Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 5 மார்ச், 2020

திரௌபதியின் பிரார்த்தனை, காப்பாற்றும் கண்ணன்...!

 ர்ணன், அடிமைகளாகிவிட்ட இந்தப் பாண்டவர்கள் உனக்கு எஜமானர்கள் அல்ல. திருதராஷ்டிர புத்திரர்களே எஜமானர்கள் எனக் கூறினான். அதன் பிறகு துரியோதனன் பாண்டவர்களைப் பார்த்து, அடிமையாகிவிட்ட இவர்களுக்கு எதற்கு அஸ்திரங்கள்? அஸ்திரங்களை கழற்றி எரியுங்கள் என்றான். பாண்டவர்கள் அணிந்திருந்த அஸ்திரங்கள் அகற்றப்பட்டது. அதன் பிறகு துரியோதனன் தன் தம்பி துச்சாதனனை பார்த்து, துச்சாதனா! இந்த தாதியின் துயிலை உரி எனக் கூறினான். இதைக் கேட்டு அவையில் இருந்தவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தலை குனிந்து நின்றனர். திரௌபதி, தன்னை இத்துயரத்தில் இருந்து காப்பாற்றும்படி அனைவரிடமும் வேண்டிக் கொண்டாள்.

 ஆனால் யாரும் முன்வரவில்லை. துச்சாதனன், திரௌபதியின் உடையைக் கையில் எடுத்தான். திரௌபதி அவையில் இருந்தோரை பார்த்து, நீங்கள் யாரும் என்னை காப்பாற்ற வேண்டாம். என்னை காப்பாற்ற நிச்சயம் வாசுதேவன் வருவார் எனக் கூறினாள். அதன்பின் திரௌபதி தன் இரு கைகளைக்கூப்பி கண்ணனை மனதார வேண்டினாள். துச்சாதனன் பாஞ்சாலியின் துகிலை உரிய ஆரம்பித்தான். திரௌபதி, கண்ணா! கோவிந்தா! உன்னை நான் சரணடைகிறேன். என் மானத்தை காத்து அருள்புரிய வேண்டும் என வேண்டினாள். திரௌபதிக்கு கண்ணனின் அருள் கிடைத்தது. துச்சாதனன், திரௌபதியின் துயிலை உரிய உரிய அவளின் சிறு அங்கமும் தெரியாமல் கிருஷ்ணன் காப்பாற்றினார்.

 திரௌபதியின் துயில் உரிய உரிய வளர்ந்துக் கொண்டே போனது. கடைசியில் துச்சாதனன் திரௌபதியின் துயிலை உரிய முடியாமல் மயக்கம் அடைந்தான். இதைப்பார்த்து அங்கிருந்தவர்கள் வியப்படைந்தனர். துரியோதனன் கோபம் அடைந்தான். அதன் பிறகு தனக்கு யாரும் உதவ முன்வராததை எண்ணி திரௌபதி அழுதாள். அவமானத்தால் பொங்கி எழுந்த திரௌபதி, துச்சாதனனின் ரத்தத்தை என் தலையில் நனைக்கும் வரை, நான் என் கூந்தலை முடியமாட்டேன். இது என் சபதம் எனக் கூறினாள். திரௌபதியின் இந்த சபதத்தைக் கண்டு அவையில் இருந்தோர் அனைவரும் கதிகலங்கினர்.

 பீமன் கோபங்கொண்டு எழுந்தான். விண்ணவர் மேல் ஆணை, கண்ணன் மேல் ஆணை. திரௌபதியை என் தொடையில் வந்து அமரு எனக் கூறிய துரியோதனனை போரில் அவனின் தொடையை கிழித்து உயிரை எடுப்பேன். திரௌபதியின் துயிலை உரித்த துச்சாதனனின் தோளை பிளப்பேன். இது என் சபதம் என்றான். அர்ஜூனன் எழுந்து, இங்கு தர்மம் இன்றி நடந்துக் கொண்ட கர்ணனை போரில் கொல்வேன். இது கண்ணன் மீதும், திரௌபதி மீதும், காண்டீபன் என்னும் என் வில் மீதும் ஆணை எனக் கூறி சபதம் செய்தான். நகுலன் கோபத்துடன் எழுந்து, நான் போரில் சகுனியின் குலம் அழியும் வகையில் அவனின் மகன் உலூகனை கொல்வேன் என்றான். அடுத்து சகாதேவன் கோபத்துடன் எழுந்து, நான் போரில் சகுனியை கொல்வேன் என உறுதிக் கொண்டான்.

 பாண்டவர்களின் இந்த சபதத்தை கேட்டு திருதிராஷ்டிரன் நடுநடுங்கி போனான். திரௌபதியை பார்த்து, மகளே! என் பிள்ளைகள் உங்களுக்கு செய்ய கூடாத தீச்செயல்களை செய்து விட்டார்கள். நீ அவர்களை மன்னித்து விடு. நீங்கள் தோற்றவற்றை உங்களுக்கே திருப்பி கொடுத்து விடுகிறேன். நீங்கள் அனைத்தையும் பெற்றுக் கொண்டு இந்திரப்பிரஸ்த்தம் செல்லுங்கள் என்றார். துரியோதனன் தந்தையின் முடிவைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான். பாண்டவர்கள் திரும்பிச் சென்றால் நிச்சயம் என்னை கொல்ல திரும்பி வருவார்கள் என யோசித்தான். திரௌபதி, பாண்டவர்கள் அன்புக்கு மட்டுமே அடிமை எனக் கூறி புறப்பட முற்பட்டாள்.

 அப்பொழுது துரியோதனன், தருமனே! நீ இழந்தவற்றை மீட்டுக் கொள்ள உனக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் தருகிறேன். நீ இழந்த உன் தம்பிகளையும், திரௌபதியையும் மீட்டுக் கொள்ளலாம். அவ்வாறு மீட்டு விட்டால் நீ 12 ஆண்டுகாலம் வனவாசம் செல்ல வேண்டும். அதிலும் ஒரு வருடம் நீங்கள் யார் கண்ணிலும் படாமல் அஞ்ஞான வாசம் செய்ய வேண்டும். ஆக மொத்தம் நீங்கள் 13 வருடம் வனவாசம் செல்ல வேண்டும். அவ்வாறு நீ மறுபடியும் தோற்று விட்டால் நீங்கள் அனைவரும் என் அடிமை எனக் கூறினான். திரௌபதி இதிலிருந்து பின்வாங்க விரும்பவில்லை. யுதிஷ்டிரனை பார்த்து, தர்மரே! தாங்கள் கலந்து கொண்டு எங்களை மீட்டு வாருங்கள். கண்ணன் உங்களுக்கு துணையாக இருப்பார். கோவிந்தனை மனதார நினைத்துக் கொள்ளுங்கள் என்றாள்.

 அதன் பிறகு, யுதிஷ்டிரன் துரியோதனனிடம் தான் மறுபடியும் விளையாட சம்மதித்தான். இதைக்கேட்ட துரியோதனன், இவர்கள் நிச்சயம் தோற்று என் அடிமைகள் ஆக போகின்றார்கள் என நினைத்துக் கொண்டான். சகுனி தாயத்தை உருட்டினான். யுதிஷ்டிரன், தாயத்தை உருட்டும் முன் கண்ணனனை மனதார நினைத்து தாயத்தை உருட்டினான். யுதிஷ்டிரன் வென்றான். துரியோதனனை பார்த்து, நான் வென்றுவிட்டேன். இனி நாங்கள் யாரும் உனக்கு அடிமை இல்லை எனக் கூறினான். இருந்தாலும் பாண்டவர்கள் 13 ஆண்டு வனவாசம் செல்வதை நினைத்து மகிழ்ந்தான் துரியோதனன்.

அதன்பிறகு பாண்டவர்கள், அனைவரிடத்திலும் விடைப்பெற்று திரௌபதியுடன் வனம் செல்ல புறப்பட்டனர்.

தொடரும்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக