Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 28 அக்டோபர், 2020

கையும் இல்லாமல், காலும் இல்லாமல் ஓடிக்கொண்டே இருப்பவன் யார்?... ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

--------------------------------------------------------

சிரிக்கலாம் வாங்க...!!

--------------------------------------------------------

மனைவி : எதுக்குங்க ஸ்பூனை பாதியா உடைச்சீங்க?

கணவன் : டாக்டர்தான் அரை ஸ்பூன் மருந்து சாப்பிடச் சொன்னாரு.

மனைவி : 😐😐

--------------------------------------------------------

சுரேஷ் : பசங்களெல்லாம் பயப்படுற மாதிரி சினிமாப்படத்துக்கு ஒரு பெயர் சொல்லு பாக்கலாம்...

ரமேஷ் : 'காலையில் எக்சாம் மாலையில் ரிசல்ட்"...

சுரேஷ் : 😝😝

--------------------------------------------------------

மனைவி : நமக்கு கல்யாணம் முடிஞ்சு இன்னியோட 10 வருஷம் ஆகுதுங்க.

கணவன் : எனக்கு மறந்து போச்சு.

மனைவி : இது கூடவா?

கணவன் : நல்ல விஷயங்கள் மட்டும் தான் எனக்கு நினைவில் இருக்கும்.

மனைவி : 😏😏

--------------------------------------------------------

பொன்மொழிகள்...!!

--------------------------------------------------------

எதை எல்லாம் நடக்கக்கூடாது என்று எண்ணுகிறாயோ...

அதெல்லாம் நடப்பது தான் வாழ்க்கை!

நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்னென்ன தோன்றுகிறதோ

அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும்.

நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன...

ஆனால், அனுபவமோ தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது.

சிக்கல்கள் என்பவை, ஓடும் ரயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை.

அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.

அவற்றைக் கடந்து சென்றால் அவை சிறிதாகிவிடும்.

இதுதான் வாழ்க்கை!

--------------------------------------------------------

குறளும், பொருளும்...!!

--------------------------------------------------------

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது.

பொருள் :

தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்.

--------------------------------------------------------

விடுகதைகள்...!!

--------------------------------------------------------

1. கூரை வீட்டைப் பிரித்தால் ஓட்டு வீடு. ஓட்டு வீட்டுக்குள்ளே வெள்ளை மாளிகை. வெள்ளை மாளிகையின் நடுவே ஒரு குளம். அது என்ன?

2. கையும் இல்லை, காலும் இல்லை. ஓடிக்கொண்டே இருப்பேன். நான் யார்?

3. பச்சைப் பேருந்துக்குள் சிவப்பு பயணிகள். அவர்கள் அணியும் தொப்பி கறுப்பு. அது என்ன?

4. எங்கு சென்றாலும் தொடர்ந்து வருவான். அது யார்?

விடைகள் :

1. தேங்காய்

2. கடிகாரம்

3. தர்பூசணி

4. நிழல்

குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 

இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக