமான நாள்.
---------------------------------------
ரிஷபம்
நண்பர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். அலைபாயும் சிந்தனைகளால் சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். உயர் அதிகாரிகளின் மறைமுகமான ஒத்துழைப்பு கிடைக்கும். ஆடம்பரமான விஷயங்களில் மனம் லயக்கும். திடீர் பயணங்களால் ஒருவிதமான சோர்வு ஏற்படும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.
ரோகிணி : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : சோர்வான நாள்.
---------------------------------------
மிதுனம்
செல்வச்சேர்க்கைக்கான வாய்ப்புகள் அமையும். தந்தையின் ஆரோக்கியம் மேம்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் சாதகமாகும். வீடு மாற்றம் சார்ந்த முயற்சிகள் கைகூடும். பழைய நினைவுகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். சிற்பத்துறைகளில் சாதகமான சுழல் அமையும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் அமையும்.
திருவாதிரை : மகிழ்ச்சியான நாள்.
புனர்பூசம் : கவனம் வேண்டும்.
---------------------------------------
கடகம்
சமூகம் தொடர்பான நிகழ்வுகளால் மனதில் மாற்றம் ஏற்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். நெருக்கடியான சில பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான இடமாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். முயற்சிகளில் புதிய அனுபவம் ஏற்படும். பெருமை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்
புனர்பூசம் : மாற்றம் ஏற்படும்.
பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
ஆயில்யம் : அனுபவம் ஏற்படும்.
---------------------------------------
சிம்மம்
பிடிவாத குணத்தினை குறைத்துக் கொள்ளவும். குழந்தைகளால் மதிப்பு உயரும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். பயம் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : மதிப்பு உயரும்.
பூரம் : மேன்மை ஏற்படும்.
உத்திரம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
---------------------------------------
கன்னி
புதிய இடங்களுக்கு சென்று வருவதற்கான முயற்சிகள் மேம்படும். மனதளவில் சிறு சிறு குழப்பங்கள் உண்டாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். உணவு சார்ந்த விஷயங்களில் சற்று கவனத்தோடு இருக்க வேண்டும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் பொறுமை வேண்டும். தாமதம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
உத்திரம் : முயற்சிகள் மேம்படும்.
அஸ்தம் : கவனம் வேண்டும்.
சித்திரை : பொறுமையை கடைபிடிக்கவும்.
---------------------------------------
துலாம்
சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். வருமானத்தினை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் முதலீடுகள் உயரும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்
சித்திரை : எண்ணங்கள் ஈடேறும்.
சுவாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
விசாகம் : முதலீடுகள் உயரும்.
---------------------------------------
விருச்சிகம்
வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். பேச்சுகளில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் விலகும். பிடிவாதப் போக்கை குறைத்து கொள்ளவும். இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். பொதுகாரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பரிசு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்
விசாகம் : முன்னேற்றம் ஏற்படும்.
அனுஷம் : இன்னல்கள் விலகும்.
கேட்டை : ஈடுபாடு உண்டாகும்.
---------------------------------------
தனுசு
வாகனம் வசதிகள் மேம்படும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். பொன், பொருட்சேர்க்கை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை நிறம்
மூலம் : வசதிகள் மேம்படும்.
பூராடம் : அனுபவம் வெளிப்படும்.
உத்திராடம் : சூட்சுமங்களை அறிவீர்கள்.
---------------------------------------
மகரம்
முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு ஏற்படும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் உண்டாகும். தள்ளிப்போன சில காரியங்கள் கைகூடும். அதிரடி மாற்றங்களால் லாபத்தை மேம்படுவீர்கள். கடன் பற்றிய சிந்தனைகள் ஏற்படும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆரோக்கியத்தில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்
உத்திராடம் : சந்திப்பு ஏற்படும்.
திருவோணம் : லாபம் மேம்படும்.
அவிட்டம் : மந்தத்தன்மை விலகும்.
---------------------------------------
கும்பம்
கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பணப்புழக்கம் சூழலுக்கு ஏற்ப சாதகமாக இருக்கும். நீண்ட தூரப் பயணம் சார்ந்த எண்ணங்கள் கைகூடும். ரகசியமான சில முதலீடுகள் அதிகரிக்கும். உடன் இருப்பவர்களைப் பற்றிய புரிதல்கள் உண்டாகும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : பிரச்சனைகள் குறையும்.
சதயம் : சாதகமான நாள்.
பூரட்டாதி : புரிதல்கள் உண்டாகும்.
---------------------------------------
மீனம்
நினைத்த பணிகளில் தாமதம் உண்டாகும். குடும்பத்தினருடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். கூட்டாளிகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. பொன், பொருட்சேர்க்கை உண்டாகும். கல்விப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். வாக்கு வன்மையால் மேன்மை உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்
பூரட்டாதி : தாமதம் உண்டாகும்.
உத்திரட்டாதி : அனுசரித்து செல்லவும்.
ரேவதி : மேன்மை உண்டாகும்.
---------------------------------------
ஆன்மிகமும் - ஜோதிடமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக