Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 5 மார்ச், 2020

இராமர் அரக்கர்களிடம் யுத்தம் புரிதல்


ரன் தன் பதினான்கு சேனாதிபதிகளுக்கும், உடனே சென்று அந்த இருவரையும் அவர்களுடன் இருக்கும் அப்பெண்ணையும் அழைத்து வாருங்கள் என கட்டளையிட்டான். கரனின் சேனாதிபதிகளை அழைத்துக் கொண்டு சூர்ப்பனகை இராமருடைய பர்ணசாலைக்கு வந்தாள். அவர்கள் தான் என்னை இக்கதிக்கு ஆளாக்கியவர்கள். அவர்களை உடனே கொன்று விடுங்கள் என்றாள். இராமர், சூர்ப்பனகை மற்றும் அவளின் சேனாதிபதிகளை பார்த்த உடன் அவளின் நோக்கத்தை அறிந்து கொண்டார். உடனே, இலட்சுமணரிடம், இலட்சுமணா! சீதையை சிறிது நேரம் பத்திரமாக பார்த்துக் கொள். இவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். இராமர் தன்னுடைய வில்லை ஏந்தி சேனாதிபதிகளை பார்த்து, முனிவர்களின் வேண்டுகோளின்படி அரக்கர்களை அழிக்கவே இந்த வனத்தில் நாங்கள் குடியுள்ளோம். உங்கள் உயிர் மீது ஆசை இருந்தால் உடனே தப்பி ஓடுங்கள். இல்லையேல் உங்கள் யாவரையும் விடமாட்டேன் என எச்சரித்தார்.

சேனாதிபதிகளும் தங்கள் பலத்தை பற்றி பலவாறாக பேசினார்கள். யுத்தம் ஆரம்பமானது. சிறிது நேரத்தில் இராமருடைய பாணங்களுக்கு அரக்கர்கள் இரையாகி மாண்டு போனார்கள். மறுபடியும் சூர்ப்பனகை மிகுந்த கோபத்துடன் கரனிடம் சென்று அழுது புரண்டாள். கரனுக்கு ஒன்றும் புரியவில்லை. நீ ஏன் அழுகிறாய். நான் தான் பதினான்கு சேனாதிபதிகளையும் அனுப்பியுள்ளேன். அவர்கள் இந்நேரம் காரியத்தை முடித்திருப்பார்கள். நீ அழாதே! எனக் கூறினான். அவள் உடனே எழுந்து கண்களை துடைத்து கொண்டு, நீ அனுப்பிய பதினான்கு சேனாதிபதிகளும் அங்கு பிணமாக கிடக்கிறார்கள். இராமனுடைய வீரத்தால் சேனாதிபதிகள் அனைவரும் மாண்டார்கள். இராமனின் வீரத்தை உனக்கு எப்படி சொல்வது என்று தெரியவில்லை? உன் ராட்ஷச குலத்தை காப்பாற்ற வேண்டுமென்றால் உடனே சென்று இராமனிடம் யுத்தம் செய்.

நீ பலசாலி என்று அனைவரிடமும் சொல்வதால் ஒரு பயனும் இல்லை. உடனே இராமனிடம் சென்று போரிட்டு உன் வீரத்தையும், தீரத்தையும் காண்பி. இல்லையேல் அவன் உன் குலத்தை நிச்சயம் அழிப்பான் என்றாள். தன் சபையில் சூர்ப்பனகை இப்படி தன்னை இழிவுபடுத்தி பேசுவதை கரனால் பொறுத்து கொள்ள முடியவில்லை. சூர்ப்பனகை! நீ இந்த அற்பனை கண்டு இவ்வளவு அஞ்சி பேசலாமா? அவனைக் கொல்ல எனக்கு ஒரு நிமிடம் போதும். அவனை அழித்து அவனின் இரத்தத்தை உனக்கு தருகிறேன். கரன் அங்கிருந்து செல்ல முற்பட்டான். உடனே சூர்ப்பனகை! நீ தனியாக போகாதே உன்னுடன் சேனையை அழைத்துக் கொண்டு செல் என்றாள்.

கரனும் அப்படியே கட்டளையிட்டான். தூஷணன் தலைமையில் ஆயுதங்களுடன் பெரிய சேனை சென்றது. அவர்களுக்கு பின்னால் கரனும் தேரில் சென்றான். இவர்கள் போகும் வழியில் பல அபசகுணங்களை கண்டார்கள். அதற்கு கரன், இந்த அபசகுனங்களை கண்டு யாரும் அஞ்ச வேண்டாம். நாம் சீக்கிரம் அவர்களை கொன்று விட்டு திரும்புவோம். நான் இதுவரையில் எந்த யுத்தத்திலும் தோல்வி அடைந்ததில்லை என்று கூறினான். கரனின் இவ்வார்த்தைகளை கேட்டவுடன் சேனைகள் கம்பீரமாக சென்றன. பர்ணசாலையில் இராமருக்கும், இலட்சுமணக்கும் சேனை வரும் ஓசை கேட்டது. யுத்தத்திற்காக சேனை வந்துக் கொண்டு இருக்கிறது என்பதை அறிந்த இராமர் யுத்தத்திற்கு தயாரானார். உடனே இலட்சுமணரிடம், இலட்சுமணா! சேனையின் ஓசையை கேட்டாயா! இன்று யுத்தம் நடப்பது நிச்சயம். ராட்ஷச அரக்கர்களும் அழிந்து போவது நிச்சயம் எனக் கூறினார்.

இலட்சுமணா! நீ ஆயுதங்கள் ஏந்தி கவசம் அணிந்து சீதையை அழைத்து போய் மலை குகையில் பத்திரமாக பாதுகாப்பாய். நான் இங்கு இருந்து எதிர் வரும் ராட்ஷச சேனையை பார்த்துக் கொள்கிறேன். நீ தாமதிக்காமல் சீதையை அழைத்துச் செல் எனக் கூறினார். பிறகு இராமரும் கவசம் அணிந்து யுத்தத்திற்கு தயாரானார். இலட்சுமணரும் சீதையை அழைத்துக் கொண்டு மலை குகைக்கு சென்றார்.

தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக